செல்வ மகள் சேமிப்பு திட்ட முதலீடு
Fri Jul 29, 2016 10:24 pm
செல்வ மகள் சேமிப்பு திட்ட முதலீடு தமிழ்நாடு இரண்டாவது இடம்...!
அறிமுகமான 2 மாதங்களுக்குள் செல்வமகள் சேமிப்பு (சுகன்யா சம்த்ரி) திட்டத்தில் இந்திய நாடு முழுக்க 1.8 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடகா மாநிலத்தில் அதிகபட்சமாகவும், பீகாரில் குறைந்தபட்சமாகவும் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் செல்வ மகள் சேமிப்பு திட்டம் 2015 ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் 1 அல்லது 2 பெண் குழந்தைகளின் பெயரில் 10 வயது வரை சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்யாணத்துக்கு தேவையான பணத்தை அவர்களுடைய சிறுவயதிலிருந்தே முதலீடு செய்ய இத்திட்டம் உதவும்.
[size]
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலத்தில் 56,470 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
அடுத்து தமிழ்நாட்டில் 43,362 கணக்குகளும், ஆந்திர பிரதேசத்தில் 15,877 கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
டெல்லியில் (2,054), அரியானா (4,177), உத்தரபிரதேசம் (7,620) ஆகிய மாநிலங்களிலும் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்தில் 204 கணக்குகள் மட்டும் தொடங்கப்பட்டுள்ளன. கேரளாவில் 222 கணக்குகளும், மேற்கு வங்காளத்தில் 334 கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இச்சேமிப்பு திட்டத்தில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு (அதிகபட்சம் நிதி ஆண்டில் ரூ.1.50 லட்சம் வரை நிபந்தனைக்கு உட்பட்டு) 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை உண்டு. இந்த முதலீட்டுக்கு ஆண்டு வட்டி 9.1% வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானத்துக்கு வரி கட்ட தேவை இல்லை.
[/size]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum