வளர்ச்சியை நோக்கி
Tue Sep 13, 2016 8:14 am
எனது வாஞ்சையும், உங்களது பங்கும் நமது சபை எல்லா நிலைகளிலும் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்பதே தேவ திட்டமும் எனது விருப்பமும் ஆகும். இந்த காரியத்தில் சபை விசுவாசிகளாகிய யாவரும் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
1. சபை ஆவிக்குரிய தரத்தில் வளர:
பரிசுத்தம்- தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்ததிற்கு அதிக முக்கியத்துவம் தாருங்கள். தேவனுக்கு பிரியமில்லாத காரியத்தை விட்டுவிலகுங்கள். அவர் பரிசுத்தர் ஆகவே நாமும் பரிசுத்தராக இருப்போம். 1பேதுரு 1:15, ஜெபம் - ஜெபிக்கிற ஆர்வம் நமக்குள் பெருகட்டும். தேவைக்காக மட்டுமல்ல தேவ சமூகத்தில் காத்திருக்க அவர் சத்தம் கேட்க தேவனோடு ஆழமான உறவு நமக்கு ஏற்படட்டும். சங் 63:1, யுதா 20:21, வேதவசனம் - ஆவிக்குரிய வளர்ச்சிக்கு வேத தியனம் மிக மிக முக்கியம். வேதத்தை வாசிக்கிறது மாத்திரம் அல்ல. அதை தியானிக்கவும் வேண்டும். வசனத்தின் மீது வாஞ்சையில்லாவிட்டால் கிறிஸ்துவுக்குள் நாம் ஆசீர்வதிக்கப்பட முடியாது. பிறருக்கும் நாம் ஆசீர்வாதமாக மாற முடியாது.
சத்தியத்தை சரியான முறையில் அறியாவிட்டால். விசுவாசத்தில் வளர முடியாது. குறிப்பாக சாத்தானின் ஆயுதங்களான சோர்வு, அவிசுவாசம், குழப்பம் போன்றவற்றினால் தாக்கப்படுவோம். எனவே அதிக ஜாக்கிரதையாக இருந்து உங்கள் வாழ்க்கையில் வசனத்திற்கு முதலிடம் கொடுங்கள். இயேசுகிறிஸ்து வசனத்தின் மூலமே பிசாசை ஜெயித்தார் என்பதை மறந்துபோகாதிருங்கள். எனவே தினமும் வேதம் வாசியுங்கள். வாசித்ததை தியானம் செய்யுங்கள். தியானித்ததை வாழ்க்கையில் நடைமுறை படுத்துங்கள். சங் 119:20, 40, 131, 1போதுரு 2:3, எபே 6:14, 2தீமெத் 3:16,17,
ஆவியின் நிறைவு (அந்நிய பாஷை பேசுதல்) – பரிசுத்த ஆவியின் நிறைவு இல்லாமல் ஜெபத்தில், வேத சத்தியத்தில், பரிசுத்தத்தில், ஊழியத்தில், தேவ சித்தத்தில் நிலைத்திருக்க முடியாது. ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டும் சில நிமிடங்கள் ஆவியில் நிறைதல் போதுமானது அல்ல. இது கடைசி காலம். ஆகவே ஆவியின் நிறைவு ஆவியின் சிந்தை, ஆவியின் கனிகள், ஆவியின் வரங்கள், ஆவியானவரின் வழிநடத்துதல் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் பிசாசு நம்மை ஏதாவது ஒரு காரியத்தில் வஞ்சித்து விடுவான். தேவ திட்டம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறாது. ஆகவே பரிசுத்த ஆவியின் நிறைவுக்குள் வாருங்கள். தினமும் ஒருமணி நேரம் ஜெபித்தால் அதில் 20 நிமிடங்களாவது அந்நிய பாஷையில் பேசுங்கள் அப்போது நிச்சயமாய் விடுதலை உண்டாகும். 2கொரி 3:17, 1தெசலோ 5:19, ரோம 8 அதிகாரம், எபே 3:16-19, எபே 1:13,4:30,
2. சபை எண்ணிக்கையில் வளர:
ஒரு சபை வளர்ச்சியடைய கீழ்காணும் காரியங்கள் உதவியாக இருக்கிறது என்பதை ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. சபை கட்டிடம், ஆராதனை, இசைக்கருவிகள், செய்தி, ஜெபம், சிறப்புக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், சமூகசேவைகள், அற்புத அடையாளங்கள், போதகரின் ஊழியம், மேற்கூறிய எல்லாவற்றை காட்டிலும் சபை வளர்ச்சியடைவதற்கான உண்மையான காரணம் ‘ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியை ஆதாயப்படுத்தி கொண்டுவருவதின் மூலம் தான் சபை வேகமாக வளர்கிறது’ இந்த கொள்கை ஆதி திருச்சபை முதற்கொண்டு இன்று வரை உலகமுழுவதிலும் உள்ள சபைகளில் நடந்து வருகிறது.
பிரியமானவர்களே! ஏன்? நமது சபையும் அவ்விதம் வளர கூடாது. ஆதி திருச்சபையில் அநேகர் தங்கள் வீடுகளை கூட்டம் நடத்த திறந்து கொடுத்தார்கள். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்ட பின்பு ஸ்தலசபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதுபோல் உங்கள் வீடு தேவனை மகிமைப்படுத்துகிற வீடாக, ஆத்துமாக்கள் இரட்சிக்கபடுகிற வீடாக மாறட்டுமே. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்களுடைய சாட்சியை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள். கொலே 4:15.
செயல்திட்டம்:
உங்களுக்கு நன்றாக தெரிந்த 10 நபர்களுடைய பேரை எழுதி அவர்களுக்காக ஒரு மாதம் முழுவதும் ஜெபியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் உங்கள் வீட்டுக்கு தேநீர் அருந்த அழைத்துப் பாருங்கள். 10 பேரில் 5 பேர் வந்தாலும் ஸ்தோத்திரம் அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்துங்கள். உடனே சத்தியத்தை கூறவேண்டாம். கொஞ்சம் இடைவேளைவிட்டு மீண்டும் அழைத்து உங்கள் சாட்சியை பகிர்ந்துகொள்ளுங்கள்.
மூன்றாவது சபையில் ஜெபக்குழு நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட படிவத்தை பயன்படுத்த தொடங்குங்கள். நிச்சயம் உங்கள் முயற்சிக்கு பலன் உண்டு. சீக்கிரம் உங்கள் வீடு ஜெபவீடாக மாறும். ஆமென்! ஒரு வேளை உங்களால் ஆட்களை கூட்டி வைக்க முடியும் ஆனால் ஜெபம் நடத்த முடியாது என்றால் சபையின் மூலம் நியமிக்கப்பட்ட சகோதர, சகோதரிகள் உங்களுக்கு உதவிசெய்ய போதகர் மூலம் அனுப்பப்படுவார்கள். அதிகமாக ஜெபியுங்கள், ஆயத்தப்படுங்கள், கட்டாயம் நாம் ஒரு ஜெபக்குழுவையாவது நடத்த வேண்டும் கர்த்தர் உதவிசெய்வார்.
3. சபை பொருளாதாரத்தில் வளர:
ஒரு விசுவாசியின் பொருளாதார தரம் உயரும்போது சபையின் பொருளாதார தரமும் உயரும். விசுவாசிகளில் அநேகர் பொருளாதாரத்தில் கஷ்டப்படுவதை பார்க்கிறோம். ஏன் இந்த நிலை? தேவனுடைய வாக்குதத்தங்கள் எங்கே? கர்த்தர் தவறு செய்வாரா? ஒருவேளை நாம் தசமபாகம் கொடுக்கிற விஷயத்தில் குறைவாய் இருக்கிறோமா? கிறிஸ்துவின் கட்டளையை ப10ரணமாக நிறைவேற்றுகிறீர்களா? மல்கியா 3:10 தேவனுடைய ஊழியம், சபை இவைகளை உங்களுடைய காணிக்கை, தசமபாகங்களினால் தாங்கி வருகிறீர்களா? 2தெசலோ 8:7-129:6-10, ஒருவேளை நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது தடைகள், தேவனுக்கு பிரியமில்லாத குணங்கள், சுபாவங்கள், பாவங்கள், இருக்குமானால் ஆசீர்வாதம் தடைபடும்.உதாரணம் யோசுவா7:10-13. ஊபா 28:15-30. இதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். உங்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் எண் 24:1,
நன்றி: ஆர்.ஸ்டேன்லி - ஆசீர்வாதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum