தஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது
Mon Apr 01, 2013 3:25 pm
தஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது
தஞ்சை பல விஷயங்களுக்கும் புகழ் பெற்றது. அதில் மறக்க முடியாத, அனைவரும் அறிந்த ஒன்று - தஞ்சை தலையாட்டி பொம்மை !
தஞ்சையில் பெரிய கோவிலுக்கு வெளியிலும் பேருந்து நிலையம் அருகே சில கடைகளிலும் இத்தகைய தலையாட்டி பொம்மை கிடைக்கும்.
இந்த பொம்மையில் தான் எத்தனை எத்தனை வகை ! பல முறை கீழே தள்ளினாலும்,
எழுந்து கொள்கிறது ஒரு பொம்மை. கழுத்துக்கு மேலே, தலையை மட்டும் காற்றில்
ஆட்டியவாறு நடனம் புரிகிறது இன்னொரு பொம்மை. வெவ்வேறு வண்ணங்களில்,
வடிவங்களில் கண்ணை கவர்கின்றன இந்த பொம்மைகள் !
பெரிய கோவிலுக்கு
அருகே தலையாட்டி பொம்மை விற்கும் பெரியவருடன் பேசும்போது அவர் தலையாட்டி
பொம்மை குறித்த சில தகவல்களை கூறினார். அவர் கூறியது இதோ:
தலையாட்டி பொம்மை தஞ்சைக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் என்கிற ஊரில்
தான் தயாரிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்கள் மட்டுமே
இந்த தொழிலில் ஈடுபடுகின்றன.
இந்த பொம்மை மூன்று வித சைஸ்களில்
வருகிறது. சைஸை பொறுத்து விலை ரூ 30, ரூ 60. அல்லது ரூ 80 ரூபாய்க்கு
கிடைக்கிறது (வெளி நாட்டு சுற்றலா பயணிகளுக்கு ரேட்டே வேறு !)
பொம்மையின் கீழ் பாகம் சற்று வெயிட்டான களிமண்ணால் செய்ய பட்டது. மேற்பாகம்
காகித கூழால் ஆனதால், எடை மிக குறைவு. இதனால் தான் மேல்பாகம் வளைந்து கீழே
விழுந்தாலும், கீழே உள்ள அதிக எடை காரணமாக உடன் மேலே வந்து விடுகிறது.
இப்படி காகிதம் மற்றும் களிமண்ணால் பொம்மையை செய்தபின் அழகான வண்ணம்
பூசுகின்றனர். வெவ்வேறு நிறங்களில் தயாராகி தஞ்சை வந்து சேர்கிறது
பொம்மைகள்.
கொலு நேரத்தில் மட்டுமே இந்த பொம்மைகள் நிறைய விற்பனை
ஆகும் என்றும் மற்ற நேரங்களில் இதை விரும்பி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து
வருவதாகவும் வருந்தினார் பெரியவர்.
நிறைய பேர் பொம்மையை பார்த்து
விட்டு விலை கேட்டு விட்டு சென்று விடுகின்றனர். பொம்மையை பார்ப்போரில்,
வாங்குவோர் குறைந்த சதவீதமே ! இருப்பினும் தஞ்சை தலை ஆட்டி பொம்மையை மிக
விரும்பி, ரசித்து பார்த்து வாங்கி போவோரும் ஒரு சிலர் இருக்கவே
செய்கிறார்கள்.
- நன்றி: என் இனிய...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum