எங்கு அன்பு இருக்கிறதோ
Sun Jun 01, 2014 10:28 pm
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன்... அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள்.
அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள் அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக
வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும்
என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.
அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள் அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம்
நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம்.
அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன்மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய
மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள்.
ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன்
கருத்தை கூறுகிறாள்.
இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார். அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் "அன்பு", அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார்.
அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன்
நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டு்ம் தானே? என்றுஆச்சர்யப்பட்டு கேட்கிறாள். அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால் , மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!!

Re: எங்கு அன்பு இருக்கிறதோ
Tue Sep 30, 2014 1:35 pm
ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொல்கிறார்
" என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.
உடனே,மகள் சொல்கிறாள் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகிங்க பா".
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.
நான் உங்கள் கையை பிடித்தால்,
ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.
உண்மை அன்பு எங்கோ, அளவு கடந்த நம்பிக்கையும் அங்கே..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum