தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பிரசங்கத்தில் உதாரணங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பிரசங்கத்தில் உதாரணங்கள் Empty பிரசங்கத்தில் உதாரணங்கள்

Mon Sep 02, 2013 9:03 am
பிரசங்கத்தின் அறிமுகம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்த இதழில் ஆராயந்தோம். இதுவரை பிரசங்கத்தின் மிக முக்கியமான அம்சங்களை எல்லாம் தெளிவாகவும், விரிவாகவும் பார்த்து வந்திருக்கிறோம். பிரசங்கத்தின் உள்ளமைப்பு சம்பந்த மான இன்னுமொரு அம்சத்தை இந்த இதழில் பார்க்கப் போகிறோம். இது பிரசங்கத்தில் பிரசங்கிகள் பயன்படுத்த வேண்டிய உதாரணங்களைப் பற்றியது.
பிரசங்கி, பிரசங்க வாக்கியத்தை இலக்கண பூர்வமாக ஆராய்ந்து அதன் முக்கிய போதனையை விளங்கிக்கொண்டு அதன் அடிப்படையில் பிரசங் கத்தைத் தயாரித்து ஆத்துமாக்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றபோது அந்தப் பிரசங்கத்தில் கொடுக்கப்படுகிற போதனைகளுக்கு தகுந்த உதாரணங் களைக் காட்டி விளக்குவது அவசியம். உதாரணங்கள் விளக்கப்படுகின்ற சத்தியத்தை பளிச்சென்று புரியவைக்க உதவுகின்றன. பல வசனங்களின் முலம் நாம் விளக்குகின்ற செய்தியை அவை சிறுநொடியில் இடிபோல் இதயத்தைத் தாக்கி விளங்க வைக்கின்றன. உதாரணத்திற்கு இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில் பயன்படுத்தியுள்ள சில உதாரணங்களைக் கவனித்துப் பாருங்கள் (மத்தேயு 6:29, 30). நமது இருதயத்தில் கொடிய பாவங்களைத் தலைதூக்கவிட்டால் அவை நமது வாழ்க்கையையே கெடுத்துவிடும் என்பதை விளக்க இயேசு இந்த வசனங்களில் நமது சரீரம் பற்றிய உதாரணங்களைத் தந்து சத்தியத்தை விளக்குகிறார். இப்படி அநேக உதாரணங்களை இயேசு கிறிஸ்து தனது பிரசங்கங்கள் முழுவதும் பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கிறோம் (மத்தேயு 6:22, 23; 7:3, 4; 7:9, 10; 7:13, 7:16-19). இதைப் பற்றிக் குறிப்பிடும் பிசப் ஜே. சி. ரைல், “அவர் உதாரணத்திற்காகப் பயன்படுத்தாத, அவர் கண்ணில்படாத எந்தப் பொரு ளும் இருக்கவில்லை. . .அவர் போன பாதையில் நடந்து அவரைப் பின் பற்றப் பாருங்கள்” என்கிறார் (Upper Room, 48p, J. C. Ryle).

இதே முறையில் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் அனேக உதாரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எரேமியாவின் உதாரணங்களைக் கவனித்துப்பாருங்கள் – ஒன்றுக்கும் உதவாமற்போன கச்சை (13); குயவனும், களிமண்ணும் (18); கூடை நிறைந்த அத்திப் பழங்கள் (24). ஓசியாவின் கோமேரை எண்ணிப் பாருங்கள். ஓசியாவின் தீர்க்கதரிசனத் திற்கு ஒளியூட்டுவதே அந்தக் கோமேர்தான். அதேபோல் சங்கீதப் புத்தகத் திலும், நீதிமொழிகளிலும் இப்படி உதாரணங்கள் நிரம்பி வழிவதைப் பார்க்கலாம். புதிய ஏற்பாட்டில் பவுலும், பேதுருவும், யாக்கோபுவும் ஏனைய அப்போஸ்தலர்களும் தங்கள் செய்திகளில் தேவையான இடங்களிலெல்லாம் உதாரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பொருத்தமான உதாரணங்களின் பல்வேறு பயன்பாடுகள்
உதாரணங்கள் நாம் கொடுக்கும் செய்தியை விளங்கவைப்பதாக இருக்க வேண்டும். அதுவே அவற்றின் பிரதான நோக்கமாகும். நாம் விளக்குகின்ற சத்தியத்தை தெள்ளத் தெளிவாக புரிய வைப்பதாக உதார ணங்கள் இருக்க வேண்டும். உதாரணங்களைக் கொடுக்க வேண்டுமென்ப தற்காக உதாரணங்களைத் தேடி அலையக்கூடாது. அவசியமில்லாமல் உதாரணங்களைப் பயன்படுத்தக்கூடாது. எப்பொழுதும் பிரசங்கத்தில் நாம் முதலில் சத்தியத்தை விளக்க வேண்டும். அதற்குப்பிறகு அந்த சத்தியத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக்கூடியதாக இருக்கும் உதாரணங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே, முதலில் வருவது சத்தியம். அடுத்து வரவேண்டியது அந்த சத்தியத்தை நெஞ்சில் பதிய வைக்கும் உதாரணம். இது எல்லாப் பிரசங்கங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய முறையாகும்.
இந்த உதாரணங்கள் பழமொழிகளாக இருக்கலாம். உவமைகளாக இருக்கலாம். உருவகங்களாக இருக்கலாம். வாழ்க்கை சம்பவங்களாக இருக்கலாம். வரலாற்று அம்சங்களாக இருக்கலாம். நாமே உருவாக்குகின்ற கதையாகக்கூட இருக்கலாம். ஆனால், இவை பிரசங்கத்தில் சத்தியத்தை விளக்க அவசியமாக இருந்தபோதும் நாம் சொல்லப்போகிற செய்தியை விட இவற்றிலேயே நாம் அளவுக்குமீறிய கவனத்தை செலுத்தக்கூடாது. உதாரணங்களை எப்படி உணர்ச்சி வசப்படும் விதத்தில் சொல்ல வேண் டும் என்பதில் அக்கறை காட்டி மேடை நடிகனைப்போல பிரசங்க மேடையில் நடித்து மக்களைக் கவரப் பார்க்கிறவன் மெய்ப்பிரசங்கியாக இருக்க முடியாது. அவன் மனித உணர்ச்சிகளோடு விளையாடுகிற நயவஞ் சகன். அப்படிப் பிரசங்கிக்கிற போதெல்லாம் நெஞ்சை உலுக்குகிற விதத் தில் கதை சொல்லி கண்ணீர் விடுகிற தமிழ்நாட்டுப் பிரசங்கிகளை நானறிவேன். இந்த மனிதர்கள் பிரசங்க ஊழியத்தையே அசிங்கப்படுத்தும் அயோக்கியர்கள். இத்தகைய மேடை நாடகத்தை மார்டின் லொயிட் ஜோன்ஸ் ‘பிரசங்க விபச்சாரம்’ என்று அழைக்கிறார்.
பிரசங்க செய்தியை விளங்க வைப்பது உதாரணங்களின் பிரதான நோக்கமாக இருந்தபோதும் அவை மேலும் நான்கு விதங்களில் பயன் படுகின்றன என்று அல்பர்ட் என். மார்டின் விளக்குகிறார்.
(1) பிரசங்கத்தைக் கேட்பவர்களுடைய கவனத்தைக் கவருவதற்கு அவை உதவுகின்றன. ‘நான் உங்களுக்கு இப்போது ஒரு கதை சொல்லப போகிறேன்’ என்று பிரசங்கத்தை ஆரம்பித்தால் தூங் கிக் கொண்டிருப்பவர்களையும் அது தட்டியெழுப்பும். டாக்டர். ஜே. அடம்ஸ் உதாரணங்களின் வல்லமையான பயன்பாட்டைப் பின்வருமாறு விளக்குகிறார்: “ஒரு பிரசங்கி அமலேக்கியர்களைப் பற்றிப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது சபையில் பலர் கண்ணயரத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய தலைகளும் தூக்கக்கலக்கத்தால் ஆட ஆரம்பித்தன. அதைக் கவனித்த பிரச ங்கி ‘நான் இப்போது யுத்தகாலத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்லப்போகிறேன்” என்று கூறினார். திடீரென சபையார் நிமிர்ந்து உட்கார்ந்து கவனத்தோடு அவர் சொல்லப் போவதைக் கேட்பதில் குறியாக இருந்தார்கள். உதாரணங்கள் இந்த விதத்தில் பிரசங்கத்தைக் கேட்பவர்களுடைய கவனத்தை நம்பக்கம் இழுக்க உதவுகின்றன.
(2) உதாரணங்கள் சில வேளைகளில் பிரசங்கத்தைக் கேட்பவர் களுடைய இருதயத்தைத் திடீரெனத்தாக்கி அவர்களுடைய கவனத்தைத் திருப்ப உதவுகின்றன. தாவீது செய்த பாவத்தைச் சுட்டிக் காட்ட வந்த நாத்தான் ஒரு உவமையை அவன் முன் விளக்கி அவனுடைய இருதயத்தைத் தாக்கினான் (2 சாமுவேல் 12). ஆரம்பத்தில் தாவீது அதை உணராவிட்டாலும் நேரம் போகப் போக நாத்தான் சொல்லுவதன் பொருள் அவனுக்கு புரிய ஆரம் பித்தது. அவனுடைய இருதயமும் அவனைத் துன்புறுத்த ஆரம்பித்தது. மத்தேயு 28ல் இயேசு கிறிஸ்து தன்னுடைய நிலத்தை வாடகைக்குவிட்ட கேடான ஒரு மனிதனைப் பற்றிய உவமையை விளக்கி இறுதியில் அது யாரைக் குறிக்கிறது என்பதை இடிபோல் விளக்கினார். அத்தோடு, தேவ இராஜ்யத்துக்கான கனிகொடுப்ப வர்களுக்கு மட்டுமே அந்த இராஜ்யம் சொந்தமானது என்று கூறி கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய இதயத்தையும் தாக்கினார். தங்களைப் பற்றியே இயேசு பேசுகிறார் என்பதை அவர் களும் புரிந்து கொண்டார்கள். இந்த வகையில் உதாரணங்கள் கேட்போரின் கவனத்தை நம்பக்கம் ஈர்ப்பதற்கு உதவுகின்றன.
(3) உதாரணங்கள் பிரசங்கங்களை கேட்பதற்கு சுவையானதாகவும், கேட்பவர்களை ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும்படிச் செய்கின்றன. ஸ்பர்ஜன் இதில் கைதேர்ந்தவராக இருந்தார். அவர் பின்வரு மாறு கூறுகிறார்: “உதாரணங்கள் பிரசங்கத்தை அழகுபடுத்துவது போல் வீட்டை ஜன்னல்கள் அலங்கரிக்கின்றன. ஜன்னல் இல் லாத வீடு சிறையைப் போல இருக்கும். அந்த வீட்டை எவரும் வாடகைக்கு எடுக்கமாட்டார்கள். அதேபோல் உதாரணங்கள் இல்லாத பிரசங்கங்கள் கேட்பவர்களின் சரீரத்தை அசதியுறச் செய்யும். போதனையாகிய இறைச்சியில் இருக்க வேண்டிய உதாரணங்களாகிய உப்பைப்போட மறக்காதீர்கள்.
(4) இறுதியாக, “உதாரணங்கள் நாம் கேட்கும் சத்தியங்களை ஆத்துமாக்கள் மறக்காமல் மனதிலிருத்திக் கொள்ளுவதற்கு உதவுகின்றன” என்கிறார் அல்பர்ட் என், மார்டின். 1992ல் நான் தமிழ கத்தில் ஒரு கிறிஸ்தவ கன்வென்சனில் பேசினேன். அந்தக் கூட் டத்தில் பிரசங்கித்தபோது சத்தியத்தைக் கேட்பவர்களுடைய மனதில் பதிய வைப்பதற்காக நான் பயன்படுத்திய ஒரு வார்த்தைப் பிரயோகத்தை இன்றும் நினைவுகூறி என்னிடம் ஞாபகப் படுத்துபவர்களை தொடர்ந்து சந்திக்கிறேன். உதாரணங்கள் அந்த வகையில் சத்தியங்களை ஆத்துமாக்களின் இருதயத்தில் ஆழமாகப் பதியவைக்கின்றன.
உதாரணங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்
உதாரணங்களை என்னென்ன காரணங்களுக்காக பயன்படுத்த வேண் டும் என்று கூறினோமோ அந்தக் காரணங்களில் இருந்தே அவற்றை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் உருவாகின்றன. உதாரணங்கள் எல்லோராலும் பாராட்டப்படுபவை. அத்தோடு அவை கேட்பவர்களின் கவனத்தை ஈர்ப்பவை. இந்த வகையில் வலிமையுடையவையாய் உதாரண ங்கள் இருப்பதால் பிரசங்கி அவற்றைத் தன்னுடைய பிரசங்கங்களில் அதிகமாகவே பயன்படுத்திவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் உதாரணங்கள் கொடுக்க வேண்டிய வேத போதனைக்கான நேரத்தையும் மிஞ்சிவிடுகின்றன. வேதபோதனைகளை விளக்க வேண்டிய நேரத்தை ஆக்கிரமிக்கும் எதுவுமே பாவமாகும். உதார ணங்கள் போதனைகளை விளங்கிக் கொள்ளுவதற்கு மட்டுமே துணை செய்ய முடியும். அவற்றால் வேதபோதனைகளை அளிக்க முடியாது. வேத போதனைகளே இரட்சிப்புக்குரிய ஜீவனை அளிக்கின்றன. வெறும் உதாரணங்களால் அதனைச் செய்ய முடியாது. “நன்றாகப் பயிற்றுவிக்கப் பட்ட ஒரு சபை பன்னிரண்டு கரண்டி இனிப்புப் போட்ட காப்பியைக் குடித்து நாம் முகம் சுழிப்பதுபோல் தேவைக்கதிகமான உதாரணங்களைக் கொண்ட பிரசங்கத்தைக் கேட்டு முகம் சுழிக்கும்” என்கிறார் அல்பர்ட் என். மார்டின். ஸ்பர்ஜன் இதைப்பற்றிக் கூறும்போது “உதாரணங்களின் அவசியத்தை நாம் வலியுறுத்தினாலும் ஒரு வீட்டை அதன் ஜன்னல் தாங்காமலிருப்பதுபோல் உதாரணங்களும் பிரசங்கத்தைத் தாங்குவ தில்லை” என்கிறார். “அதனால் பிரசங்கத்தில் அதிகமாக உதாரணங்கள் இருப்பதாகாது. தேவைக்கதிகமாக ஜன்னல்கள் இருந்தால் வீட்டுக்கு ஆபத்து அதேபோல், அதிகமான உதாரணங்களால் பிரசங்கத்துக்கு ஆபத்து” என்கிறார் ஸ்பர்ஜன். மார்டின் லாயிட் ஜோன்ஸ், “உதார ணங்கள் நமக்கு ஊழியர்கள். அவற்றை நாம் சிறிதளவாகவும் கவனத் தோடும் பயன்படுத்த வேண்டும். என்னுடைய பல்லாண்டு காலப் பிர சங்க அனுபவத்தின் அடிப்படையில் நான் சொல்ல விரும்புவதென்ன வென்றால், தேவைக்கதிகமான உதாரணங்களை உங்களுடைய பிரசங்கத்தில் பயன்படுத்துவீர்களானால் உங்களுடைய பிரசங்கம் பலனில்லாமல் போய்விடும் என்பதுதான்” என்கிறார்.
வெளிப்படையானதும், தெளிவானதும், இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதுமான போதனைகளை விளக்க உதாரணங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. விளக்கப்படுத்த அவசியமேயில்லாத போதனை களை உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்க முயற்சிப்பது அந்த சத்தி யங்களை இழிவுபடுத்தும் செயலாகும். சபையார் தகுந்த அறிவில்லாதவர் களாகவும், சிந்திக்கும் பக்குவம் இல்லாதவர்களாகவும் இருந்தாலொழிய இலகுவாக புரியக்கூடிய போதனைகளை விளக்குவதற்கு உதாரணங் களைப் பயன்படுத்தக்கூடாது. தேவையில்லாமல் உதாரணங்களை பிரசங்கத்தில் சேர்ப்போமானால் அது பிரசங்கம் கேட்பவர்களுக்கு சலிப்பூட்டும். அந்தவகையிலான அனாவசியமான உதாரணங்கள் பிரசங் கத்தைப் பாழாக்கி கேட்பவர்களுக்கு எந்தப் பலனையும் கொடுக்காமல் போய்விடும்.
உதாரணங்களைப் பயன்படுத்தும் முறை
நம்முடைய அன்றாடப் பேச்சுவழக்கில் நாம் பழமொழிகளையும், உவமான, உவமேய, உருவகங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழிலக்கியம் படித்த பிரசங்கிகள் தமிழர் மத்தியில் குறைவாக இருப்பது இன்றைக்கு பிரசங்கத்தில் பயன்படுத்தும் மொழிநடை மோசமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். “அன்றாடப் பேச்சு வழக்கில் பழமொழிகளையும், உவமான உவமேயங்களையும் பயன்படுத்துங்கள். ஆரம்பத்தில் இது ஒரு மாதிரியாகப்பட்டாலும் போகப் போக அதன் பயன் தெரியும்” என்கிறார் அல்பர்ட் என். மார்டின்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே என்னுடைய மேசையில் சி. வேலுசாமி எழுதிய பழமொழிகளின் தொகுப்பு பக்கத்திலேயே இருப்பதைப் பார்க்கிறேன். அதை நான் அடிக்கடி வாசித்து பழமொழிகள் மறந்து விடாமல் இருக்கப் பார்த்துக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு பிரசங்கியும் இத்தகைய நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். அது பிரசங்க மொழிநடை தேர்ச்சி அடைய மிகவும் உதவும். தமிழ்மொழி பழமொழிகள், அடைமொழிகள், உவமைகள், உருவகங்கள் நிறைந்த அழகிய தொன்மையான மொழி. நாம் சத்தியத்தை விளக்கும்போது, அச்சத்தியம் ஆழமாகக் கேட்கிறவர்கள் மனதில் பதிய நமது மொழியின் அநேக சிறப்பான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஒருவருக்கும் பயந்தவனல்ல என்பதை விளக்கும்போது “பனங் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்று சொன்னால் அதில் அழுத்த மும், அர்த்தமும் அதிகமாக இருக்கிறது இல்லையா? நான் என்னுடைய இறையியல் மாணவர்களுக்கு போதிக்கும்போது அடிக்கடி பயன்படுத்தி யுள்ள ஓர் உதாரணம் ‘லட்டு’. முதலில், ‘லட்டு’ எனக்குப் பிடித்த ஒரு சுவையான இனிப்பு. அதைவிட அதன் பல அம்சங்கள் போதிக்கும் போது சில இடங்களில் சத்தியத்தை விளக்கப் பேருதவி செய்கின்றது.
ஸ்பர்ஜன் பழமொழிகளையும், உருவகங்களையும் பயன்படுத்துவதில் மிகத்திறமைசாலியாக இருந்தார். அவருடைய பிரசங்கங்களை வாசித்துப் பார்ப்பது கதை சொல்லும் முயற்சியில் தேர்ச்சி பெற உதவும். 18-ம் நூற் றாண்டின் பெரும் பிரசங்கியான ஜோர்ஜ் விட்பீல்டும் இதில் கைதேர்ந்தவராக இருந்தார். அவருடைய வாழ்க்கை சரிதத்தில் இது பற்றி எழுதப் பட்டிருக்கிறது. கதை சொல்லியே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பிரசங்கிகளுக்கும் சத்தியத்தை விளக்குவதற்கு பொருத்தமான கதைகளைத் தகுந்த இடங்களில் பயன்படுத்திய ஸ்பர்ஜனுக்கும், விட்பீல்டுக்கும் வெகுதூரம்.
தகுந்த உதாரணங்களைப் (பழமொழிகள், உருவகங்கள், நடைமுறைச் சம்பவங்கள் ஆகியவை) பெற்றுக்கொள்ளும் நமது முயற்சி முக்கியமாக பிரசங்கத்தைத் தயாரிக்கும்போதே நடைபெறுகின்றது. பிரசங்கத்தை ஒரளவுக்கு நல்லபடியாகத் தயாரித்து எழுத்தில் வடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அதற்குப்பிறகு அந்தப் பிரசங்கத்தை நீங்கள் திரும்பத் திரும்ப வாசித்து எங்கெங்கு பொறுத்தமான உதாரணங்கள் தேவைப்படும் என்பதை ஆராய வேண்டும். சிலவேளைகளில் உதாரணங்களை இலகுவாகத் தேடிவிடலாம். சிலவேளைகளில் அதற்காக நீங்கள் கடினமாக உழைக்க நேரிடும்.
உதாரணங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்வது?
வேதமே இதற்கு நமக்கு உதவும் அருமையான கருவியாக இருக்கிறது. பழைய ஏற்பாடு உதாரணங்களுக்கு அருமையான நூல். அதன் மானுடர்கள், அவர்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள், விசுவாசிகளின் வாழ்க்கை, தீர்க்கதரிசிகள் பயன்படுத்தியுள்ள உதாரணங்கள் என்று பழைய ஏற்பாடு முழுவதும் நாம் பயன்படுத்திக்கொள்ள அவசியமான உதாரணங்களை அள்ளிவீசுகின்றன. பழைய ஏற்பாடு நமக்கு கர்த்தரைப் பற்றிய போதனையை மட்டுமல்லாது இந்த விதத்திலும் பிரசங்கத்திற்குத் தேவையான உதாரணங்களைத் தருகின்றது. அதேவிதமாக புதிய ஏற்பாட்டிலும் இருந்து நாம் உதாரணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே நான் நமது மொழியிலுள்ள பழமொழிகள், உவமைகள், உவமான உவமேயங்கள், உருவகங்கள், பொருத்தமான கதைகளின் அவசியத்தை விளக்கியிருக்கிறேன். அத்தோடு அன்றாட வாழ்க்கைச் சம்பவங் களை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு பிரசங்கி தன்னுடைய கண்களையும் காதுகளையும் எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டும். அவன் அன்றாடம் பார்க்கின்ற, கேட்கின்ற காட்சிகள், செய்திகள், விஷயங்கள் தேவ செய்தியை விளக்குவதற்கு அவனுக்குப் பேருதவி செய்யும். நான் எப்போது தமிழ்நாட்டுக்குப் போனாலும் என்னுடைய நண்பர்கள் “ஐயா! நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இந்த அளவுக்கு நம்மூர் (தமிழ் நாட்டு) விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறீர்களே” என்று ஆச்சரிய மாகக் கேட்பார்கள். நாம் பிரசங்கம் செய்கிற, போதிக்கின்ற மக்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள், நாட்டு நடப்புகள் நாம் விளக்குகின்ற சத்தியத்தை ஆழமாக அவர்களுடைய மனதில் பதிய வைக்க உதவும். நமது பிரசங்கம் அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். (Preaching must be relevant). மக்களால் கிரகிக்க முடியாதபடி பிரசங்கம் இருந்துவிடக்கூடாது. சிலர் இப்படி அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை பிரசங்கத்தில் உதாரணம் காட்டுவதை பிரசங்கியின் ஆத்மீகக் குறைபாடாகவும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவாததாகவும் கருதுவார்கள். இது ஒரு தவறான கணிப்பு. இப்படி சிந்திக்கிறவர்கள் நல்ல பிரசங்கிகளாக வளரவே முடியாது.
கடைசியாக உதாரணங்கள் பற்றி ஒரு வார்த்தை. உதாரணங்கள் பிரசங்கத்திற்கு சேவகனாக இருக்கும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண் டும். பிரசங்கத்தில் கவனம் செலுத்தாமல் உதாரணங்களைத் தேடுவதில் மட்டும் காலத்தை செலுத்தி மேடை நாடகனாவதற்கு வழிதேடிக் கொள் ளக்கூடாது. பிரசங்கிகள் என்ற பெயரில் மேடை நடிகர்களை நாம் அளவுக்கு அதிகமாகவே பெற்று வைத்திருக்கிறோம். அதற்கு மத்தியில் மெய்ப்பிரசங்கியாக ஊழியம் செய்ய வேண்டியது நமது கடமை. “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்” என்பது தமிழ்மொழி. அதை நினைவுகூர்ந்து தகுந்த உதாரணங்களை அளவோடு பிரசங்கத்தில் பயன்படுத்தி சத்தியம் ஒளிவீசும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: திருமறை தீபம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum