சுவையான நண்டு பொரியல்
Thu Aug 08, 2013 9:51 pm
தேவையான பொருட்கள்
நண்டு - 6
சீரகம் - அரைத் தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 3
மிளகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
புளி - சாறு 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை
நண்டு - 6
சீரகம் - அரைத் தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 3
மிளகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
புளி - சாறு 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் வற்றல் முதலியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி புளிச்சாறு உப்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலக்க வேண்டும்.
பிறகு அதில் நண்டை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் மூடி தீயை குறைத்து வைத்து சுருள சுருள கிண்டி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்க வேண்டும். நண்டு வேக வைக்கவும் போது ஓடுகளை தட்டி ஓட்டை செய்து மசாலாவை உள்ளே விட வேண்டும். அப்போதுதான் நண்டு உள்ளே மசாலா சாறு ஏறும்.
நன்றி: கீற்று
Re: சுவையான நண்டு பொரியல்
Thu Aug 08, 2013 9:52 pm
நண்டு மசாலா குழம்பு
தேவையான பொருட்கள்
நண்டு - 6
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
அரைப்பதற்கு மசாலா பொருட்கள்:
தேங்காய் - கால் மூடி
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி - ஒன்றரை அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 7
பூண்டு - 1
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
புதினா - சிறிதளவு
செய்முறை
நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து சதைப் பகுதியை எடுத்துத் தயிருடன் கலக்கி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்க வேண்டும். பிறகு அரைத்த மசாலாவை இதில் போட்டு, சிறிது நேரம் வதக்க வேண்டும். எலுமிச்சை ரசத்தைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
தயிருடன் உள்ள நண்டுக்கறியை இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பைச் சேர்க்க வேண்டும். அரைமூடி தேங்காயைத் துருவி பால் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நண்டுக்கறி வெந்தவுடன் தேங்காய்ப்பாலை ஊற்றி லேசாக கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
Re: சுவையான நண்டு பொரியல்
Thu Aug 08, 2013 9:53 pm
நண்டு மசாலா:
தேவையான பொருட்கள்:
நண்டு – 10
காய்ந்த மிளகாய் - 2
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - 5 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
தக்காளி - 2 கப் (நறுக்கியது)
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் நன்கு அலசி, இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும், கொத்தமல்லியையும் கழுவி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, நறுக்கி, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சற்று பெரிய வாணலியாக எடுத்துக் கொண்டு, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கவும். விழுதுகளின் நீர் ஆவியாகும் வரை வதக்கி, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு, அடிப் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் ஊற்றி, தீயின் அளவைக் கூட்டி நன்கு வதக்கவும்.
எண்ணெய் விடும் வரை வதக்கவும். அதன் பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும். சுமார் இரண்டு நிமிடங்கள் புரட்டிய பின் நண்டுகளையும், கறிவேப்பிலையையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தீயின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையினைத் தூவி பரிமாறவும்.

Thu Aug 08, 2013 9:54 pm
நண்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
நண்டு - ஒரு கிலோ
சோம்பு - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
வெங்காயம் - 3
நாட்டுத் தக்காளி - 4
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு புளியை கரைத்து ஊற்றி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும்.
Re: சுவையான நண்டு பொரியல்
Thu Aug 08, 2013 9:55 pm
நண்டு வறுவல்:
தேவையான பொருட்கள்
நண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் கப்
கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை
நண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் கப்
கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தம் செய்த நண்டில் நறுக்கிய வெங்காயத்தில் பாதி சேர்த்து பிறகு பாதி எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து கொண்டு பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் மீதி இருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பிறகு நண்டை போட்டு வேக விட வேண்டும். நண்டு சிவந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

Thu Aug 08, 2013 9:57 pm
நண்டு குருமா:
தேவையான பொருட்கள்
நண்டு - அரைக் கிலோ
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 1
பச்சை மிளகாய் - 10
சோம்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு
>
செய்முறை:
தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கியவற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பையும் வறுத்து எடுத்து, துருவியத் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலைத் தாளிக்க வேண்டும். பிறகு இதில் சுத்தம் செய்த நண்டு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், தக்காளி வெங்காயம் விழுது மற்றும் நண்டு நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். நண்டு வெந்ததும் தேவையான உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாற வேண்டும்.

Thu Aug 08, 2013 10:00 pm
சில்லி நண்டு - சைனீஸ் முறை
தேவையான பொருட்கள்:
நண்டு - அரை கிலோ
மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - ஒரு கப்
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - ஒரு கப்
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்க வேண்டும். அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிட வேண்டும்.
நீரின் அளவு, நண்டு துண்டங்கள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், பூண்டு இவையனைத்தையும் கொதிக்கும் குழம்பில் போட வேண்டும். ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிட வேண்டும்.
சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பினைக் கெட்டியாக்க அதில் சோளமாவினைச் சேர்க்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்க வேண்டும். சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum