கொழுப்பை வற்றவைத்து, உடல் எடையை குறைக்கும் பட்டை இஞ்சி டீ!
Sat Oct 24, 2015 9:20 pm
உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி, பலவற்றை முயற்சித்து தோல்வியில் தொவண்டு போனவர்கள் பலர். அப்படி எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி டீயில் தேன் கலந்தது குடியுங்கள். கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன், பட்டை, இஞ்சியில் உள்ளது. அதனால் தான் அசைவ உணவுகளுக்கு பட்டை சேர்கின்றனர்,
இது மேலும் ஜீரண சக்தியை துண்டுகிறது. இஞ்சி மற்றும் பட்டை உடல் எடையை விரைவில் குறைக்கும் மேலும் உடல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள் விரைவில் உடலில் மாற்றம் ஏற்படும்.
தேவையான பொருட்கள்
பட்டை – 2
இஞ்சி – சிறிய துண்டு
ப்ளாக் டீ இலைகள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 2 துண்டுகள்
புதினா – 5-6 இலைகள்
தேன் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum