சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும்
Mon Mar 18, 2013 5:12 pm
சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா,
கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர்.
சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக
அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது
குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று
சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது.
சீரகசெடியின் காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
ஆனால் தமிழர்கள் இதை நீண்ட நெடுங் காலமாக உபயோகித்து வந்தனர் என்பது
தெரிகிறது .திருஅண்ணாமலையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் நெல்லுக்கு பதிலாக
சீரகம் அடைக்காய் முதலிய வாங்கிய செய்தி கிடைத்துள்ளது .
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற
எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol
–[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic]
வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல
மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்
கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர,
பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி
ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்
உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று
தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல்
போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால்,
அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து
அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.
பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது.
செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த
எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து
நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம்
சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன
அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று
தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி,
நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
பொதுவாக சீரகம்:
வெப்பமுண்டாக்கி stimulant
பசிதூண்டி stomachic
துவர்ப்பி astringent
வாய்வு அகற்றி carminative
மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை !
உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை !

Re: சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும்
Wed Oct 01, 2014 8:28 am
அலர்ஜி என்பது வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் நுழையும்போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவது ஆகும். இது உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்.
உடலில் தடிப்புகள் உருவாகும். உதடு வீங்கும். மூச்சு வாங்கும். அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். ஒவ்வாமையால் உடம் பில் கொப்பளம்போல் உருவாகும். அது வெடித்து புண் ணாகி அரிப்பு ஏற்பட்டு சீழ் உருவாகி காய்ச்சல் ஏற்படும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் ஒவ்வாமை ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபின் இ என்ற எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்கிறது.
இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்பு தன்மை மிகுந்த பொருள்கள் உருவாகின்றன. இதுபோன்ற வேதிப் பொருள்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற ஒவ்வாமைக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வீட்டில் உள்ள தூசில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் தூசில் நுண்ணுயிரிகள் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள்கூட சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவை வாயில் வைத்தவுடன் கூசும்.
முகச்சுளிப்பு கூட ஏற்படும். சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்பட லாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக் கொள்ளாமல் பிரச்சினை எற்படும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும். ஒவ் வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவை பாதிப்படையும்.
வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள் அதிக ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தை சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கச் செய்யும். முட்டை, பால், வேர்க்கடலை, கோதுமை, பாதாம் பருப்பு, மீன், நத்தை வகை போன்றவை 90 சதவீதம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை போன்றவைகளால் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.
மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவில் ஒவ்வாமை ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருள்களில் இவ்வகை புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லெட்டுகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.
பாதுகாப்பு முறைகள்
தூசு, பூக்களின் மகரந்த தூளினால் ஒவ்வாமை ஏற்படு பவர்கள் வெளியில் செல்லும்போது முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்லலாம். பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் தூய்மையான முறையில் பயன்படுத்தவேண்டும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை வாரம் ஒருமுறை சோப்பு போட்டு குளிப் பாட்டவும். வீட்டுக்கு வெளியே வைத்து அவற்றை பராமரிக் கலாம். முக்கியமாக படுக்கை அறையில் அனுமதிக்கக் கூடாது.
நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் ஒவ்வாமை வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவே துணியை துவைத்த பின் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வாமை பிரச்சினை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருள்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாள்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இதன் மூலம் மூக்கடைப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும்.
சில சிப்ஸ் வகைகள், சீன உணவு வகைகளில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. ஒவ்வாமைக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை தவிர்ப்பதன்மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வருவதன்மூலம் ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன்மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum