அறிந்து கொள்வோம், ஆனந்தமடைவோம்
Thu Dec 31, 2015 8:52 am
அறிந்து கொள்வோம், ஆனந்தமடைவோம்:
கிறிஸ்தவம் என்பது மனிதன் தோற்றுவித்த மதமாக இருந்தால், எதற்கு இத்தனை கடின உபதேசங்கள், விளங்கிக் கொள்ளச் சிரமமான வேதாகமப் பகுதிகள்? ஏன் இத்தனை மொழி பெயர்ப்புகள், வியாக்கியானங்கள், விளக்க உரைகள். வெறும் புத்தகத்தில் இருந்து கற்பிக்கப்படும் ஒரு மார்க்கமானால், அதை வாசிக்க வாசிக்க ஏன் இருதயம் கொளுந்து விட்டு எரிகிறது? ஏன் இனம் புரியாத சந்தோஷம் நம்மை ஆட்கொள்ளவேண்டும்?
ஒருவேளை மனிதன் எழுதி இருந்தால், திருக்குறளைப் போல் ஒரு வாழ்வியல் நூலாக மாத்திரம் இருந்திருக்குமே? எந்தச் சந்தேகமும் யாருக்கும் எழாமல், கேள்வியே கேட்க முடியாமல், சில அறிவர்கள் கூடி அதை மாற்றி இருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யவில்லை, அல்லது செய்ய முடியவில்லை?
இயேசுக்கிறிஸ்து உன்னத வாழ்விற்கு ஏன் அழைத்தார்? ஒரு கிறிஸ்தவன் எந்தச் சமரசமும் செய்து கொண்டு தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மாத்திரம் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு நல்லவனாக மட்டும் வாழ அழைக்காமல், எந்த ஒரு குறைபாடும் சொல்ல இயலாத சமரசமற்ற ஒரு “பரித்த” வாழ்வை மட்டுமே வாழ அவர் ஏன் அழைக்க வேண்டும்.
இறைவன் மிகப் பெரியவனாக மட்டுமே இருந்திருந்தால், அவர் ஏன் தன்னைத் தான் தாழ்த்தி, தன் சொந்த இரத்தத்தைச் சிந்த, தான் படைத்த மனிதனுக்காக இரங்கி, இறங்கி வரவேண்டும், பாடு படவேண்டும்?
அவர் விரும்பும் பரிசுத்த வாழ்வை இவ்வுலகில் வாழவே முடியாது என்ற நிலையை மாற்றி, அவனை “நீயாக முயன்று கொள்” என்று அனுப்பி விடாமல், மனிதனின் பாவத்தைக் கழுவி அவனை தன்னுடன் நிரந்தர வாழ்வை வாழ அழைக்க வேண்டும்?
கிறிஸ்தவம் மனிதனால் தோற்றுவிக்கபட்டதல்ல, மனிதனுக்காக அருளப்பட்டது!
-
Ben Ny
Permissions in this forum:
You cannot reply to topics in this forum