அவனுக்காக நான் மரிக்கிறேன்
Sun Nov 19, 2017 8:25 am
ஒரு தகப்பன், மகன், மகனுடைய நண்பன் இவர்கள் மூன்று பேரும் கடலில் கப்பள் பயணம் செய்தார்கள் திடீரென்று ஒரு புயல் ஏற்படவே கடலலைகள் உயர்ந்தெழும்பின. அந்த கப்பல் தண்ணீரால் அமிழ்ந்து போனது. மூன்று பேரும் உயிருக்கு போராடினர். கப்பலில் இருந்த உயிர் காப்புக்கயிறு ஒன்றினைத் தன் கையில் பிடித்து கொண்ட தகப்பன் தன் வாழ்க்கையிலேயே வேதனையளிக்கும் ஒரு முடிவை எடுக்க வேண்டியவராய் இருந்தார். தகப்பன், மகன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் மகனின் நண்பனோ கிறிஸ்தவனல்ல ஆதாலால் மகன் மரித்தால் நித்திய மகிமைக்கு செல்வான் நண்பனோ! ஐயோ! நினைத்து கூட பார்க்க முடியாதே. அவர் எடுத்த முடிவு வேதனையானது.
தன் சிநேகிதனை உண்மையாய் நேசித்த மகனும் தன் தகப்பனின் மனதை விளங்கி கொண்டவனாக "அப்பா, அவனுக்காக நான் மரிக்கிறேன் அவனை காப்பாற்றுங்கள்'' என்று தகப்பனை நோக்கிக் குரல் கொடுக்கவே அவர் "மகனே நான் உன்னை நேசிக்கிறேன்'' என்று உரத்த சத்தமாய்க் கூறிய வண்ணம் உயிர்காப்புக் கயிற்றின் மறுமுனையைத் தன் மகனுடைய நண்பனின் பக்கமாக வீசினான். நண்பன் காப்பாற்றபட்டான். மகனுடைய உடல் அதற்க்கு பின் திரும்ப தெரியவில்லை. மகன் நித்திய மகிமைக்குள் அடியெடுத்து வைத்திருப்பான். ஆனால் தன் மகனின் நண்பன் தேவன் இல்லாத ஒரு நித்தியத்திற்க்குள் அடியெடுத்து வைப்பதை அவரால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. அகவே தான் அவர் தன் மகனுடைய நண்பனின் ஜீவனைப் பாதுகாக்கும்படி தன் மகனையே தியாகம் செய்து விட்டார். இதே காரியத்தைத்தான் பரமபிதாவும் நமக்கு செய்திருக்கிறார்கள். "என்னே அவரது தியாக அன்பு'' நாம் இரட்சிப்படையும் படியாக அவர் தம்முடைய ஒரே பேரான குமாரனை நமக்காக பலியாக்கினார்.(யோவான் 3:16)
நித்திய அழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் வாலிபனே தேவன் உன்னை மீட்கும்படியாக நமக்காக கொடுத்த இயேசு கிறிஸ்துவை பிடித்துக் கொண்டு மறுவாழ்வை நீ ஏற்றுக்கொள்வாயாக
கர்த்தராகிய இயேசு பலியானதினிமித்தம் மாபெரும் இரட்சிப்பை அடைந்திருக்கும் வாலிபனே! நீ பெற்றுக் கொண்ட இரட்சிப்பு எவ்வளவு விலையேறப் பெற்றது என்பதை நீ உணருகிறாயா? அதில் நிலைத்திருந்து வளருகிறாயா? அவருக்கு உகந்த ஜீவியம் செய்வாயாக. நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாலிகாளயிருக்கிறோம் (1 யோவான் 3:16)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum