முடி சூட்டப்படான்
Tue Oct 25, 2016 6:09 pm
சட்டத்தின்படி மல்யுத்தம் செய்யாவிட்டால் முடி சூட்டப்படான் (2தீமோ.2:5)
இரண்டு மீனவர்கள் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வலையை வீசுவதும் பின் இழுப்பதும் வலையில் அகப்பட்ட மீன்களை அள்ளி கூடையில் போடுவதுமாக இருந்தனர்.
அவர்கள் மீன் பிடிப்பதை மரத்திலிருந்து ஒரு குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது. " அப்படி வீச வேண்டும். இப்படி இழுக்க வேண்டும். மீன்களை அள்ளி கூடையில் போடவேண்டும். ஓஹோ! மீன் பிடித்தல் என்பது இவ்வளவுதானா? " என்று நினைத்த குரங்கிற்கும் தானும் மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
பசி எடுத்ததால் மீனவர்கள் இருவரும் வலையை குளத்தின் கரையில் வைத்துவிட்டு சற்று அருகிலிருந்த மரநிழலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு சற்று கண்ணயர்ந்து இளைப்பாறினார்கள். இந்த சந்தர்ப்பத்தைத்தானே mr குரங்கு எதிர்ப்பார்த்திருந்தது.
உடனே மரத்திலிருந்து இறங்கி தனது மீன் பிடி ஆசையை செயல்படுத்த முனைந்தது. குளக்கரையில் இருந்த வலையை தூக்கியது. அப்படி வீச வேண்டும் இப்படி இழுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டே வலையை வீசியது. அந்தோ பரிதாபம்! வலையை முறைப்படி வீசும் பயிற்சி அந்த குரங்குக்கு இல்லாததால் வலை அதன் மீதே விழுந்துவிட்டது. குரங்கு வலையில் வசமாக மாட்டிக்கொண்டது. தன்னை வலையிலிருந்து விடுவிக்க எவ்வளவோ போராடியும் குரங்கால் முடியவில்லை.
குரங்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மீனவர்கள் ஆத்திரமுற்றவர்களாய் ஆளுக்கொரு தடியை எடுத்து வந்து குரங்கை வலைக்குள்ளேயே போட்டு நையப்புடைத்து வலையிலிருந்து குரங்கை விடுவித்தனர். அது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்தது.
இன்று ஊழியம் என்பதும் அனேகருக்கு குரங்கு மீன் பிடித்த கதையாகத்தான் இருக்கிறது.
முறையான அடிப்படை வேதாகம கல்வி இல்லை. அதனால் வேதவசனங்களுக்கு தான்தோன்றித்தனமான விளக்கங்கள் கொடுக்கின்றனர். சீடர்கள் பைபிள் ஸ்கூல் சென்றார்களா? என்று எதிர்வாதம் செய்கின்றனர். சீடர்கள் இயேசுவோடு இருந்து 3 1/2 வருடங்கள் கற்றனர். இது தற்போதைய BTh படிப்புக்கு இணையானது. பவுல் வேத அறிஞர் கமாலியேலின் பாதப்படியிலிருந்து வேதத்தைக் கற்றார்.
மூத்த போதகர்களிடம் கொஞ்ச காலம் கூட இருந்து ஊழியத்தை கற்று பின் ஊழியம் செய்தல் குறைந்து கொண்டு வருகிறது.
வசனத்தில்தான் எழுப்புதல் உண்டாகிறது. வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா, கொரியாவில் எழுந்த எழுப்புதல்கள் இதை உறுதி செய்கின்றன. ஊழியர் நடனமாடினால் பயங்கர எழுப்புதல் என்கின்றனர். தாவீது உடன்படிக்கை பெட்டியை கொண்டு வரும்போது தெருவில்தான் நடனமாடினான். ஆலயத்தில் அல்ல.
ஊழியர் தள்ளிவிட்டு விழுந்தால் ஆவியானவரின் பயங்கர கிரியை என்கின்றனர். ஆவியானவர் காலூன்றி நிற்க செய்கிறார் விழத்தள்ளுகிறவர் அல்ல. எசே.2:1,2, அப்.2:14.
தங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தாததால் தங்கள் இஷ்டபடி ஊழியம் செய்கிறவர்களே அதிகம் (2பேது.1:10)

(WhatsApp News)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum