- KavithaMohanபுதியவர்
- Posts : 2
Join date : 09/01/2018
அன்பால் இயங்குகிறது பேரண்டம் ; பிற உயிர்களின் மீது அன்பு கொள்வோம்.!
Thu Jan 11, 2018 4:37 pm
"நாம் உயிர்த்திருப்பதுவின் நோக்கமே பிற உயிர்களை நேசிப்பதற்காகத்தான்" என்கிறான் ஓர் மேலைநாட்டு கவிஞன். ஆம். எத்துணை சத்தியமான வார்த்தைகள் இவை. அடிப்படையில் சமூக விலங்கான மனிதன் பிற உயிர்களின் உதவியின்றி நிச்சயம் இந்த மண்ணில் ஓர் நொடி கூட உயிர்திருத்தல் ஆகாது ; அது சாத்தியமுமில்லை. அதன் காரணமாக வடிவமைக்கப்பட்டதுவே அல்லது தானாக உருகொண்டதுவே இப்போது நம் சமூக கட்டமைவில் நிலை கொண்டுள்ள குடும்ப கட்டமைப்புகள்.
ஆக, மனித இயங்கியலின் அடிப்படை விதியே பிற உயிர்களை சார்ந்திருத்தல் என்றால் அதில் மிகையேதுமில்லை. ஆனால், வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியின் காரணமாகவும், இன்ன பிற காரணங்களாலும் நாம் பிற உயிர்களை நேசிக்கவும் மறந்துபோகிறோம். இல்லை என நாம் மறுத்தாலும் அதுவே கசப்பான உண்மையும் கூட.
வாழ்க்கை சுழற்சியில் கல்வி, வேலை என தொடர்ச்சியாக நாம் சுழன்றுகொண்டே இருக்கிறோமேயொழிய நாம் அன்புகொண்டுள்ள, அல்லது நம்மை நேசிக்கிற உயிர்களுக்காக - உறவுக்களுக்காக நமது நேரத்தினை செலவிடுகிறோமா என்றால் நிச்சயம் பெரும்பாலானோரிடமிருந்து இல்லை என்ற பதிலே மிஞ்சும்.
எனவே, நம் மேல் அன்புகொண்டுள்ள, நமக்கான உயிர்களிடத்தில் மட்டுமல்ல இறைவன் படிப்பில் உண்டான எல்லா உயிர்களின் மீது அன்பு செலுத்திட, அவர்களுக்கான நேரத்தினை செலவிட முயலுவோம். அதுவே நமக்கான வாழ்வினை அழகானதாக ஆக்கிட உதவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum