- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
திரும்ப அளிப்பேன்
Tue Jan 10, 2017 8:53 am
“…நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” - சங். 90:15
எழுப்புதல் பிரசங்கியார் ஜான்வெஸ்லி தனது 53வது வயதில் காசநோயினால் பாதிக்கப்பட்டார். அவர் மரித்துப் போவார் என்று எதிர்பார்த்து அவர் கல்லறையின் மீது வைக்க வேண்டிய கல் முதலாய் ஆயத்தம் செய்யப்பட்டது. ஆனால் அவர் 80 வயதுக்கும் மேலாக உயிர் வாழ்ந்தார்.
தனது 82வது வயதில் அவர், “நான் ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்; ஏனெனில் என்னுடைய வேலையினால் எனக்கு களைப்பு ஏற்பட்டாலும், என்னுடைய வேலையில் நான் களைத்து போகவில்லை” என்றார். அவர் குதிரையின் மீது நெடுந்தூரம் பயணம் செய்து தினமும் மூன்று வேளையும் பிரசங்கம் செய்து, 200க்கும் அதிகமான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
ஆம், நமது காலங்கள் தேவ கரத்திலிருக்கிறது. நமது ஜீவன் அவர் பார்வைக்கு மிகவும் அருமையானது. நாம் தேவசித்தத்திற்கு நம் வாழ்வை ஒப்புக்கொடுத்திருக்கும்போது அவர் சித்தமின்றி எதுவும் நமக்கு நடக்காது. அவர் நம்மைக் கொண்டு என்ன செய்ய சித்தமாயிருக்கிறாரோ அதை செய்து முடிக்காமல் நம் ஜீவன் நம்மை விட்டுச் செல்வதில்லை.
தேவதாசனாகிய மோசே கூறுகிறார், “எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்கு போதித்தருளும். நாங்கள் சிறுமைப்பட்ட நாட்களுக்கும் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் தக்கதாய் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” என்று கூறுகிறார்.
அருமையான தேவபிள்ளைகளே!
ஒரு வேளை நீங்கள் வியாதி வேதனையால் சோர்ந்து போய் காணப்படலாம். எனக்கு மட்டும் ஏன் இந்த பாடுகள்?.....என கேள்வி கேட்டு குழம்பியிருக்கிறீர்களோ?
அன்று ஜான்வெஸ்லிக்கு ஆரோக்கியத்தையும் தீர்க்காயுசையும் கொடுத்த தேவன் இவ்வாண்டிலே உங்களையும் பெலப்படுத்துவார். தொடர்ந்து நஷ்டத்தையே சந்திக்கிறேனே எனக் கலங்கியுள்ளீர்களோ?
வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப்பூச்சிகளும், பச்சைப்புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்கு திரும்ப அளிப்பேன் (யோவேல்2:25) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பாழாய் போன வாழ்வை சீரமைப்பார். வீணாய்ப்போன காலங்கள் ஆசீர்வாதமானதாய் இருக்கும். கலங்காதீர்கள்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum