பரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா!
Mon Jun 25, 2018 2:21 pm
ஒரு முனிவர் காட்டுக்குள், ஒரு சிறிய கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். காட்டில் கிடைக்கும் கிழங்குகளும், பழங்களுந்தான் அவர் உணவு. நாளாக நாளாக அவரைப் பார்த்து ஆசி பெறப் பலரும் அங்கே வரத் தொடங்கினார்கள். வரும்போது அவருக்கு நிறைய பழங்களும், முந்திரி, பாதாம் பருப்பு போன்றவற்றையும் ஏராளமாய்க் கொண்டு வந்தார்கள். காட்டுக் கிழங்கும், பழங்களும் மட்டுமே தின்ற நாக்குக்கு வகை வகையான உணவு. கடவுளுக்கு நன்றி கூறினார்.
தின்றது போக மீதமுள்ள பாதாம், பிஸ்தா வகைகளை இலைச் சருகின் மேல் கொட்டிவைத்து தினமும் சாப்பிட்டார். இப்போது இந்த பாதாம், பிஸ்தா இல்லாமல் அவரால் சாப்பிடவே முடியவில்லை. வெறும் வீடாய் இருந்த இடத்தில் குவியல் குவியலாக உணவு கிடப்பதைக் கண்டு எலிகள் வந்து பெருகின.
சாமியாருக்கு செம டென்ஷன். இவரது பிரச்சனையை உணர்ந்த ஒரு பக்தர் இரண்டு பூனைகளைக் கொண்டு வந்து விட்டார். இப்போது எலிகள் ஓடிப் போயின. ஆனால் அடுத்த பிரச்சினை ஆரம்பித்து விட்டது. பூனை குடிக்கப் பால் வேணுமே . இந்த பிரச்சனையை ஒரு பக்தரிடம் சொல்ல அவர் மறுநாளே ஒரு பசு மாட்டோடு வந்தார். பூனைக்குப் பால் ரெடி. அவருக்கும் பழத்துடன், பாலும் கிடைக்கும். ஆனால் மாட்டை யார் பராமரிப்பது?
கடவுள் சிந்தனையெல்லாம் மறந்து இப்போது இதுவே பெரிய பிரச்சினையாகப் பட்டது. அதற்கும் ஒரு பக்தர் ஏற்பாடு செய்தார். ஒரு வேலைக்காரியை கொண்டு வந்து விட்டார். கொஞ்ச நாள் பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு பிரச்சினை. வேலைக்காரி அடிக்கடி வருவதில்லை. அந்நாட்களில் அவரே சிரமப்பட வேண்டி இருந்தது.
அப்போது ஒருவர் ஒரு யோசனை சொன்னார் " பேசாம ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்குங்க சாமி " . கடவுளுக்காக உலகைத்துறந்து வாழ்ந்த மனிதருக்கு இப்போது கல்யாணந்தான் சரி என்று பட்டது. கல்யாணமும் ஆகி சாமியார் சம்சாரியானார்.
இப்போதெல்லாம் அவரைத் தேடி யாரும் வருவதில்லை. மனைவி வேறு மூன்று மாசம். காட்டில் இருந்த வீட்டைக் காலி செய்து விட்டு ஊருக்குள் போய்க் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். ராஜா மாதிரி வாழ்ந்தவர் சின்னச் சின்ன மீறுதல்களால் கூலிக் காரனானார்.
செல்லமே! நமது வாழ்க்கையிலும் இப்படித்தான். சின்ன பலவீனந்தானே என்றும் கொஞ்ச நேரம்
குடி முழுகிடாது. என்றும் நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டால் நாளடைவில் ரட்சிப்பே பறிபோகும். தீமையை வெறுத்து பரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum