நல்லி ரசம் !!!
Sat Dec 09, 2017 7:48 am
நல்லி ரசம் !!!
தேவை?
நல்லி எலும்புத் துண்டுகள் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 8(பொடியாக நறுக்கியது)
தக்காளி, பச்சைமிளகாய் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
மசாலா அரைக்க வேண்டியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு ஒள்றிரண்டாக பொடிக்கவும். நல்லி எலும்புத் துண்டுகளை தண்ணீரில் நன்றாக அலசி குக்கரில் போடவும். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். பின்னர் தக்காளியை கைகளால் கரைத்து அதனுடன் சேர்த்து குக்கரை மூடவும்.
6 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். பின் குக்கரை திறந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இறுதியில் எலுமிச்சைச்சாறு சேர்த்து கோத்தமல்லித் தழையை தூவி இறக்கவும். நல்லி எலும்புக்கு பதிலாக சிக்கன் அல்லது வான்கோழிக் கறி சேர்த்து இதே முறையில் ரசம் வைக்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum