நாட்டுக்கோழி ரசம்
Sun Nov 29, 2015 9:15 pm
மணக்க மணக்க உங்களுக்காக இதோ நாட்டுக்கோழி ரசம்.
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கி ( ரெண்டு மூன்றாய் நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
தக்காளி - 3 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகு - 11/2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு,சீரகம் பொரியவிட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
பின்பு கறியையும், தக்காளியையும் பூட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு சேர்த்து 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விடவும்.
பின் சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஏற்றி 2 விசில் விடவும். ஸ்டீம் அடங்கியதும் மிளகு,பூண்டு தட்டி போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சுவையான செட்டிநாட்டு நாட்டுக்கோழி ரசம் மணக்க மணக்க தயார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum