வீட்டு கடனை விரைவில் செலுத்த மூன்று வழிகள்
Sat Aug 27, 2016 3:22 pm
வீட்டு கடன் பெற்றவர்கள் 15 அல்லது 20 வருடங்களில் திருப்பி செலுத்த வேண்டிய மாதத்தவணையை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே பெரும்பாலானோர் திருப்பி செலுத்தி விடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் திருப்பி செலுத்துவதை விடவும், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே செலுத்திவிடுவது பல விதங்களில் லாபமாக இருக்கும் என்று முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் தெரிவிக்கும் மூன்று வித ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
1) மாதம் தோறும் அதிகமாக செலுத்தலாம்
25 லட்சம் கடன் தொகையை 10 சதவிகித வட்டியில் 360 மாதங்கள் அதாவது 30 வருடங்களுக்கு ரூ.21,939 என்ற மாதாந்திர தவணை (ஈ.எம்.ஐ) மூலமாக செலுத்தப்படவேண்டும் என்பதாக வைத்துக்கொள்வோம். ஈ.எம்.ஐ என்ற மாதத்தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக ரூ.3,061 அதிகமாக சேர்த்து ரூ.25,000 ஆக திருப்பி செலுத்தி வரவேண்டும். அதன் காரணமாக 360 மாதங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை 216 மாதங்களில் செலுத்தப்பட்டு விடும். 30 வருடங்களில் தீரக்கூடிய கடன் ஏறக்குறைய 10 வருடங்கள் முன்னதாகவே திருப்பி செலுத்தப்பட்டிருக்கும்.
2) ஆண்டு தோறும் அதிகமாக செலுத்தலாம்
மேற்கண்ட கடன் தொகை கணக்குப்படி, முதல் வருடத்தில் மட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய மாதாந்திர தவணையை சரியாக திருப்பி செலுத்த வேண்டும். இரண்டாம் வருடத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் அதிகமாக திருப்பி செலுத்தி வரவேண்டும். முதல் வருடம் தவிர, அடுத்து வரக்கூடிய வருடங்களில் மாதத்தவணையை ரூ.5,000 வீதம் அதிகமாக திருப்பி செலுத்தி வந்தால் கடன் தொகையானது 360 மாதங்களுக்கு பதிலாக 103 மாதங்களில் திருப்பி செலுத்தப்பட்டு விடும்.
3)அசல் தொகையை அதிகப்படுத்தலாம்
மேலே குறிப்பிட்ட வீட்டுக் கடன் தவணை தொகையை முதலாவது வருடம் குறிப்பிட்ட கணக்குப்படியே செலுத்த வேண்டும். இரண்டாம் வருடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அசலுக்காக அதிகம் திருப்பி செலுத்த வேண்டும். உதாரணமாக வருடத்துக்கு ரூ.1 லட்சம் அதிகமாக அசல் தொகை திருப்பி செலுத்தப்படுகிறது என்றால் கடன் தொகையானது 360 மாதங்களுக்கு முன்பாக
159 மாதங்களிலேயே திருப்பி செலுத்தப்படும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum