நூடுல்ஸ் ஆம்லெட் செய்யும் முறை
Sat Aug 10, 2013 8:29 am
தேவையான பொருட்கள்
முட்டை - 3
நூடுல்ஸ் - ஒன்று (சிறியது)
வெங்காயம் - ஒன்று (சிறியது)
தக்காளி - ஒன்று (சிறியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லி
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள், உப்பு
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
நூடுல்ஸை உங்கள் விருப்பம் போல் சமைத்து எடுத்துக் கொள்ளவும். இன்ஸ்டண்ட் என்றால் அதில் குறிப்பிட்டுள்ளபடி தயார் செய்து நீர் இல்லாமல் வைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள் தூள், உப்பு கலந்து கொள்ளவும்.
முட்டையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், விதை நீக்கி நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.
நான் ஸ்டிக் பேனில் பட்டர் தேய்த்து கொண்டு அதில் நூடுல்ஸை பரவலாக பரப்பி விடவும். (இந்த நிலையில் அடுப்பில் வைக்க வேண்டாம்).
அதன் மேல் பரவலாக முட்டை கலவையை ஊற்றவும். முட்டை சமமாக பரவ வேண்டும். இது கஷ்டமாக இருந்தால் நூடுல்ஸையும், முட்டை கலவையும் கலந்து விட்டு பேனில் ஊற்றலாம். இனி அடுப்பை சிறு தீயில் வைத்து பேனை அதில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மூடியின் உதவியுடன் அதை திருப்பி விடவும். அடுத்த பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.
தயாரிப்பு : வனிதா
நன்றி : சமையல் செய்வது எப்படி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum