திருமணத்துக்கு முன், உங்கள் துணை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!
Fri Sep 09, 2016 10:04 pm
1. அவரது ஃபேஷன்
உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தாண்டி, அவரை எது சந்தோஷப்படுத்தும், தன்னை மறந்து குதூகலிக்கச் செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ளுங்கள். அவருக்குப் பிடித்தவற்றைச் செய்யும்போது, நீங்களும் அவருக்கு மிகப்பிடித்தவராகி விடுவீர்கள்!
2. அவரின் எதிர்காலக் கனவுகள்
உங்கள் துணையின் எதிர்காலக் கனவுகள் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதை நிறைவேற்ற உங்களால் ஆன சப்போர்ட்டை கொடுக்க முடியும். ஆரோக்யமான உறவுக்கு இது அஸ்திவாரம்!
3. அவருடைய குடும்பம்
உங்கள் துணை, வானத்தில் இருந்து வந்தவரில்லை. அவரை ஆளாக்கிய குடும்பத்துக்கு அதற்குண்டான மரியாதையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டியது குறித்த உங்கள் துணையின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
4. உணவுப் பழக்கங்கள்
இது சின்ன விஷயமாகத் தெரியலாம். ஆனால், இது மிகவும் முக்கியம். காபியா, டீயா, சாதமா, சப்பாத்தியா, மசாலாவா, சாலட்டா... எது அவர் நாவுக்கு நெருக்கம் என்று தெரிந்துகொண்டால், அவரின் ஒரு 'மூட் அவுட்' நாளை உங்களால் ஜாலி டே ஆக்கிவிட முடியும்!
5. அவர் பயப்படும் விஷயம்
அவர் ரசிக்கிற விஷயங்களைத் தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவர் பயப்படும் விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதும் முக்கியம். அப்போது, அவருக்குத் தைரியம் கொடுக்கும் ஐடியல் பார்ட்னராகலாம் நீங்கள்!
6. மாற்றிக்கொள்ள, மாற வேண்டிய விஷயங்கள்
உங்கள் துணை உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் விஷயங்கள், உங்கள் துணை உங்களுக்காக மாற வேண்டிய விஷயங்களை இருவரும் மனம்விட்டுப் பேசி அறிந்துகொள்ளுங்கள்!
ரொமான்ஸ் பூக்கட்டும் வாழ்க்கை முழுக்க...!
- தா . நந்திதா
(மாணவ பத்திரிகையாளர்)

- வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
- திருமணத்துக்குமுன்.. திருமணத்துக்குப்பின்... கலந்தாலோசிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் விஷயங்கள்!
- வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
- வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
- வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
Permissions in this forum:
You cannot reply to topics in this forum