சட்ட ஆலோசனைகள்: பெயிலில் வெளிவர வழிகள்
Sun Jan 06, 2013 7:45 am
வழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் வரக்கூடிய வழக்கு என்றும் பெயிலில் வர முடியாத வழக்கு என்றும் பிரிக்கலாம்.
பெயிலில் வரக்கூடிய வழக்குகள்
இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல் துறை
அதிகாரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடுவிக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி
கூட குற்றம் சாட்டப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விடலாம்
பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்
"பெயிலில் விடுவிக்க முடியாத " என்பதன் பொருள் காவல் துறை அதிகாரியால்
பெயிலில் விட முடியாது அதை ஒரு நீதிபதி தான் செய்ய முடியும் என்பதுதான்.
நீதிபதி குற்றவாளி குறித்த முதற்கட்ட முடிந்த பின் அவரை பெயிலில் விடுவிக்க
கூடும். அவர் தான் குற்றம் புரிந்தார் என்பதற்கு நியாயமான காரணம் இல்லை
என்பதாலும் வழக்கு முடிவதற்கு இடையிலும் பெயிலில் செல்ல நீதிபதி
அனுமதிப்பார்
பெயிலில் விட மறுக்க போலிஸ் பொதுவாக கூறும் காரணங்கள்
1. குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்
2. சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்
3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்
4. காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை
5. திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை
6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றபட்வில்லை
7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்
குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்கவேண்டும். அவற்றை மறுக்கவிடில் பெயில் கிடைப்பது கடினம்
பெயிலில் வர மனு
குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை
நியமிப்பது மிக நல்லது. அதற்கான மனு அவர் நீதிபதியின் முன் தரவேண்டும்
(பெரும்பாலும் வெளியில் இருக்கும் நண்பர் அல்லது உறவினர் வழக்கறிஞரை
பார்த்து விட்டு, அதற்கான கையெழுத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரிடம்
வாங்குவர் )
வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள இயலாதென்றால் குற்றம் சாட்டப்பட்டவரே
நீதிபதிக்கு மனுசெய்யலாம் (பொது மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது
என்பதால் தானே வாதிடுவதை பொதுவாய் தவிர்ப்பது நல்லது)
பெயில் மனுவில் பொதுவாய் கீழ்க்காணும் காரணங்கள் சொல்லபடுகின்றன
1. பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்
2. தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது
3. காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்
பெயில் மறுப்பும் மேல் முறையீடும்
பெயிலில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில்
கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்
நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.
ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து
மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்
ஆண்டிசிபேட்டரி பெயில் (Anticipatory Bail)
ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில
நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி
(Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு
இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல்
செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன்
தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி
(Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது .
நன்றி: வீடு திரும்பல்

Re: சட்ட ஆலோசனைகள்: பெயிலில் வெளிவர வழிகள்
Sun Jan 06, 2013 7:50 am
வாரண்ட் இன்றி எப்போது போலீஸ் கைது செய்யலாம்?
வாரான்ட் என்கிற வார்த்தை நம்
எல்லாருமே எப்போதோ ஒரு முறை உச்சரித்திருப்போம். " அந்த கேசில் அவர் மேலே
வாரன்ட் குடுத்தாச்சாம். அரெஸ்ட் பண்ண போறாங்களாம்" என பேசி கொள்வோம்.
ஒரு நபரை வாரன்ட் இருந்தால் மட்டும் தான் அரஸ்ட் பண்ண முடியுமா? வாரன்ட்
இல்லாமல் எப்போது அரஸ்ட் பண்ணலாம்; இப்பதிவின் மூலம் அறிவோம்.
முதலில் வாரன்ட் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் :
கைதுக்கான வாரன்ட் (பிடிப்பாணை)
வாரன்ட்:
1. எழுதப்பட்டிருக்க வேண்டும்
2. நீதிமன்றத்தின் தலைமை அலுவலர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்
3. நீதிமன்றத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்
4. குற்றவாளியின் பெயர், முகவரி, அவர் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன என்பதும் குறிப்பிட பட்டிருக்க வேண்டும்.
இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமலிருந்தால் கூட வாரன்ட் சரியான ஒன்றல்ல. அத்தகைய வாரன்ட் மூலம் செய்யப்படும் கைது சட்ட விரோதமாகும்.
வாரன்ட் (பிடிப்பாணை) இன்றி கைது
ஒரு நபர் கைது செய்வதற்குரிய குற்றம் செய்ததாக சந்தேகம் இருந்தால் அவரை
வாரன்ட் இன்றி கைது செய்ய காவல் துறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. பிற
குற்றங்களில் நீதிபதியிடமிருந்து வாரன்ட் பெறாமல் ஒரு நபரை கைது செய்ய
முடியாது.
Criminal Procedure Code-ல் எந்தெந்த குற்றங்கள் வாரன்ட் இன்றி கைது செய்ய
முடியும், எவை வாரன்ட் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் என்ற
விபரங்கள் உள்ளன.
கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி திருட்டு போன்ற குற்றங்கள் வாரன்ட் இன்றி கைது செய்ய கூடிய குற்றங்களாகும்.
வாரன்ட் இன்றி ஒரு நபரை எப்போது கைது செய்யலாம்:
1. அவர் நேரடியே வாரன்ட் இன்றி கைது செய்ய கூடிய அளவு குற்றம் புரிகிறார்
அல்லது அதில் சம்பந்த பட்டுள்ளார் என்கிற சந்தேகம் இருந்தால்
2. வீட்டை உடைப்பதற்கான (House breaking) சாதனங்கள் வைத்திருந்தால்
3. களவு போன பொருட்களை வைத்திருந்தால்
4. அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக (Declared offenders) இருந்தால்
5. பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரியை தடுத்தால்
6. சட்ட பூர்வ காவலில் இருந்து தப்பி ஓடினால்
7. ராணுவன், கடற்படை, விமானபடையிலிருந்து பணியை விட்டு ஓடி வந்தவராக இருந்தால்
8. விடுவிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியிருந்தால்
9. கைது செய்யகூடிய குற்றம் புரிய அவர் சில வேலைகளை தயார் செய்கிறார் என சந்தேகம் இருந்தால்
10. வாடிக்கையான குற்றவாளியாக இருந்தால் ( Habitual Offender)
11. வாரன்ட் இல்லாமல் கைது செய்ய முடியாத சிறிய குற்றம் ஒன்றை புரிந்தவர் -
காவல் துறை அதிகாரியிடம் தன பெயர், முகவரியை தர மறுத்தால் அல்லது தவறான
பெயர், முகவரி தந்தால்
********
வாரன்ட் (பிடிப்பாணை) யில் இரண்டு வகை உண்டு.
1. பிணையில் (Bail ) விடக்கூடியது
2. பிணையில் (Bail ) விட முடியாதது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum