வெந்தய மிக்சர் என்னென்ன தேவை?
Sat Oct 24, 2015 9:11 pm
வேக வைத்து வடித்த வெந்தயம் – 1 கப், கடலை மாவு – கால் கப், சோம்பு – தாளிப்பதற்கு, கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதிலேயே கடலை மாவையும் சேர்த்து, லேசாக வறுக்கவும்.
மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து வறுக்கவும். வேக வைத்து, தண்ணீரை நன்கு வடித்த வெந்தயத்தை அதில் சேர்த்து, குறைந்த தணலில் வைத்து வதக்கவும்.
வெந்த வெந்தயத்தில் உள்ள தண்ணீரே அது வதங்கப் போதுமானதாக இருக்கும். கலவை நன்கு உதிர் உதிராக வறும் வரை வதக்கி, ஆறியதும், காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைக்கவும்.
இதை தினம் 1 டீஸ்பூன் வெறுமனே சாப்பிடலாம் அல்லது தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum