வாய் துர்நாற்றம் நீங்க
Thu Aug 04, 2016 9:14 am
தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர்.
இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது. மிதமான அழுத்தம் கொடுத்து (படத்தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும்.
ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.
வாய் துர்நாற்றம் நீங்க
அஜீரணம், அதிக அமிலத்தன்மை, அதிகப் பித்தம் ஆகியவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். இதைப் போக்க சீரகத்தைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்தலாம். பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய்ப் புண் ஆகியவற்றாலும் துர்நாற்றம் ஏற்படலாம்.
இவை ஆரம்ப நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருப்பதால், அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது நல்லது. பிரண்டையைத் துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை வாயில் அசைபோடலாம். இந்தப் பொருட்கள் துர்நாற்றத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதுடன், அஜீரணத்தையும் குணமாக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum