ஆபத்து காலத்தில்
Mon Feb 04, 2013 9:37 pm
முட்டாள்
விவசாயி ஒருவன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஓரு பாத்திரத்தில் ஊற்றி,
தொழுவத்திலேயே வைத்துவிட்டு, வேறு வேலை செய்ய போய்விட்டான்.
அப்போது அங்கிருந்த இரண்டு தவளைகள் அந்த பாலில் தவறி விழுந்துவிட்டது. அதில் ஒன்று குண்டு தவளை, மற்றொன்று ஒல்லி தவளை.
*குண்டு தவளை : ஐயையோ! நாம் மாட்டிக் கிட்டோமே, இதிலிருந்து நாம் வெளியே போக வழியே இல்லையே.
*ஒல்லி தவளை : கவலைபடாதே, உன் கால்களை அடித்துக் கொண்டே இரு. மூழ்கினால்
நாம் மரித்து போவோம். யாராவது உதவி செய்ய வருவார்கள். பயப்படாதே!
சிறிது நேரம் கழித்து,
*குண்டு தவளை : என்னால் முடியவில்லை, கால்கள் வலிக்கிறது. இவ்வளவு நேரம்
யாரும் வரவில்லை. இனியும் வரமாட்டார்கள். நமது வாழ்க்கை அவ்ளோதான்.
*ஒல்லி தவளை : உனது முயற்சியை விட்டுவிடாதே. கண்டிப்பாக கடவுள் நமக்கு
உதவுவார். நம்பிக்கையோடு முயற்சி செய். கால்களை அடிப்பதை நிறுத்தி
விட்டால், உன் உயிரும் நின்றுவிடும். விட்டுவிடாதே.
சிறிது நேரத்தில் குண்டு தவளை தனது முயற்சியை கைவிட்டது. நீரில் மூழ்கி மரித்தது.
ஒல்லி தவளை, கடவுள் தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் பல மணிநேரம்
விடா முயற்சியோடு போராடி, நீரில் மிதக்க கால்களை அடித்துக் கொண்டே
இருந்தது.
கால்களை அடிக்க அடிக்க, பாத்திரத்தில் இருந்த பால்,
வெண்ணையாக மாறியது. ஒல்லி தவளை சந்தோஷத்தில் துள்ளி குதித்து தப்பித்து.
கடவுளுக்கு நன்றி சொன்னது.
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
நண்பர்களே, நீங்கள் மூழ்கும் படகில் இருந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள்,
ஆண்டவரால் நீரின் மேல் நடந்து வந்து உங்களை தூக்கி விட முடியும் என்று
விசுவாசியுங்கள். போராடுங்கள். வெற்றி பெறுங்கள்.
சங்கீதம் : (50:15) ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
- samuel.w.dhinakaranபுதியவர்
- Posts : 15
Join date : 05/01/2013
Location : Milton keynes., LONDON., UK
Re: ஆபத்து காலத்தில்
Tue Feb 12, 2013 8:37 am
Really amazing. super. super.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum