கோவை புகழ் ஆனந்தாஸ் கடலைபருப்பு மசாலா கூட்டு
Fri Aug 19, 2016 6:48 pm
கோவை புகழ் ஆனந்தாஸ் கடலைபருப்பு மசாலா கூட்டு
இதன் சுவை அருமையாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான கொங்கு சமையல்.
இதை நீங்கள் கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மற்றும் பயன்படுத்தி செய்ய வேண்டும்.
நமது அப்பா அம்மா அவர்களின் பாட்டி, ஆத்தா, ஆயா சமையலை மிகவும் பெருமையாக பேசுவார்கள். அதற்கு முக்கியமானது அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள், விறகு அடுப்பு , மற்றும் சமையல் பொருட்க்கள். நம்மால் விறகு அடுப்புக்கு மாறமுடியாது. ஆதலால் நமது முன்னோர்கள் பயன்படுத்திய எண்ணெய் வகைகளை பயன்படுத்துவோம்.
வேர்கடலை எண்ணெய்ல ஓமேகா-6 உள்ளது இது மாரடைப்பை தடுக்கும். தேங்காய் எண்ணெய்ல கொழுப்பு குறைக்கும் நல்ல கொழுப்பு அடங்கி உள்ளது. நல்லெண்ணய் தான் நமது முன்னோர்கள் பயன்படுத்திய எண்ணெய் வகை. அக்காலத்தில் சித்தர்கள் பசுநெய்யையும், நல்லெண்ணெய்யை மட்டும் தான் அவர்கள் மருந்துகளிலும் பயன்படுத்தினார்கள்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு 1/2 கப்
உளுந்து அப்பளம் 10
சாம்பார் பொடி 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தாளிக்க
வேர்கடலை எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
கடுகு 1 /2 தேக்கரண்டி
உளுந்து 1தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
சின்ன வெங்காயம் 2 ( அம்மியில் நசுக்கியது )
பூண்டு பற்கள் 2 ( அம்மியில் நசுக்கியது )
செய்முறை
1. கடலைப்பருப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் பிரஷர் குக்கரில் கடலைப்பருப்பை போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத்தூள் தேவையான அளவு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
2. அப்பளங்களை 4 துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ளவும். வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அப்பளங்களை இட்டு பொறித்து எடுக்கவும்.
3. பருப்பு நன்கு வெந்ததும் அதில் பொறித்த அப்பளத்தை சேர்த்து நன்கு கிளறவும் அதில் வரமிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூளையும் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும். அப்பளங்கள் அனைத்தும் பருப்பு கலவையில் நன்கு கலந்து விட்டு விட்டதா என்று சரி பார்த்து கொள்ளவும்.
4. நன்றாக கிளறிய பின்னர் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும். சிறு தீயில் கிளறவும். அடிபிடிக்காமல் பார்த்து கொள்ளவும். உப்பையும் சரி பார்த்து கொள்ளவும்.
5. இன்னொரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து நன்கு வெடித்ததும் அதில் உளுந்து போட்டு வதக்கவும் பிறகு நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும், பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கி அதில் கறிவேப்பிலையை போட்டு நன்றாக பொறிந்ததும் அதை குக்கரில் உள்ள கடலைப்பருப்பு கலவையில் ஊற்றவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum