முளைகட்டிய பயறு தோசை
Wed Jul 06, 2016 1:32 am
பச்சை பயறை ஒரு இரவு ஊறப்போட்டு ஒரு வெள்ளைத்துணியில் வைத்து கட்டி வைத்துவிட்டால் மறுநாள் முளை வந்துவிடும். பச்சைபயறு, தட்டப்பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை உள்ளிட்ட நவதானியங்கள் அனைத்தையும் இந்த தோசைக்கு தனியாகவோ, சேர்த்தோ பயன்படுத்தலாம்.
தேவை
முளைகட்டிய பயறு - கால் படி
பச்சரிசி - 200 கிராம், சீரகம் - 50 கிராம்
மிளகு - 35 கிராம், வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியை ஊற வைத்து அதோடு முளைகட்டியப் பயறைச் சேர்த்து அரைத்து உப்புப்போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெலிதாக வெட்டிக் கொள்ளுங்கள். சீரகம், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். மாவை ஊற்றி மேலே வெங்காயம், மிளகுத்தூள், சீரகத்தூளைத் தூவி வேகவிட்டு எடுங்கள். முளைகட்டியப் பயறு தோசை தயார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum