விமானம் தாமதமானால் பயணிகள் இழப்பீட்டை எவ்வாறு பெறுவது? இதோ சட்ட ரீதியான வழிகள்
Mon May 18, 2015 10:10 am
குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு விமானம் தாமதமாக சென்றால், அந்த விமான நிறுவனத்திடமிருந்து பயணிகள் இழப்பீட்டு தொகையை எவ்வாறு பெறுவது என நுகர்வோர் உரிமைகள் அதிகாரி விளக்கியுள்ளார்.
Consumer champion என்ற அமைப்பை சேர்ந்த அதிகாரியான Dean Dunham என்பவர் கூறுகையில், விமானம் தாமதமாக சென்றதற்காக இழப்பீடு கேட்டும் பல விமான நிறுவனங்கள் அதை நிராகரித்து விட்டன என்ற குற்றச்சாட்டுகளுடன் எண்ணற்ற கடிதங்களும் மின்னஞ்சல்களும் தனக்கு வருகிறது என்றார்.
விமானங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லவில்லை என்றால் அதற்கான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று பிரித்தானிய உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் வலியுறுத்தியிருந்தது.
உச்ச நீதிமன்றம் கொண்டுவந்த சட்டத்திற்கு பிறகும் பல நிறுவனங்கள் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்துவருகிறது.
நீதிமன்ற உத்தரவு படி, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கும் அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமான நிலையத்திலிருந்து பிற நாட்டு விமானங்களில் பயணிப்பவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.
அதாவது, பயணி ஒருவர் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 3 மணி நேரங்களுக்கு மேல் அவர் பயணிக்கும் விமானம் தாமதமாக சென்றால், அந்த விமான நிறுவனம் அவருக்கு 448 பவுண்டுகள் இழப்பீடு வழங்குவதுடன், அவருக்கும் அவருடன் சென்ற ஒவ்வொருவரின் பயணச்செலவையும் விமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும்.
ஆனால், பல விமான நிறுவனங்கள் ‘தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில்’ பயணிகளுக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி இழப்பீட்டை தர மறுத்து வருகின்றனர்.
இங்கு ‘தவிர்க்க முடியாத சூழ்நிலை’ என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மோசமான காலநிலையை தான். அதுபோன்ற காலத்தில் விமானங்கள் தாமதமாக சென்றால் இழப்பீடு பெற முடியாது.
ஆனால், விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் இதர காரணங்களுக்காக விமானம் தாமதமாக சென்றால், அதற்கான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதும், தொழில்நுட்ப குறைபாடுகளை ‘தவிர்க்க முடியாத சூழ்நிலையால் பயணிகளுக்கு இழப்பீடு தர மறுத்து வருவது சட்ட விரோதமான செயலாகும்.
இவ்வாறு, பிரச்சனைகள் எழும்போது சில சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.
இதுபோன்று சட்டவிரோதமாக இழப்பீட்டை தரமறுக்கும் விமான நிறுவனத்திற்கு எதிராக உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்திற்கு உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.
இந்த ஆணையமானது விமான நிறுவனத்தை கட்டாயப்படுத்தி இழப்பீட்டை பெற்ற தர முடியாவிட்டாலும், விமான தாமதத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்பட்டால், பயணியின் 80 சதவிகித பிரச்சனையை ஆணையமே தீர்த்து வைத்து விடும்.
இதற்கு பின்னரும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்தால், இந்த வழக்கை சிறிய நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்றால், பயணிகளின் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும் என Dean Dunham தெரிவித்துள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum