உடல் எடையை குறைக்கும் உணவுகள்
Mon Apr 01, 2013 9:58 pm
எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஈஸியான விஷயம் அல்ல.
யாருக்கு உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் சற்று கவனமாக இருக்க
வேண்டும்.
அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.
அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி உடலில் செரிமானம் குறைந்து குடலானது சுருங்கிவிடும்.
ஆகவே ஆரோக்கியமான உடலை அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும்.
மேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஒல்லியாக இருக்கும்.
பெர்ரிஸ்: உடல் எடையை குறைக்க பெர்ரிப் பழங்கள் மிகவும் சிறந்தவை.
ஏனெனில் அந்த பழத்தில் சுவையைத் தரும் ஆன்தோசையனின்கள், உடல் எடை கூடாமல்
பார்த்துக் கொள்கிறது.
இதற்காக ஒரு எலியின் மீது ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த எலி எவ்வளவு தான் கொழுப்பு நிறைந்த உணவுகளை
உண்டாலும், இந்த பழத்தை சாப்பிட்டதால் அதன் எடை கூடவில்லை என்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ஆன்தோசையனின்கள் தான்.
ஆகவே எத்தகைய உணவுகளை உண்டாலும், இந்த பெர்ரி வகையைச் சேர்ந்த
ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி மற்றும் திராட்சை போன்றவற்றை தவறாமல் சாப்பிட
வேண்டும். அதிலும் இதனை ஜூஸ் அல்லது சாலட் போன்றும் செய்து சாப்பிடலாம்.
ஆப்பிள்: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பது
மருத்துவர்களின் ஆலோசனை. ஏனெனில் ஆப்பிளில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள்
இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
மேலும்
உடலில் இரத்தம் நன்கு ஊறும். அதிலும் ஆப்பிளில் குறைந்த அளவு கொழுப்பு
மற்றும் கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் உடலில்
இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கிறது.
இதனால் உடலில் அதிகமான அளவு கொழுப்புகள் சேராமல் இருக்கும்.
தக்காளி: சமையலில் பயன்படுத்தும் தக்காளி உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு உடலை சுத்தம் செய்கிறது.
அதிலும் தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த
அளவு கொழுப்பு, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் இருக்கிறது.
ஆகவே உடல் ஸ்லிம்மாக தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். ஆனால் இந்த
தக்காளியை சமையலில் சேர்த்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவதே மிகவும்
சிறந்தது. ஏனெனில் சமைத்து சாப்பிட்டால் தக்காளியில் இருக்கும்
ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.
சொக்லேட்: சொக்லேட் என்று
சொன்னதுமே அனைவருக்குமே ஒரு ஆசை ஏற்படும். அத்தகைய சொக்லேட்டில் டார்க்
சொக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, சருமமும் மென்மையாக மின்னும்.
நிறைய ஆராய்ச்சியில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும்
கொக்கோ உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு உடலை பிட்டாகவும் வைக்கும்.
அதுமட்டுமல்லாமல் சொக்லேட் இதய நோயைத் தடுப்பதோடு பசியையும்
கட்டுப்படுத்தும். வேண்டுமென்றால் பசி ஏற்படும் போது சிறிது டார்க்
சொக்லேட் சாப்பிட்டுப் பாருங்கள், சுவையாக இருப்பதோடு, பசி கட்டுப்பட்டு
உடல் எடையும் கூடாமல் இருக்கும்.
ஆகவே இத்தகைய உணவுகளையெல்லாம்
தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாகாமல் உடலும் பிட்டாக,
சருமமும் மென்மையாக அழகாக இருக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum