“நட்பு” முறியப் போவதற்கான சில அறிகுறிகள்!!!
Wed Apr 17, 2013 2:18 am
“நட்பு” முறியப் போவதற்கான சில அறிகுறிகள்!!!
(இது எப்படி இருக்கு?)
உறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்புறவு தான். அத்தகைய நட்பு இல்லாமல்
எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால்,
உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது உணர்ச்சியை, கஷ்டத்தை
யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல்
இருக்க முடியாது. “தோள் கொடுப்பான் நண்பன்” என்று சும்மாவா சொன்னாங்க…
ஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள்
மட்டும் பிரிந்து செல்ல மாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில், அதனை
போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். மேலும் இந்த
உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள்.
அத்தகையவர்களின் மீது நிச்சயம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம்
இருக்கும்.
இவ்வுலகில் எந்த ஒரு உறவிற்கும் பிரிவு இருக்கும்.
ஆனால் நட்புக்கு பிரிவு இருக்காது என்று நினைக்கிறோம். ஆனால் அத்தகைய
உறவிலும் பிரிவு என்ற ஒன்று இருக்கிறது. அவ்வாறு நெருங்கிய நண்பர்கள் நம்மை
விட்டு விலக நினைக்கிறார்கள் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அது என்ன
அறிகுறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* எந்த ஒரு
நண்பர் எந்த நேரத்திலும் தம்முடன் இருக்கும் போது, வேலை இருக்கிறது என்று
அடிக்கடி சொல்வதைக் கொண்டு, அவர் தம்மை விட்டு பிரிய நினைக்கிறார் என்று
புரிந்து கொள்ளலாம். சிலர் இந்த விலகலுக்கான காரணத்தை எளிதில் புரிந்து
கொள்வார்கள்.
* இதுவரை நண்பனாக இருந்து, எப்போதும் தனக்கே
முக்கியத்துவம் கொடுத்து பேசியவர்கள், திடீரென்று அதனை தவிர்த்து, வேறு
ஏதாவதொன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அதனைக் கொண்டும் அவர்களின்
பிரிதலுக்கான எண்ணத்தை புரிந்து கொள்ளலாம்.
* ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு வகையில் தினம் தினம் ஒரு நண்பர்கள் கிடைப்பார்கள். அப்போது அவர்கள்
வெளியே செல்லும் போது தம்மை அழைக்காமல், அடிக்கடி புது நண்பர்களுடன்
தனியாக சென்றாலும், அதனைக் கொண்டும் அவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று
புரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் அவசரப்பட்டு நண்பர்களை தவறாக
நினைக்காமல், அவர்களுடன் மனம் விட்டு பேசி தெரிந்துக் கொண்டு, பின் எதையும்
நிர்ணயிக்க வேண்டும்.
* உறவுகளுக்குள் பெரும்பாலும் பிரச்சனை
ஏற்படுவதற்கு பொறாமையும் ஒரு காரணம். அத்தகைய பொறாமையானது புனிதமான
நட்புறவைக் கூட பிரித்துவிடும். அதிலும் பொறாமை, துணை அல்லது வேறு ஏதாவது
புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டால் ஏற்படுவது தான். இத்தகைய பொறாமை
வெளிப்படையாக தெரியாது. ஆனால் அவர்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்களில்
நன்கு புலப்படும். இதை வைத்தும் நட்புறவு முறியப் போகிறது என்று தெரிந்து
கொள்ளலாம்.
நன்றி: என் இனிய
Permissions in this forum:
You cannot reply to topics in this forum