"தேன் மிட்டாய் செய்யும் முறை..!
Mon Oct 31, 2016 7:15 pm
தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி - 4 கப்
முழு உளுந்து - ஒரு கப்
சீனி - 4 கப்
தண்ணீர் - ஒரு கப்
ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.
அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். (இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது)
அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும். உருண்டைகள் பொரிந்து மேலே வரும்.
பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.
ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.
சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.
Re: "தேன் மிட்டாய் செய்யும் முறை..!
Mon Oct 31, 2016 7:24 pm
தேன்மிட்டாய்
தேவையான பொருட்கள்
மைதா : ஒரு கப்
வெள்ளை ரவை : கால் கப்
ஆரஞ்சு வண்ணம் : ஒரு சிட்டிகை
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
தண்ணீர் : தேவையான அளவு
சர்க்கரை : 2 கப்
செய்முறை :
1.மைதா, ரவை, ஆரஞ்சு வண்ணம் மூன்றையும் தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்
2.இரவு முழுதும் ஈரத்துணி சுற்றி ஊறவிடவும்
3.காலையில் மாவு உப்பி இருக்கும்.
4.மீண்டும் சிறிது மிருதுவாக பிசைந்து பெரிய உருண்டைகளாக எடுக்கவும்
5.சப்பாத்தி கல்லில் அரை இஞ்ச் கனத்தில் பெரிய சப்பாத்தியாக திரட்டவும்
6.ஒரு சின்ன பாட்டில் மூடி கொண்டு சின்ன வட்டங்களாக வெட்டி எடுக்கவும்,
7.சர்க்கரையை கரைத்து கசடு நீக்கி, ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்
8.அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் குலோப் ஜாமுன் போல பொரித்து
9.எடுக்கவும் பொரித்த மிட்டாய்களை சூடான பாகில் போட்டு அழுத்தம் தராமல்
10.நன்கு அமிழ்த்தி விடவும் உடனே எடுத்து பாகை வடிகட்ட வைக்கவும்
பாகு முற்றிலும் வடிந்ததும் ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆறவிடவும்
11.ஆறின மிட்டாய்களை காற்றுபுகாத பாட்டில்களில் அடைத்து வைக்கவும்.
குறிப்பு
1.பாகிலிருந்து உடனே நீக்கவேண்டியது அவசியம், இல்லாவிட்டால் அதிகம் ஊறி
2.சுவை மாறிவிடும் நன்கு ஆறவிட்டால் மட்டுமே பர்பெக்ட்டான தேன்மிட்டாய் வரும்.
- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
Re: "தேன் மிட்டாய் செய்யும் முறை..!
Sat Nov 12, 2016 9:55 pm
சுவை தரும் இனிய மிட்டாய்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum