பூமியின் அமைப்பு - அறிந்து கொள்வோம்
Wed Apr 17, 2013 1:17 am
இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:
1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29028 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. கடலில் மிகவும் ஆழம் கூடிய இடம் “மரியானா டிரெஞ்ச்” அதன் ஆழம் சுமார் ஆறே முக்கால் மைல். 35,808 அடி
7. இப்போது நாம் காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின்
பொருக்கு போன்ற பகுதி. இந்தப் பொறுக்கு சுமார் 25 மைல் வரை தான் உள்ளது.
8. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
9. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும்
இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக்
கொண்டிருக்கும்.
10. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும். (அதாவது 365
நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.)
16. சந்திரம் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சந்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம்
நிலப்பரப்பு. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 வீதம் நீர் - கடல்கள்.
மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum