எதை நான், எப்படி பேச வேண்டும்?
Wed Jan 30, 2013 10:21 am
வாசிக்க | நீதி 11:12,13
நாம் ஒவ்வொருவரும் பிறந்தது முதல் நன்றாக பேச முயற்சி செய்து, நாளடைவில்
நமது பேச்சினால் பல நண்பர்களை, உறவுகளை சம்பாதிக்கும் நிலைக்கு வளர்ந்து
விடுகிறோம்.
இந்த வளர்ச்சியில் எதை பேச வேண்டும் என்றும் எப்போது பேச வேண்டும் என்று கற்றுக் கொள்கிறோம்.
சூழ்நிலை சரியில்லாத போது, பேசாமல் இருந்துவிடுவது தான் உறவுகளை
பாதிக்காது என்றும் கற்றுக்கொள்கிறோம். ஆனாலும், சிலவேளைகளில் பொறுமையற்று
நாம் சிந்திவிடும் வார்த்தைகள் உறவுகளை சிதைத்துவிடுகிறது.
இயேசு
கிறிஸ்து ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு மனிதனிடமும் பேச வேண்டிய விதத்தை
அறிந்திருந்தார். சில சூழலில் அமைதி காத்தார். சில சூழலில் எதிர்த்து
கேட்டார். சில சூழலில் அன்பின் போதனைகளை பிரசங்கித்தார். சில சூழலில்
கடிந்து கொண்டார்.
தம்மை சிக்க வைக்க துடிக்கும் பரிசேயரிடமும் பேசவதில் சிறந்த முறைகளை கையாண்டார். (லூக்கா 20: 20-25)
சோதிக்க | நீங்கள் ஒவ்வொரு முறை பேசும் முன் இந்த மூன்று சோதனைகளை செய்து பாருங்கள்.
நான் உண்மையை பேசுகிறேனா?
நான் சாந்தமாய் பேசுகிறேனா?
நான் தேவையுள்ள சூழலில் மட்டும் பேசுகிறேனா?
நன்றி: கதம்பம்
- samuel.w.dhinakaranபுதியவர்
- Posts : 15
Join date : 05/01/2013
Location : Milton keynes., LONDON., UK
Re: எதை நான், எப்படி பேச வேண்டும்?
Fri Feb 08, 2013 4:35 am
Very super.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum