கவனமாய் இருப்பாயா?
Fri Jul 17, 2015 10:51 pm
முதலாளி ஒருவருக்குப் பல விதமான மிருகங்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதற்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி, வேலியிட்டு , அவற்றைப் பராமரிக்க சில வேலையாட்களையும் நியமித்திருந்தார்.
தினமும் காலையிலும், மாலையிலும் நடைப் பயிற்சி போல அங்கே சென்று வருவார்.
ஒரு முறை அங்கு ஒரு குட்டிக் குரங்கையும் கொண்டு வந்தார்கள். முதலாளி அதைப் பார்த்ததுமே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. அதை மட்டும் கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக வளர்க்கும்படி கட்டளையிட்டார். அது அவர் சொன்னபடியே வளர்க்கப் பட்டது.
மறுநாள் ஒரு வேலை நிமித்தமாக முதலாளி சிறிது நாட்கள் வெளியூர் செல்ல நேரிட்டது. வேலை முடிந்து அவர் திரும்பி வர ஒரு மாதம் ஆனது. வந்தவுடன் வழக்கம் போலவே மிருகங்கள் வளர்க்கும் இடத்திற்கு சென்றார்.
ஒவ்வொன்றாய்ப் பார்வையிட்டுவிட்டுக் குரங்கை எடுத்து வரச்சொன்னார். பணியாளர் ஓடிப்போய் குரங்கைத் தூக்கி வந்து முதலாளியிடம் கொண்டு வந்தார். குரங்கை முதலாளியின் காலடியில் விட்டு விட்டு ஒரு குச்சியை எடுத்து அதன் முதுகில் சுரீரென்று ஒரு அடி கொடுத்தார். குரங்கு வீலென்று அலறிய படியே நடுங்கி நின்றது. இதைப் பார்த்ததும் முதலாளிக்குக் கோபம் வந்துவிட்டது.

" அட மூர்க்கனே! வாயில்லா ஜீவனை இப்படியா துன்புறுத்துவாய்? இனிமேல் இப்படி நடந்து கொண்டால் உன்னை கடுமையாக தண்டிப்பேன்" என்றபடி நடுங்கியபடி நின்ற குரங்கைத் தடவிக் கொடுத்தார். பணியாளர் ஏதோ சொல்ல வந்தார். ஆனால் சொல்லவில்லை.
குரங்கு நட்புடன் அவரைப் பார்த்தது. முதலாளி பணிக்குத் திரும்பினார். அன்று முழுவதும் அவருக்கு அடிபட்டு அலறிய குரங்கின் முகமே அடிக்கடி நினைவில் வந்தது. அதன் மேல் ஒரு பரிதாபம் உண்டானது.
மறுநாள் இதற்காகவே கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து அங்கே சென்றுவிட்டார்.
பணியாளரிடம் குரங்கை எடுத்து வரச்சொன்னார். குரங்கு கொண்டு வரப்பட்டது. இந்த முறை அது அவரது கையையும், ஆடைகளையும் மெதுவாகத் தொட்டுப் பார்த்தது. அவருக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
மறுநாள் வந்தபோது குரங்கு அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தது. முதலாளி அதையும் ரசித்தார். அடுத்த நாள் மீண்டும் அவர் குரங்கைக் கொண்டு வரச்சொன்னார். இந்த முறை குரங்கு நேராக அவர் தலையில் ஏறியது. அவரது தலையில் இருந்த தொப்பியை எடுத்து வீசிவிட்டு அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தது. முதலாளி வலி தாங்க முடியாமல் அலறினார்.
பணியாளர் ஓடிவந்து பிரம்பால் குரங்குக்கு சுள்ளென்று ஒரு அடி கொடுத்தார். குரங்கு வீலென்று அலறிய படியே நடுங்கிக் கீழே இறங்கி அடக்கமாய் நின்றது.
பணியாளர் சொன்னார்,
" ஐயா! குரங்கை இப்படி வளர்த்தால்தான் அது அடங்கி இருக்கும் ".
செல்லமே! நமது சரீரமும், மனமும் இப்படிப்பட்டவைதான். உபவாசத்தாலும், இரவு ஜபங்களாலும், வசனத்தாலும் அவ்வப்போது அடி கொடுக்காமல் விட்டு விட்டால் அது நம் தலையில் ஏறி அமர்ந்து கொள்ளும். அவமானம் படுத்திவிடும். கவனமாய் இருப்பாயா?
John Saravanan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum