கேழ்வரகு அல்வா
Sat Oct 22, 2016 7:52 am
ராகி அல்வா
தேவையான பொருட்கள்
கேழ்வரகு 1/2 கப்
நாட்டு கரும்பு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் 2 கப்
செக்குல ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1/2 கப்
முந்திரிப்பருப்பு 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
தண்ணீர் 3 கப்
நெய் 2 மேஜைக்கரண்டி
செய்முறை
1. ஒரு வடசட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
2. பிறகு கேழ்வரகு மாவை தண்ணீர் கொண்டு கட்டிகள் விழாமல் கூழ் போல கரைத்து கொள்ளவும். அது விழுது ( பேஸ்ட் ) பதத்திற்கு இருத்தல் நல்லது.
3. ஒரு அகன்ற கெனமான இரும்பு வடச்சட்டியில் கேழ்வரகு மாவு கரைசலை ஊற்றி சிறுதீயில் கிளறி கொண்டே இருக்கவும்.
4. 3 நிமிடங்களுக்கு பிறகு வடச்சட்டியில் நாட்டு கரும்பு சர்க்கரையையும் சேர்த்து ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
5. இப்பொழுது இடை இடையில் கொஞ்ச கொஞ்சமாக தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொண்டே கிளறவும்.
6. பிறகு இந்த முறையிலே அனைத்து தேங்காய் எண்ணெய்யையும் கேழ்வரகு கலவையில் சேர்த்து முடித்த பிறகு சிறுதீயில் ஒரு 5 நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கவும்.
7. இச்சமயத்துல எண்ணெய் முழுவதும் ஈர்க்கப்பட்டு இந்த கேழ்வரகு கலவை திரண்டு ஒரு பந்து போன்று பக்குவத்துல வரும்.
8. இப்பொழுது பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் வறுத்த நெய்யையும் சேர்த்து கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.
9. பிறகு இந்த வடச்சட்டியில் உள்ள கலவையை 3 நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கையில் எண்ணெய் கேழ்வரகு கலவையில் இருந்து வெளியேற தொடங்கும் சமயத்துல அடுப்பை அணைத்து விடவும்.
10. இப்பொழுது சுடச்சுட சுவையான பிரமாதமான பாரம்பரிய மிக்க கேழ்வரகு அல்வா ரெடி.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum