திருமணத்துக்குமுன்.. திருமணத்துக்குப்பின்... கலந்தாலோசிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் விஷயங்கள்!
Tue Jul 07, 2015 1:55 pm
சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர்
1. சேமிப்பு மற்றும் செலவு செய்யும் பழக்கம்!
திருமணம் உறுதியானபின் சேமிக்கும் பழக்கத்தி னையும் மற்றும் செலவு செய்யும் பழக்கத்தினையும் ஒருவருக் கொருவர் பகிர்ந்துகொள்ளலாம். இதுநாள்வரை தனது வருமானத் திலிருந்து எப்படியெல்லாம் சேமித்து எந்தப் பொருள் மற்றும் சொத்தை வாங்கினீர்கள் என்பதை யும், மேலும் கடன் ஏதாவது பெற்றி ருந்தால், அதன் விவரத்தையும் (வீட்டுக் கடனோ, கல்விக் கடனோ, தனி நபர் கடனோ எதுவாக இருந்தாலும், கடன் தொகை எவ்வளவு என்பதை) ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது நல்லது.
2. எதிர்கால ஆசைகள், லட்சியங்கள்!
நம் ஒவ்வொருவருக்கும் நிறைய ஆசைகளும், லட்சியங் களும் இருக்கலாம். அத்தகைய ஆசைகளையும், நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் இருப்பின் அதனையும், இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு, சிலருக்கு, கார் வாங்க வேண்டும்; சொந்த வீடு வாங்க வேண்டும்; சுற்றுலாச் செல்ல வேண்டும் என்றும், தமது ஓய்வுக்காலச் செலவுக்கு சேமித்துவைக்க வேண்டும் என்றும் ஆசைகள் இருக்கும்.
இத்தகைய ஆசைகளை இருவரும் பகிர்ந்துகொண்டு, தங்களது திருமணத்துக்குப் பிறகு இத்தகைய ஆசைகளில் எது முக்கியமானது என்பதை வரிசைப் படுத்தி, அதனை எவ்வாறு நிறை வேற்றுவது என்றும், தனிப்பட்ட முறையில் செயல்படுவதா அல்லது இருவரும் இணைந்து செயல்படு வதா என்பதனை இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.
3. செலவு செய்யும் குணம் மற்றும் பொழுதுபோக்கு!
திருமணத்துக்குமுன், அவர வரின் செலவு செய்யும் குணத்தை யும், பொழுதுபோக்கும் முறையை யும் பகிர்ந்துகொள்வது நல்லது. செலவு செய்யும் விஷயத்தில் ஒருவரது அணுகுமுறை எப்படி என்பதையும் பொழுதுபோக்கு விஷயத்தில் ஒருவர் எப்படி என்பதையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நிதி தொடர்பான எண்ணங் களை இன்னும் பாசிட்டிவ்வானதாக மாற்றிக்கொள்ள முடியும்.
திருமணம் முடிந்தபின் தேனிலவுக்குச் சென்றுவந்த கையோடு, கண்டிப்பாக சற்று நேரம் ஒதுக்கி உங்கள் இருவரின் ஆசைகளையும், இலக்குகளையும் பட்டியலிடுங்கள். அதற்கு தேவைப்படும் வருடங்கள் / தொகைகள் ஆகியவற்றைத் தெளிவாகப் பட்டியலிடுங்கள்.
இத்தகைய இலக்குக்கு இருவரும் உயிர் ஊட்டி எவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். அதன்பின் அதை அடைவதற்கான காலத்தை, அதாவது 3, 4, 5, 10, 20 வருடங்கள் எனப் பிரித்து எழுதுங்கள். இதனால் உங்கள் வருமானத்துக்கு ஏற்ப செயல்படும் வழி தெளிவாகத் தென்படும். மேலும், இலக்கை அடைவதற்கு வருமானத்தை உயர்த்துவதற்கான வழிவகைகளை தேட வைக்கும். எதற்குக் கடன் வாங்க வேண்டும், எதையெல்லாம் முதலீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்பதற்கேற்ப செயல்பட வைக்கும்.
5. இருவரும் இணைந்து வங்கிக் கணக்கு ஆரம்பித்தல்!
தங்களின் நிதி நிலையைத் தொடர்ந்து பார்க்கவும், வரவு செலவைத் தெரிந்துகொள்ள, முதலில் இருவரும் சேர்ந்து வங்கியில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். இருவருக்கும் தனித்தனியாக இருந்தது, இன்று ஒருவராக மாற வேண்டும். இதனால் நமது செலவு எதை நோக்கி பயணம் செய்கிறது என்பதைத் தெளிவாக உணர முடியும். யார் இதில் அதிகம் சேமிப்பது, யார் அதிகம் செலவு செய்வது என்பது தெரியவரும். இவ்வாறு செய்வதால் வரும் காலத்தில் எதை ஏற்பது எதைத் தவிர்ப்பது என்று தெரிந்துகொண்டு வாழ்க்கையை மாற்றியமைக்கலாம்.
6. பட்ஜெட்டை உருவாக்குங்கள்!
தங்களுக்கென்று வாழ்க்கையில் பட்ஜெட் எழுதுவதற்கு ‘வரவு மற்றும் செலவு’ புத்தகம் கண்டிப் பாக இருத்தல் வேண்டும். மாதம் ஈட்டும் வருமானம் மற்றும் செலவு எல்லாம் குறிப்பிடப்பட வேண்டும். இதனைத் திருமணமான முதல் மாதத்திலிருந்தே எழுத ஆரம்பிக்க வேண்டும்.
மேலும், நாம் ஏற்கெனவே பேசிய நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை நிறைவேற்ற அதற்காக பட்ஜெட் போட்டு, நிதியை எப்படி முதலீடு செய்வது, எந்த இலக்குக்கு முதலீடு செய்வது, எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்வது என்ற குறிப்பை எழுதி வைத்து அதற்கேற்றாற்போல் செலவு செய்ய வேண்டும். இன்றைக்கு திருமணமான தம்பதி யர்கள் பின்பற்றும் விதிமுறையைத் தவிர்த்து (அதாவது, வரவு - செலவு = சேமிப்பு) நம் தாய் தந்தை முன்னோர்கள் கடைப்பிடித்த வரவு-சேமிப்பு= செலவு (லட்சியத் துக்கு முதலீடு செய்து, பிறகு செலவை கச்சிதமாகச் செய்தல்) என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
7. 30 நிமிட நிதி சார்ந்த உரையாடல்!
நாம் செய்யும் முதலீட்டு பயண மாகட்டும், முதலீட்டு தன்மையாகட்டும், செலவு தன்மை யாகட்டும், ஈட்டும் வருமானமாகட் டும், அடையும் இலக்காகட்டும் குடும்பத்தின் வரவாகட்டும், தொழில் சார்ந்த நிலையாகட்டும், இவை அனைத்தையும் முறையாக எடுத்துக்கூறி அதற்காக இப்போது இருக்கும் சூழ்நிலையைக் கலந்தாலோசித்து தாங்கள் இருவரும் தங்கள் கனவு இலக்கை நோக்கி முறை யாகப் பயணம் செய்கிறோமா என்பதை முறையாக ஆலோசிக்க வேண்டும். இதை வாரமோ, மாதமோ அல்லது வருடத்துக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக இருவரும் ஆலோசிக்க வேண்டும். மாதத்துக்கு 30 நிமிட மாவது நிதி சார்ந்த உரையாடல் நடப்பது நல்லது.
இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் உண்மையாக இருத்தல் வேண்டும். நிதி சார்ந்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் தெரிந்துதான் செய்ய வேண்டும். இதனை வாழ்க்கை முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டும். ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை யோசித்து, அதற்கான தீர்வை கவனமாகக் கையாண்டு யார் தவறு செய்தாலும் அதனை ஒருவர் மேல் திணிக்காமல் அன்பாக அரவணைத்து அத்தகைய தவற்றை சுட்டிக்காட்டி மறுமுறை செய்யாமல் இருக்கவும். அதனை அன்பாகச் சொல்லி மேலும் சிறப்படைய செய்தல் வேண்டும்.
9. பொறுப்பும், உழைப்பும்..!
இருவரும் தாங்கள் செய்யும் செயலினை பகிர்ந்துகொண்டு இந்த இந்த வேலைகளை யார் செய்ய வேண்டும் என பிரித்து அதனை அர்ப்பணிப்போடு செய்தல் வேண்டும். இப்படிச் செய்யும்போது ஒருவருக்கொருவர் உற்சாகத்துடனும், உணர்வுடனும் செய்து முடித்தால் உங்களின் உழைப்பு விரயமாகாமல், உங்களின் செயலில் வெற்றி பெறுவீர்கள். இதுவே, தாங்கள் இருவரும் கூட்டு முயற்சியாகச் சேர்ந்து செய்வதால் உங்களுக்குள் இருக்கும் உற்சாக மும், உங்களுடைய பலமும் பலவீனமும் தெரியவரும். அதனைச் சரிசெய்து மகிழ்ச்சியாக வாழலாம்.
குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே கணவன் - மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பதுதான். செலவு, சேமிப்பு, சிக்கனம் என்று சொல்லி வாழ்க்கையில் சந்தோஷங் களை இழந்துவிடக் கூடாது. மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து, எதிர்கால வாழ்வின் நிம்மதியை இழந்துவிடக்கூடாது. இன்றைய சந்தோஷத்துக்கும் நாளைய மகிழ்ச்சிக்கும் பங்கம் வராதபடியான ஒரு வாழ்க்கையை தம்பதிகள் அமைத்துக்கொண்டால், அந்தக் குடும்பம் எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்கும்.
இந்தியாவில் ஜியோனியின் முதலீடு!
ஸ்பைஸ், தி மொபைல் ஸ்டோர் என பல நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து விற்பனை செய்துவரும் சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி, இந்தியாவில் 317.50 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு மூலம் அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத் தயாரிப்பு அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என்று ஜியோனி இந்தியா நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்குப்பின் தாங்கள் ஈட்டும் வருமானத்துக்கு ஏற்ப அந்தக் கடனை எப்படித் திரும்பச் செலுத்துவது என்பதையும் முடிவு செய்யலாம். மேலும், தாய், தந்தையருக்கு எவ்வளவு பணம் ஒதுக்குவது என்பதைக் கலந்து ஆலோசித்துத் தீர்வு காண வேண்டியதும் அவசியம். திருமணத்துக்கு முன்னரே இதனைப் பற்றி பேசி முடிவெடுப்ப தால்,திருமணத்துக்குபின், தங்கள் மணவாழ்க்கையில் பிரச்னைகள் வராமல் தவிர்க்கலாம்.
2. எதிர்கால ஆசைகள், லட்சியங்கள்!
நம் ஒவ்வொருவருக்கும் நிறைய ஆசைகளும், லட்சியங் களும் இருக்கலாம். அத்தகைய ஆசைகளையும், நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் இருப்பின் அதனையும், இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு, சிலருக்கு, கார் வாங்க வேண்டும்; சொந்த வீடு வாங்க வேண்டும்; சுற்றுலாச் செல்ல வேண்டும் என்றும், தமது ஓய்வுக்காலச் செலவுக்கு சேமித்துவைக்க வேண்டும் என்றும் ஆசைகள் இருக்கும்.
இத்தகைய ஆசைகளை இருவரும் பகிர்ந்துகொண்டு, தங்களது திருமணத்துக்குப் பிறகு இத்தகைய ஆசைகளில் எது முக்கியமானது என்பதை வரிசைப் படுத்தி, அதனை எவ்வாறு நிறை வேற்றுவது என்றும், தனிப்பட்ட முறையில் செயல்படுவதா அல்லது இருவரும் இணைந்து செயல்படு வதா என்பதனை இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.
3. செலவு செய்யும் குணம் மற்றும் பொழுதுபோக்கு!
திருமணத்துக்குமுன், அவர வரின் செலவு செய்யும் குணத்தை யும், பொழுதுபோக்கும் முறையை யும் பகிர்ந்துகொள்வது நல்லது. செலவு செய்யும் விஷயத்தில் ஒருவரது அணுகுமுறை எப்படி என்பதையும் பொழுதுபோக்கு விஷயத்தில் ஒருவர் எப்படி என்பதையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் நிதி தொடர்பான எண்ணங் களை இன்னும் பாசிட்டிவ்வானதாக மாற்றிக்கொள்ள முடியும்.
4. திருமணத்துக்குப் பின்..!
திருமணம் முடிந்தபின் தேனிலவுக்குச் சென்றுவந்த கையோடு, கண்டிப்பாக சற்று நேரம் ஒதுக்கி உங்கள் இருவரின் ஆசைகளையும், இலக்குகளையும் பட்டியலிடுங்கள். அதற்கு தேவைப்படும் வருடங்கள் / தொகைகள் ஆகியவற்றைத் தெளிவாகப் பட்டியலிடுங்கள்.
இத்தகைய இலக்குக்கு இருவரும் உயிர் ஊட்டி எவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். அதன்பின் அதை அடைவதற்கான காலத்தை, அதாவது 3, 4, 5, 10, 20 வருடங்கள் எனப் பிரித்து எழுதுங்கள். இதனால் உங்கள் வருமானத்துக்கு ஏற்ப செயல்படும் வழி தெளிவாகத் தென்படும். மேலும், இலக்கை அடைவதற்கு வருமானத்தை உயர்த்துவதற்கான வழிவகைகளை தேட வைக்கும். எதற்குக் கடன் வாங்க வேண்டும், எதையெல்லாம் முதலீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்பதற்கேற்ப செயல்பட வைக்கும்.
5. இருவரும் இணைந்து வங்கிக் கணக்கு ஆரம்பித்தல்!
தங்களின் நிதி நிலையைத் தொடர்ந்து பார்க்கவும், வரவு செலவைத் தெரிந்துகொள்ள, முதலில் இருவரும் சேர்ந்து வங்கியில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். இருவருக்கும் தனித்தனியாக இருந்தது, இன்று ஒருவராக மாற வேண்டும். இதனால் நமது செலவு எதை நோக்கி பயணம் செய்கிறது என்பதைத் தெளிவாக உணர முடியும். யார் இதில் அதிகம் சேமிப்பது, யார் அதிகம் செலவு செய்வது என்பது தெரியவரும். இவ்வாறு செய்வதால் வரும் காலத்தில் எதை ஏற்பது எதைத் தவிர்ப்பது என்று தெரிந்துகொண்டு வாழ்க்கையை மாற்றியமைக்கலாம்.
6. பட்ஜெட்டை உருவாக்குங்கள்!
தங்களுக்கென்று வாழ்க்கையில் பட்ஜெட் எழுதுவதற்கு ‘வரவு மற்றும் செலவு’ புத்தகம் கண்டிப் பாக இருத்தல் வேண்டும். மாதம் ஈட்டும் வருமானம் மற்றும் செலவு எல்லாம் குறிப்பிடப்பட வேண்டும். இதனைத் திருமணமான முதல் மாதத்திலிருந்தே எழுத ஆரம்பிக்க வேண்டும்.
மேலும், நாம் ஏற்கெனவே பேசிய நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை நிறைவேற்ற அதற்காக பட்ஜெட் போட்டு, நிதியை எப்படி முதலீடு செய்வது, எந்த இலக்குக்கு முதலீடு செய்வது, எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்வது என்ற குறிப்பை எழுதி வைத்து அதற்கேற்றாற்போல் செலவு செய்ய வேண்டும். இன்றைக்கு திருமணமான தம்பதி யர்கள் பின்பற்றும் விதிமுறையைத் தவிர்த்து (அதாவது, வரவு - செலவு = சேமிப்பு) நம் தாய் தந்தை முன்னோர்கள் கடைப்பிடித்த வரவு-சேமிப்பு= செலவு (லட்சியத் துக்கு முதலீடு செய்து, பிறகு செலவை கச்சிதமாகச் செய்தல்) என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
7. 30 நிமிட நிதி சார்ந்த உரையாடல்!
நாம் செய்யும் முதலீட்டு பயண மாகட்டும், முதலீட்டு தன்மையாகட்டும், செலவு தன்மை யாகட்டும், ஈட்டும் வருமானமாகட் டும், அடையும் இலக்காகட்டும் குடும்பத்தின் வரவாகட்டும், தொழில் சார்ந்த நிலையாகட்டும், இவை அனைத்தையும் முறையாக எடுத்துக்கூறி அதற்காக இப்போது இருக்கும் சூழ்நிலையைக் கலந்தாலோசித்து தாங்கள் இருவரும் தங்கள் கனவு இலக்கை நோக்கி முறை யாகப் பயணம் செய்கிறோமா என்பதை முறையாக ஆலோசிக்க வேண்டும். இதை வாரமோ, மாதமோ அல்லது வருடத்துக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக இருவரும் ஆலோசிக்க வேண்டும். மாதத்துக்கு 30 நிமிட மாவது நிதி சார்ந்த உரையாடல் நடப்பது நல்லது.
8. ஒளிவுமறைவு இல்லாமல்..!
இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் உண்மையாக இருத்தல் வேண்டும். நிதி சார்ந்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் தெரிந்துதான் செய்ய வேண்டும். இதனை வாழ்க்கை முடியும் வரை கடைப்பிடிக்க வேண்டும். ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை யோசித்து, அதற்கான தீர்வை கவனமாகக் கையாண்டு யார் தவறு செய்தாலும் அதனை ஒருவர் மேல் திணிக்காமல் அன்பாக அரவணைத்து அத்தகைய தவற்றை சுட்டிக்காட்டி மறுமுறை செய்யாமல் இருக்கவும். அதனை அன்பாகச் சொல்லி மேலும் சிறப்படைய செய்தல் வேண்டும்.
9. பொறுப்பும், உழைப்பும்..!
இருவரும் தாங்கள் செய்யும் செயலினை பகிர்ந்துகொண்டு இந்த இந்த வேலைகளை யார் செய்ய வேண்டும் என பிரித்து அதனை அர்ப்பணிப்போடு செய்தல் வேண்டும். இப்படிச் செய்யும்போது ஒருவருக்கொருவர் உற்சாகத்துடனும், உணர்வுடனும் செய்து முடித்தால் உங்களின் உழைப்பு விரயமாகாமல், உங்களின் செயலில் வெற்றி பெறுவீர்கள். இதுவே, தாங்கள் இருவரும் கூட்டு முயற்சியாகச் சேர்ந்து செய்வதால் உங்களுக்குள் இருக்கும் உற்சாக மும், உங்களுடைய பலமும் பலவீனமும் தெரியவரும். அதனைச் சரிசெய்து மகிழ்ச்சியாக வாழலாம்.
10. ரசித்து வாழுங்கள்!
குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே கணவன் - மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பதுதான். செலவு, சேமிப்பு, சிக்கனம் என்று சொல்லி வாழ்க்கையில் சந்தோஷங் களை இழந்துவிடக் கூடாது. மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து, எதிர்கால வாழ்வின் நிம்மதியை இழந்துவிடக்கூடாது. இன்றைய சந்தோஷத்துக்கும் நாளைய மகிழ்ச்சிக்கும் பங்கம் வராதபடியான ஒரு வாழ்க்கையை தம்பதிகள் அமைத்துக்கொண்டால், அந்தக் குடும்பம் எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்கும்.
இந்தியாவில் ஜியோனியின் முதலீடு!
ஸ்பைஸ், தி மொபைல் ஸ்டோர் என பல நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து விற்பனை செய்துவரும் சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி, இந்தியாவில் 317.50 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு மூலம் அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத் தயாரிப்பு அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என்று ஜியோனி இந்தியா நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum