மார்ட்டின் லூத்தர் ஒர பிரசங்கத்தில்
Mon Aug 29, 2016 8:30 am
மார்ட்டின் லூத்தர் ஒரு பிரசங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சாத்தான் ஒரு மாநாடு கூட்டி, தன்னுடைய பிசாசுகளையெல்லாம் அதற்கு வரவழைத்து, அவர்கள் செய்துவரும் தொண்டுகளைப்பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டான். அப்பொழுது அம்மாநாட்டில் ஒரு பிசாசு எழுந்து நின்று: கிறிஸ்தவர்களில் சிலர் கூட்டமாக ஒரு வனாந்தரத்தைக் கடந்துகொண்டிருக்கும்பொழுது, நான் காட்டு விலங்குகளை ஏவி அவர்களைக் கொன்றொழிக்குமாறு தூண்டினேன். அவ்வாறே அக்கிறிஸ்தவர்களை அவ்வனவிலங்குகள் பீறீப்பட்சித்துப் போட்டன. அவர்களுடைய எலும்புகள் இப்பொழுது வனாந்தரத்தில் உலர்ந்துகொண்டிருக்கின்றன என்று கர்ச்சித்தது.
அப்பொழுது சாத்தான் மாறுத்தரமாக: அவர்களுடைய சரீரம் செத்து எலும்புகள் உலர்ந்தால் நமக்கு யாது பயன்? அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான்.
இன்னொரு பிசாசு எழுந்து நின்று: கிறிஸ்தவர்கள் குழுமியிருந்த ஒரு கப்பலின்மீது பலத்த காற்று அடிக்குமாறு செய்து, அக்கப்பலை மூழ்கச்செய்தேன் என்றது.
அப்பொழுது சாத்தான் அதற்கு விடையாக, அக்கிறிஸ்தவர்கள் கடலில் மூழ்கிச் செத்துப்போனதால் நமக்கு லாபம் என்ன? அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான்.
மற்றொரு பிசாசு எழும்பி நின்று: ஒரு மனிதனை ஆத்தும இரட்சிப்பைப்பற்றிக் கவலையற்று நிர்விசாரமாய் இருக்குமாறு, பின்னர் மனந்திரும்பிக் கொள்ளலாமென்றும் பத்து ஆண்டுகளாகச் சோம்பலோடு நிர்விசாரமாய் இருக்குமாறு செய்துவிட்டேன். இப்பொழுது அவன் நம்முடையவன் என்றது.
அப்பொழுது சாத்தான் வெற்றிமுரசு கொட்டி, அப்பேயை பாராட்டிப் பெரிதும் அகமகிழ்ந்தான். நரகமும் பிசாசுகணங்களும் பரித்து ஆரவாரம் செய்தன.. என அந்த பிரசங்கங்கத்தில் மார்ட்டின் லூத்தர் குறிப்பிட்டார்.
நம்மில் அநேர்கருக்கு மனந்திரும்புவதற்குச் சோம்பல். செய்த தவறுக்கு மன்னிப்புப் பெறுவதற்குச் சோம்பல். இரட்சிக்கப்பின் அனுபவத்தில் நிலைத்திருப்பதற்கு சோம்பல். கிறிஸ்துவை அனுதின வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வதற்குச் சோம்பல். பரிசுத்தம் அடைவதற்குச் சோம்பல். பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்வதற்குச் சோம்பல். ஜெபிப்பதற்குச் சோம்பல். வேதம் வாசிப்பதற்குச் சோம்பல். சுவிசேஷ ஊழியத்தில் சோம்பல். சாட்சி பகருவதில் சோம்பல். ஆத்தும ஆதாயம் செய்வதில் சோம்பல். ஏழைகளையும், அனாதைகளையும், விதவைகளையும், திக்கற்றோர்களையும் ஆதரிப்பதற்குச் சோம்பல். ஆலயம் செல்வதற்குச் சோம்பல். தசமபாகம் கொடுப்பதற்குச் சோம்பல் என பலநேரங்களில் நம்மையும் அறியாமல் நாம் சோம்பேறிகளாக மாறிவிடுகின்றோம்.
சோம்பல் காரணமாக எண்ணிறைந்த ஆத்துமாக்கள் நரகம் செல்கிறார்கள். நம்மை நரக அக்கினிக் கடலிலே தள்ளும் சோம்பலைக் குறித்து நாம் மிக மிக ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். வெளிப்பார்வைக்கு வெகு அற்பமாகத் தோன்றும் சோம்பல் நம்மையும் நம் சரீரத்தையும் ஆவியையும், ஆத்துமாவையும் அழித்துவிடும். அசதியாயிராமல் ஜாக்கிரதையாக இருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள் (ரோ.12:11) என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிகின்றது.
நீங்கள் அசதியாயிராமல் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினதலும், நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் புரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம் (எபி.6:11-12). சோம்பலை முறித்து கிறிஸ்துவுக்குள் உற்ச்சாகமாய் வெற்றி நடை போடுவோம். ஆமென்......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum