வருங்காலத்தில் ஆதார் அட்டையின் ஆபத்து
Sat Nov 12, 2016 1:39 am
அம்பானியின் மூடிக்கிடந்த பெட்ரோல் பங்க்குகள் திடீர் என்று திறக்க காரணம் என்ன?
மோடி பெட்ரோல் நிலையத்தை ஏன் தேர்வு செய்தார்?
கோடிக்கணக்கான லிட்டர்கள் விற்றாதக சொல்லி 500.1000 நோட்டுகள் மாற்றப்படும்.
அம்பானி போன்ற முதலாளிகளுக்காதான் இந்த ஏற்பாடு. கருப்பு பணம்லாம் ஒன்றும் ஒழியாது, வெளியேயும் வராது. மாறாக கருப்பு பணம் வெள்ளை பணமாக மாறும். இதனால்தான் முதலாளிகள், பணமுதலைகள் வரவேற்கின்றன.
1000, 500ஐ மாற்ற முடியாமல் நம்மை போன்ற நடுத்தர வர்க்கமும், ஏழைகளும்தாம்
ஆதார் அட்டையின் ஆபத்தை இன்னும் நம் மக்கள் உணராமல் விழுதடித்துக்கொண்டு வாங்க ஓடுகிறார்கள்.
அவர்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆதார் அட்டையை கொண்டுவரும் பொழுது, “இது கட்டாயமில்லை” என்று சொல்லி தான் கொண்டுவந்தார்கள். பின்னர், கேஸ் மானியம் பெற ஆதார் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள். கேஸ் மானியம் பெற ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மாற்றினார்கள்.
இப்பொழுது குடும்ப அட்டை பெற ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.
நாளை உங்கள் மின்சார கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பார்கள். பின் உங்கள் ஓட்டுனர் உரிமம், வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.
நாளை நீங்கள் மீத்தேனுக்கு எதிராகவோ, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகவோ போராடி ஒருநாள் கைதாகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கைரேகை அங்கு பதிவு செய்யப்படும். நீங்கள் ‘அரசிற்கு எதிரானவர்’ என்று ஆவணப்படுத்தப்படும். நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கும்போதோ, அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ உங்களை அரசு முடக்கும்.
ஒரு உதாரணத்திற்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கும், சொத்து வரியும் ஒரே ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது. நாளை சொத்து வரி என வரும்போது, உங்கள் சம்மதம் இல்லாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அரசு பணம் எடுக்கும் நிலை நிச்சயம் வரும். இதே போல் மின்சார கட்டணம் முதல் பலவற்றிற்கு நீளும்.
இதன் நீட்சியாக நாளை நீங்கள் வீடு தேடி ஒரு வீட்டிற்கு குடியேற வேண்டும் என்றால், அந்த ஏரியா காவல் நிலையத்தில் உங்கள் கைரேகையை வைத்து, ஒழுக்க சான்றிதழ் வாங்கி வந்து குடியேற வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு, ‘குற்றங்களை குறைக்க இது அவசியம்’ என்று பிரச்சாரம் செய்யப்படும்.
இதெல்லாம் நடக்காது என்று நினைக்கிறீர்களா? இன்று ஒரு ஜியோ சிம் வாங்க வேண்டும் என்றால்கூட ஆதார் அட்டை இல்லாமல் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் அரசாங்கத்தை நம்பி தந்த உங்கள் தகவல்கள் தனியாரிடம் (அம்பானியிடம்) தாரைவார்க்கப்பட்டுள்ளது.
உங்கள் கைரேகை உட்பட உங்கள் தகவலை ஒரு தனியார் (அம்பானி) பயன்படுத்த முடிகிறதென்றால், நாளை எவரோ செய்த குற்றச் செயலில் உங்கள் கைரேகையை போலியாக சித்தரித்து நீங்கள் செய்ததாக மாற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது…
நன்றி: சமூக பொறுப்பும் சமுதாய சிந்தனையும்

Re: வருங்காலத்தில் ஆதார் அட்டையின் ஆபத்து
Sat Nov 12, 2016 1:42 am
நான் சொல்லலை.. இந்தியர்கள் முட்டாள்கள்.. [ltr]#கட்ஜு[/ltr] அதிரடி!
90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் சொன்னதை மக்கள் நிரூபித்து விட்டனர் என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
சென்னை: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்தியர்களை அவர் முட்டாள்கள் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் மத்திய அரசை இதுதொடர்பாக கடுமையாக சாடியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளவர்களை முட்டாள்கள் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள முகநூல் பதிவுக்கு கடும் கண்டனங்களும் அதே அளவில் ஆதரவும் குவிந்து வருகிறது.
வாதப் பிரதிவாதங்கள் படு சூடாக ஓடிக் கொண்டுள்ளன.
கட்ஜு போட்ட முதல் பதிவில், மத்திய அரசின் விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு. இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவே உதவும். இந்தக் காலத்தில் யாரிடம்தான் 500 ரூபாய் நோட்டு இல்லை. மேலும் பணவீக்கம் அதிகம் உள்ள இந்த நாளில் இந்த பணத்துக்கு மதிப்புதான் ஏது. கிராமங்கள் பலவற்றில் வங்கிகள் கிடையாது, தபால் அலுவலகங்கள் கிடையாது அந்த மக்கள் எங்கு போய் பணத்தை மாற்றுவார்கள். யார் இந்த ஐடியாவை மத்திய அரசுக்குக் கொடுத்தது என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் கட்ஜு.
அடுத்து அவர் போட்டிருந்த பதிவில், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் அரசின் ஸ்டண்ட்தான் இந்த ரூபாய் ஒழிப்பு. அனைத்து நிலைகளிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது என்று கூறியிருந்தார்.
அடுத்த பதிவில், 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்று நான் ஏற்கனவே கூறியது உண்மையாகியுள்ளது. இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பால் உண்மையிலேயே கருப்புப் பணத்தை ஒழித்து விட முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா… இது பெரும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். அது ஏற்கனவே ஆரம்பமாகியும் விட்டது என்று கூறியிருந்தார் கட்ஜு.
கட்ஜுவின் இந்த பதிவுகள் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum