- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
அகஸ்டின் - ஆயர். வேத வல்லுனர்
Tue Nov 22, 2016 8:59 pm
பாவ வாழ்க்கையை விட்டு மன்னிப்படைந்து இரட்சிப்பைப் பெற தருணமானது மீண்டும் மீண்டும் கிடைப்பதில்லை. எனவே தருணம் கிடைக்கும் காலத்தை பயன்படுத்தி புதிய வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
அகஸ்டின் இவர் ஒரு ஆயர். வேத வல்லுனர். ஏறத்தாழ நூறு நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இளமைக் காலங்களில் தீய வழிகளில் நடந்தவர். புரட்டு உபதேசங்களுக்கு செவிகொடுத்து இறைவனை விட்டு தூரம் சென்றவர்.
பூங்கா ஒன்றில் தனிமையில் மனக் குழப்பங்களுடன் அமர்ந்திருந்த இவருக்கு "எடுத்துப் படி" என்ற குரல் கேட்க வேத புஸ்தகத்தை திறந்து வாசித்தார். இரவு முடியப் போகிறது. பகல் அண்மையில் உள்ளது. எனவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களை களைந்து விட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்துக் கொள்வோமாக. ரோமர்: 13:12 என்ற வாசகத்தால் தொடப்பட்டு தன் தீய குணங்களை விட்டு #இறைவனில்சரணடைதார்.
தன் வாழ்க்கையில் செய்த தவறுகளை மன்னிக்க "பாவ அறிக்கை" என்ற நூலை எழுதினார். அதில் என்றுமே அழகின் முதுமையானவருமான அருட்பெரும் சோதியே இறைவா உம்மை நான் புரிந்துக் கொண்டு அன்பு செய்வதற்கு எவ்வளவு பின்தங்கிவிட்டேன். நீர் என்னில் குடியிருந்தீர். ஆனால் நானோ வெளி உலகத்தில் அலைந்து திரிந்து விட்டேன். வெட்ட வெளியில் உம்மை வீணாக தேடி திரிந்தேன். நீர் என்னோடு இருக்க நான் உம்மோடு இல்லாதிருந்தேன். இப்போது உம்மோடு மட்டுமே எனக்கு பசியும், தாகமும் உள்ளது. நீர் தரும் பேரமைதிக்காக நான் உருகி நிற்கிறேன். என்று அகஸ்டின் இறைவனில் உருகி கூறுகிறார்.
ஆண்டவரே எப்பொழுதும் என் மேல் கோபமாயிருப்பீரோ நான் செய்த குற்றங்களை மன்னிக்க மாட்டீரோ என்று அழுது புலம்பி இவர் அநேக பாவிகளை #கிறிஸ்துவிடம் கொண்டு வர காரணமானவர். இவரின் தாய் புனித மோனிக்கா என்பவராவார்.
அன்பரே உமது தீய வழிகளை விட்டு நீர் மனம் திரும்பிவிட்டீரா
நூல்
மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள்
நம்பிக்கை ஒளி வெள்ளம் என் இதயத்தில் பாயிந்து சந்தேகம் என்னும் இருளை அடித்துச் சென்றது.
அகஸ்டின்
#ஆண்டவரே காலத்தைப் பயன்படுத்தி உமக்குள் கனிகொடுக்கும் ஜீவியம் செய்ய என்னை பக்குவப்படுத்தும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum