காரசாரமான நண்டு குழம்பு
Fri Aug 05, 2016 8:37 am
காரசாரமான நண்டு குழம்பு
தேவையான பொருட்கள் :
கடல் நண்டு 3 ( சுத்தம் செய்தது 10 துண்டுகள் )
வெங்காயம் 2 பெரியது ( பொடியாக அரிந்தது )
தக்காளி 3 பெரியது ( பொடியாக அரிந்தது )
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 4
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
மசாலா அரைக்க
தேங்காய் துருவல் 1/2 கப்
கசகசா 1 மேஜைக்கரண்டி
மிளகு 1 மேஜைக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
செய்முறை
1. நண்டை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
2. மிக்சியில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அந்த கலவையில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும் அதை நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
5. இப்பொழுது அந்த கலவையில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம்மசாலா தூளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து 30 நிமிடம் வரை வதக்கவும் .
6. அதில் சுத்தம் செய்யப்பட்ட நண்டு துண்டங்களை சேர்த்து மசாலா கலவையில் சேர்த்து ஒன்றாக கலக்கி வதக்கவும்.
7. மிக்சியில் தேங்காய் துருவல் , கசகசா, மிளகு மற்றும் சோம்பை சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
8. அரைத்த இந்த கலவையை நண்டு மசாலாவில் சேர்க்கவும்.
9. நன்றாக கலக்கி மூடி போற்று மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும் அதன் பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவவும் .
10. வெந்ததும் இறக்கி விட்டு சாதத்துடன் பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum