வெந்தய கஞ்சி
Thu Jul 21, 2016 6:06 pm
தமிழ் சமையல் முறைகள் 2ம் ஆண்டில்
Page Liked · 8 hrs ·
வெந்தய கஞ்சி
***********************
அரிசி - 100 மில்லி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
தேங்காய் - 1 (தேங்காய் துறுவி கெட்டி பால் எடுக்கவும்) சீனி - தேவையான அளவு
முதலில் அரிசியை கழுவி அதில் வெந்தயம், வெள்ளை பூண்டு தோல் நீக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
நன்கு வெந்ததும் இறக்கி ஒரு மத்தால் கடைந்து கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து தேங்காய் பால் ஊற்றி கொதித்ததும் சீனி சேர்த்து இறக்கவும்.
Re: வெந்தய கஞ்சி
Thu Jul 21, 2016 6:07 pm
கொண்டைக்கடலை பிரியாணி
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை – 1/2 கப்
பாஸ்மதி அரிசி – 2 கப்
தயிர் – 1/2 கப்
வெங்காயம் – 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
பிரியாணி மசாலா – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் + நெய் – 1 மேஜை கரண்டி
பட்டை – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1
செய்முறை :
• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொண்டைக்கடலை 5 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு 5 விசில் வரும் வரை போட்டு வேகவைத்து கொள்ளவும்.
• குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
• இத்துடன் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா நன்றாக சேர்த்து கிளறவும். பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு அரிசியினை கழுவி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
• இத்துடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
• குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து அத்துடன் 1 தேக்கரண்டி நெய், எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு முறை கிளறிவிடவும்.
• சுவையான சத்தான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி. இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கடலைக்கறி
கறுப்பு கொண்டைக்கடலை - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - 6 + 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும்.
வதக்கி கொதிக்க வைத்தவற்றுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
இந்த கலவையில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கடலை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்..
கலவை நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum