நுணாம்பழத்தின் மருத்துவ குணங்கள் . . .
Thu Aug 28, 2014 10:42 pm
நுணாம்பழத்தின் மருத்துவ குணங்கள் . . .
சமீபத்தில் திருவண்ணாமலை சென்றபோது கிரிவலப் பாதையில் 'நோனி பழரசம்' என்ற பெயரில் கருப்பு நிறத்தில் ஒரு சாற்றை பாட்டிலில் அடைத்து ஒரு நிறுவனத்தார் விற்றுக்கொண்டிருந்தார்கள். இது என்ன புதிதாக இருக்கின்றதே என்றென்னி அதைப்பற்றிய தகவல் ஏதாவது இணையத்தில் கிடைக்கின்றதா என்று தேடிப்பார்த்தால் எக்கச்சக்கமான உபயோகமான தகவல்கள் கிடைத்தது.
‘மொரின்டா சிட்ரி போலியா’ என்ற மரத்தில் இருந்து கிடைக்கும் பழம்தான் நோனி. நம்மூரில் இதனை நுணாம் பழம் என்றழைப்பதுண்டு. இந்த நோனிப் பழம் பதப்படுத்தி பழக்கூழாக்கப்பட்டு ‘நோனி’ பழச்சாறாக தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
நோனிப் பழச்சாறின் முக்கிய வேலை என்னவென்றால், உடலில் உள்ள கோடிக் கணக்கான செல்களை புத்துணர்ச்சியுடன் வைப்பது மட்டுமின்றி, அவற்றில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குவதும்தான். நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள் நோனி பழத்தில் உள்ளன.
இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.
நாம் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சோப்பு, பேஸ்ட் ஆகியவற்றில் கலந்துள்ள நச்சுத் தன்மையால் உடல் பாதிக்கப்படும் போது, அவற்றை நோனிப் பழச்சாறு வெளியேற்றி, உடம்பை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அதாவது செல்களில் படிந்துவிட்ட நஞ்சுக்களை நீக்கி, செல் சவ்வுகளை மிருதுவாக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
ரத்தத்தின் வழியாக நாம் சாப்பிடும் உணவில் உயிர் சத்துக்கள் செல்களை முழுமையாக கொண்டு போய் சேர்ப்பதில் நோனி தலை சிறைந்த தகவல் தொடர்பாளராக செயல்படுகிறது.
எனவே இதன் மூலம் நோனிப் பழச்சாறு என்பது சக்திவாய்ந்ததும், அதிக பாதுகாப்பானதும் என்று சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த பழமும் பழச்சாற்றிற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இப்போது இந்திய சந்தைகளில் நோனி மிகச் சிறந்த ஆரோக்கியம் காக்கும் பொருளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. டாக்டர்கள் மற்றும் டயட்டீசியன்கள் ஆகியோரால் பரிந்துரைக்கப்படும், உயிர்ச்சத்து பொருளாகிவிட்டது இந்த நோனி எனும் நுணாம் பழம்.
வயிறு, குடல் பகுதியில் உள்ள செல் சுவர்களை நோனி பழச்சாறு சுத்தப்படுத்தி, அவற்றின் செயல் திறனை அதிகரிக்கிறது. இதனால் குடலின் ஜீரணத் தன்மை அதிகரித்து, மலம் வெளியேறுவது, சிறுநீர் பிரிவது தொடர்பான பிரச்னைகள் நீங்கிவிடுகின்றன. மலச்சிக்கல்தான் பலச் சிக்கலை உருவாக்கும், என்பதால், அனைத்து சிக்கல்களுக்கும் காரணமான மலச்சிக்கலையே நோனி தீர்த்துவிடுகிறது.
மன அழுத்தத்துக்குக் காரணமாமன செரோடோனின், எண்டார்பின் ஹார்மோன்கள் சுரப்பை நோனி சீராக்குகிறது. இதனால் நல்ல தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் நம் அன்றாட வாழ்க்கையை சிக்கல் இல்லாமல் நடத்த உதவுகிறது நோனி. நமது உடம்பை பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றிடம் இருந்து நோனி நம்மை பாதுகாக்கிறது. நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்தியை நம் உடம்பில் நோனி அதிகரிக்கிறது.
சர்க்கரை நோய்க்குக் காரணம், கணையம் தனது செயல்பாட்டை குறைத்துக் கொள்வதுதான். அதாவது கணையத்தில் உள்ள லங்கர்ஹான் திட்டுகள் சரிவர செயல்படாத நிலையில் நீரிழிவு நோய் ஆரம்பம் ஆகிறது. நோனி பழச்சாறு கணையத்தின் செயல்பாட்டைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் சர்க்கரை நோய் சிறிது சிறிதாக கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் நோனி பழச்சாறு மருந்தும் அல்ல. மருந்துக்கு மாற்றும் அல்ல. அது ஒரு கலியுக அமிர்தம். உடலின் வீரியத்தையும், செல்களின் செயல் திறனையும் அதிகரித்து, உடம்பை பாதுகாக்க உதவும் ஒரு ஜீவரசம்.
நோனியில் உள்ள சில சத்துக்கள்:
ஆண்டி ஆக்சிடோன்ஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ,பி, இ, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரச்சத்து, மக்னிசியம், பாஸ்பரஸ், குரோமியம், பாண்டோதினிக் அமிலம், மாங்கனிஸ், கார்ப்போஹைட்ரேட் உட்பட நூற்றுக்கும் அதிகமான சத்துகள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோனி பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்வதால்
செல்களின் செயல்திறன் அதிகரிக்கும்
ரத்தம் சுத்தமாகும்
ஜீரண சக்தி அதிகமாகும். குடல் பிரச்னை நீங்கும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இரும்பு சத்து கிடைப்பதால் முடி கொட்டுவது நிற்கும்
சக்கரை நோய் கட்டுப்படும்
முடக்கு வாதம் படிப்படியாக குறையும்
உடலில் தேவையற்ற கொழுப்புக்களை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்தும்
புற்று நோய்க்கிருமிகளை எதிர்க்கும்
ரத்தக் கொதிப்பு நோய் கட்டுப்படும்
தலைவலி, தூக்கமின்மை நீங்கும்
கை, கால் வலி படிப்படியாக குறையும்
இதயம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் கட்டுப்படும்
வயிற்று வலி, வயிற்று புண் ஆகியவற்றை குணப்படுத்தும்
சளி, காசநோய், தோல் நோய்கள், சொறி, சிரங்கு மறையும்
பெண்களுக்கு தீராத பிரச்னை ஏற்படுத்தும் மாதவிடாயை சீராக்கும்.
அலர்ஜி மற்றும் ஆஸ்துமாவை நீக்கும்
நரம்பு மண்டலத்தை சீராக்கி, ரத்த ஓட்டத்தைத் துவண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை நீக்கும்.
நோனி பழச்சாறு சக்திவாய்ந்த adopt gin ஆக செயல்படுகிறது. Adopt gin என்பது, உடல் இயக்கத்தை சீராக வைக்கும் ஒரு பொருள். நம்முடைய உடம்பில், தானாகவே குணமாகும் சக்தி இருக்கிறது.
அதனால்தான் நம் உடம்பில் காயம் ஏற்பட்டால், காயம் தானாகவே ஆறிவிடுகிறது. இந்த சக்தி நம் உடம்பில் இருந்தால், நாம் உட்கொள்ளும் மருந்தும் நன்றாக வேலை செய்யும். இந்த சக்தி இல்லையென்றால் எந்த மருந்தும் நல்ல பலனைத்தராது. நோனி பழச்சாறு, இந்த தானாகவே குணமாகும் சக்தினை வலுப்படுத்துகிறது.
அந்த வகையில், மருந்துகள் நம் உடம்பில் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. நோனிப்பழச்சாறு ஜீரண சக்தியைப் பெருக்குகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
இந்த நுணாம்பழத்தின் சாற்றினை பல நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கின்றன..சென்னையிலும் மற்ற இதர நகரங்களிலும் இந்த பழச்சாறு கிடைக்கின்றது..
எல்லா வளங்களையும் நம் நாடு பெற்றிருந்தாலும் கூட அதனை இன்றைய அவசர உலகில் சரிவர பயன்படுத்தாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது தான் நிதர்சனம்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum