கரிசலாங்கண்ணி கீரை பருப்புக் கூட்டு
Sat Oct 24, 2015 9:40 pm
கரிசலாங்கண்ணி கீரை பருப்புக் கூட்டு
=====================================
கரிசலாங்கண்ணி பருப்புக்கூட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
=====================================
கரிசலாங்கண்ணி பருப்புக்கூட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
கீரை- ஒரு கட்டு,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
வத்தல்- 4,
தேவையான அளவு புளி,
சிறிய வெங்காயம்- 4,
தேவையான அளவு உப்பு,
துவரம் பருப்பு- 150 கிராம்,
வெங்காயம்- 4,
பச்சை மிளகாய்-2,
தேவையான அளவு சமையல் எண்ணெய்,
தக்காளி- 4,
கடுகு ஒரு தேக்கரண்டி,
சிறிதளவு கறிவேப்பிலை,
பூண்டு 6 பல்,
மஞ்சள் தூள் 2½ தேக்கரண்டி,
சீரகத்தூள்- 2½ தேக்கரண்டி.
செய்முறை:-
• கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
• தேங்காய், புளி, வத்தல், சிறிய வெங்காயம், பூண்டு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
• தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயினை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
• துவரம் பருப்பில் கல் நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
• அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி, தேவையான தண்ணீரில் பருப்பை வேகவிடவும், பருப்பு வெந்த பிறகு அதில் கீரையை கொட்டி ஒரு கொதி நிலைக்கு வேகவிடவும், தேவையான உப்பை போட்டு, மஞ்சள், சீரகத்தூள் சேர்க்கவும்.
• அரைத்த விழுதை கொட்டி கிளறவும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வேக விடவும், மிகவும் கெட்டியான பதத்தில் இருக்குமானால் சிறிது தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
• நன்றாக வெந்த நிலையில் மற்றொரு கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கீரை கூட்டில் கலந்து இறக்கி விட வேண்டும்.
• இப்போது சாப்பிடுவதற்கு சுவையான கரிசலாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு தயாராகி விடும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum