இள நரை - நரை முடி நீங்க...
Thu Mar 14, 2013 12:59 am
இன்றைய காலக்கட்டத்தில் இளசுகளுக்கு கூட நரை முடி பிரச்சனை உள்ளது. சுற்று
சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் என இன்றைய காலக்கட்டத்தில் உள்ள
தவிர்க்க முடியாக பிரச்சனைகளால் நரை முடி பலரை பாதிக்க செய்துள்ளது. நரை
முடியை முற்றிலும் ஒழிக்க கறிவேப்பிலையை உணவில் தினமும் சேர்த்துக்
கொண்டாலே போதுமானது. ஆனால் இதை செய்வதில் நம்மில் பலருக்கு பிடிக்காத
காரியம். சரி வந்த நரை முடியை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.
தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான்
பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு மற்றொரு தீர்வு,
வெந்தையத்தை இரவே ஊற விட்ட, காலையில் அதனை மைய அரைத்து அந்த விழுதை தலை
முடிவேர்களில் பேக் போல போட்டு, காய்வதற்குள் சியக்காய் கொண்டு அலசவும்.
வாரம் ஒரு முறை ஒரு கின்னத்தில் நல்லெண்ணெய், விலக்கெண்ணெய், தேங்காய்
எண்ணெய் மூன்றையும் சம அளவில் தேவையானவற்றை எடுத்து லேசாக சூடு செய்து, தலை
முடியில் தேய்க்கவும்.
சிறிது நேரம் கழித்து தலைமுடியின்
வேர்ப்பகுதிகளில் கைகளால் சிறு சிறு வட்ட சுழல் முறையில் மசாஜ் கொடுக்க
வேண்டும். அரை மணி நேரத்தில் எண்ணெய் போக முடியை சியக்காய் கொண்டு அல்லது
ஹெர்பல் ஷாம்பூவை தண்ணீரில் கலந்தோ உபயோகிக்கவும். நெல்லிகாயை சிறு சிறு
துண்டுகளாக்கவும், அதனுடன் புதினா, கறுவேப்பிலை. இவை மூன்றையும் தனிதனியாக
காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில்
கட்டி தொங்க விடுங்கள்.
மூன்று நாட்களில் கொற கொறப்பாக காய்ந்ததும்,
அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். இந்த பவுடரை வாரம் ஒரு
முறை, தலையில் பேக் போல போட்டு. காய்வதற்குள் அலசவும். இந்த பேக்கை தண்ணீர்
கலந்த எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ
டிகாஷன் என முடிக்கு உகந்த எதனுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம்
உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரை முடி வருவதற்கு
முன்பு செய்ய இது தான் சூப்பர் டிப்ஸ்.

Re: இள நரை - நரை முடி நீங்க...
Thu Mar 14, 2013 1:00 am
வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும்.
இதற்குப்
பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள
ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு
முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம்
வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
இந்த குறைபாட்டை நீக்க....
• சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் குளிக்க பயன்படுத்தலாம்.
•
இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன்
போன்றவற்றைச் சரிவிகிதமாக தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால்
நரைமுடியை 10 சதவிகிதம் தவிர்க்க முடியும்.
• பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
•
கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத்
தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக்
கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான
முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும்.
• ஷாம்பூ அடிக்கடி
பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கிண்ணம் தண்ணீரில்
ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில்
ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.
நன்றி: லங்காசிறி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum