அகஸ்டின் ஜெபக்குமார்.......
Sat Feb 21, 2015 9:36 pm
அகஸ்டின் ஜெபக்குமார்.......
வெள்ளை உடை, முகத்தில் முட்கள் போன்ற தாடி, அழகிய சிரிப்பு, கணீர் குரல், அழுத்தமான உச்சரிப்புகள், ஆழாமான கருத்துக்கள், சிறிதும் தடுமாறாத ஊழிய அழைப்பு, கண்களில் கம்பீர வைராக்கியம், எந்த ஓர் பண ஊழியத்திலும் இடுபாடில்லாமை, எதை பற்றியும் கவலைபடாமல் வேதத்தை மட்டும் போதிக்கும் அதிகாரம், 41 ஆண்டுகளாக தூக்கி சுமக்கும் சுவிசேஷ பாரம் என்று இவர் இளமை பருவத்தில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் தொடர்கிறது. பல இளைஞ்சர்களுக்கு இன்றும் இவர் ஓர் முன்னோடி. "ஊழியம் பற்றி தெரிய வேண்டுமா, பீகார் வந்துபார்" என்று தைரியமாக அழைக்கும் ஓர் வற்றாத வைராய்கியம் இவரின் ஓர் அடையாளம். உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்று ஊழியத்திற்கு அனுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் மன தைரியம். இவரை பற்றி தெரிந்து கொள்வேமே?
சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் 20 - 8 - 1946 வருடம் திருநல்வேலியில் பிறந்தவர். தூத்துக்குடியில் வளர்க்கபட்டார். பொறியியல் பட்டபடிப்பை முடித்தவுடன் சென்னை பல்லாவரத்தில் உள்ள English Electric Co ல் டூல் டிசைனர் ஆக சிறிது காலம் வேலை பார்த்தார். சென்னை பட்டணம் இவருக்கு தேவனை முகமுகமாய் அறிந்து கொள்ள அதிகமாய் உதவி செய்தது. ஆலயத்திற்கு போகும் சாதாரண கிறிஸ்தவனாய் இருந்த இவர் பின்பு தேவனை அதிகமாக தேட ஆரம்பித்தார். தன்னை தேவனின் அழைபிற்குள் வழிநடத்தினது சென்னை என்று சகோதிரர் மகிழ்ச்சியுடன் குறிபிட்டுள்ளார்.
இவர் வேலை செய்த நிறுவனத்தின் முன் ஓர் ஆலயத்தின் சொத்து இருந்தது. அங்கு சென்று மாலை வேலையில் ஊழியம் செய்து வந்தார். இப்போது அங்கு பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. 21ம் வயதில் மிக உற்சாகத்துடன் சுவிஷேசத்தை தெருவெங்கும் போய் அறிவித்தார். இவர் அதிகமாக சிறு குழந்தைகளிடம் தேவனின் அன்பை பகிர்ந்து கொள்வதில் நாட்டம் கொண்டார். சுமார் வாரத்திற்கு 800 குழந்தைகளிடம் சுவிஷேசத்தை பகிர்வது இவரின் வழக்கம். சிறிது சிறிதாக வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பின் இவரின் நண்பரோடு சேர்ந்து காலை மாலை தெருக்களில் வசனத்தை கூவித்திரியும் காரியத்தையும் செய்து வந்தார்.
வாலிப வயதில் கிறிஸ்தவ நண்பர்களாக சுவிஷேசம் அறியபடாத இடங்களுக்காக வெள்ளிகிழமை இரவு முழுவதும், மற்றும் செவ்வாய் 7-9 மணிவரை ஜெபிப்பது வழக்கம். அந்நாட்களில் தேவன் பீகாரின் வரைபடத்தை கான்பித்தனின் காரணமாக 1972ம் வருடம் தேவன் கொடுத்த தரிசனத்தின் படி தேவ ஊழியம் செய்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு "தேவ ஊழியர்களின் கல்லறை" என்று வர்ணிக்கப்பட்டபீகார் மாநிலத்திற்கு கடந்து வந்தார். 13-10-1972ல் சுவிஷேச வாசமே இல்லாத பீகார் மண்ணில் கால் பதித்தபோது பீகார் மக்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியோ, பாஷையோ, ஊரோ தெரியாது. தேவன் கொடுத்த அநாதி அழைப்பை நம்பி வந்த இவருக்கு எதை பற்றியும் கவலையில்லை.
இவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கும் பீகாரை பற்றி அழைப்பு இருந்ததை தெரிந்து கொண்டார். திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண் முகத்தையோ, பேசினதோ கிடையாது. இவர்களின் பெற்றோர் இருவரின் தீர்மானத்தையும் பார்த்து தேவனின் சமூகத்தில் இணைத்து வைத்தார்கள்
இவர்களுக்கு தேவன் 4 குழந்தைகளை கொடுத்தார். இவர்கள் இணைந்து 4 குழந்தைகளை எடுத்து வளர்த்தார்கள். இவற்றில் ஓர் குழந்தையும் எடுத்து வளர்த்ததில் ஓர் குழந்தையும் இறந்து விட்டது. இப்போது மொத்தம் 6 குழந்தைகள் உண்டு. இவர்களில் 4 பேருக்கு திருமணம் ஆகி விட்டது. குடும்பமாக ஊழியம் செய்ய ஆரம்பித்த போது பல கஷ்டங்களை அனுபவித்தாலும், சகோதிரர் எப்போது வருவார் என்று அறிந்திராத போதும், சாலை ஓரத்தில் கிடக்கும் கீரைகளை சமைக்க வைக்கும் போதும் முகம் கோணாமல் இன்முகத்தோடு ஊழியத்தை தாங்கின மனைவியை தேவன் தந்த அதிசயம் என்று சகோதிரர் குறிபிடிகிறார்.
இவரின் சொந்த குழந்தை இறந்த போது ஊழியத்தின் நிமித்தமாக புதைக்க கூட வரவில்லை. ஆனாலும் இவரின் மனைவி மனதில் தாங்கிக்கொண்டு தேவ ஊழியத்தை நிறைவேற்றி கணவருக்கு துணையாக நிற்கிறார்.
தனந்தனியாக பீகாருக்கு கடந்து சென்றார். அதன் பின் 7 ஆண்டுகளுக்கு பின் GEMS ஊழியத்தின் பெயரை நிறுவினார். கால்கடுக்க நடந்து சென்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பல சோதனைகளை வேதனைகளோடு கடந்து போனாலும் அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் மேல் வைராக்கியம் கொண்டவராய் வெகு சீக்கிரத்தில் எல்லாவற்றையும் கற்று கொண்டார். சுமார் 41 வருடமாக ஊழியத்தை நிறைவேற்றி வரும் இவருடன் 2,300 பேர் ஊழியம் செய்து வருகின்றனர். சுமார் 7 விதமான ஊழியத்தை செய்துவரும் இவரின் ஸ்தாபனம் சுவிஷேசத்தை அறிவிப்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 20 லட்சம் பேரை ஓர் வருடத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது 31000 பேருக்கு ஊழிய பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 120 பள்ளிகூடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளையும் இவர் இயக்கி வருகிறார். மருத்துவமனையும் உள்ளது. ஓர் வருடத்தில் சுமார் 50,000 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தனிமனிதனாய் சென்றவர் இன்று ஆலமரமாய் நிற்கிறார். இவரின் ஆணிவேர் இயேசு கிறிஸ்துவை இருப்பதினால் இன்றும் தனகென்று தேவன் நியமித்த ஓட்டத்தில் தெளிவாக ஓடிகொண்டிருகிறார்.
தேவன் உங்களை அழைத்துள்ளாரா? ஊழியத்தை பற்றி பயம் உண்டோ? குடும்பத்தை பற்றின பாரம் அழுத்தபடுகிறதோ? உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். உங்களை கைவிடமாட்டார். திறப்பின் வாசலில் நிறைக்க நம்மை முழுமனதுடன் அற்ப்பநிபோமா?
ஆமென்.
கிறிஸ்தவம் என்பது அரசியல் மூலமாகவோ? அதிகாரத்தின் மூலமாகவோ? பதவி மூலமாகவோ? போராட்டங்கள் மூலமாகவோ? பணத்தின் மூலமாகவோ? கட்சி மூலமாகவோ? வளர்ந்தது இல்லை. இப்படிப்பட்ட உன்னதமான அர்பணிப்பின் மூலம் தேவன் அதிசயத்தக்க விதமாய் செயல்பட்டு இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள ஆணிவேர்கள் தேவனுக்கு தேவை.
இவரின் ஊழியத்தை பற்றி தெரிந்துகொள்ள வலைதளங்களில் வளம்வாருங்கள். விரைவில் இவர் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஊழியம் செய்ய உள்ளார். இவரை சந்தித்து ஆலோசனை பெற உங்களை அன்போடு அழைக்கிறோம்.
நன்றி. தேவன் தாமே சகோதிரர் குடும்பத்தையும், ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum