இயேசுவின் பிடியில் மொராக்கோ தேசம்.... ஓர் ஆய்வறிக்கை
Sat Jul 02, 2016 11:25 pm
இயேசுவின் பிடியில் மொராக்கோ தேசம்.... ஓர் ஆய்வறிக்கை
மொரோக்கோ தேசத்தை அசைத்து கொண்டிருக்கும் சுவிஷேசம். கால் மிதிக்கும் தேசம் எல்லாம் என் கர்த்தருக்கு சொந்தமாகும். கண் பார்க்கும் பூமி எல்லாம் கல்வாரி கோடி பறக்கும் என்ற பாடல் என் நினைவிற்கு வந்தது.
நான் சில ஆய்வுகளை படித்து கொண்டிருக்கும் போது மொரோக்கோ தேசத்தை பற்றி எழுதப்பட்ட ஓர் Research Article ஒன்றை படிக்க நேர்ந்தது. (Miller, Duane Alexander (2015). "Believers in Christ from a Muslim Background: A Global Census"). அதில் மொரோக்கோ தேசத்தில் வளர்ந்து வரும் கிறிஸ்தவத்தை பற்றி அறிந்து கொண்டேன். இந்த தேசத்தின் இரும்பு கதவுகளை தேவன் உடைத்து இயேசுவின் சிலுவையின் அன்பை உணர செய்து கொண்டிருக்கிறார். தேவனின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
தொடர்ந்து பல ஆய்வுகளை படித்த பொழுது தேவன் வேகமாய் செயல்பட்டு கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன். இதோ அவைகள் உங்களுக்காக ஜெபத்துடன் பகிர்கிறேன்.
மொரோக்கோ தேசம்.. இஸ்லாமியர்களை அதிகமாய் கொண்டிருக்கும் இந்த தேசத்தில் இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறுபவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற சட்டம் 2013ல் ஏற்க்கபட்டது.
1970வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 700 கிறிஸ்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். இந்த தேசத்தில் யூதர்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். 1999 வருடத்தில் தான் ப்ரோடச்டன்ட் கிறிஸ்தவம் இங்கு நுழைந்தது. அன்று 1,000 கிறிஸ்தவர்கள் என்று குறிக்கப்பட்டவர்கள் இந்த நுழைவிற்கு பிறகு வளர ஆரம்பித்தது. U.S. State Department கணக்க்தேடுப்பின் படி சுமார் 5,000 கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், PEW கணக்கெடுப்பின் படி சுமார் 20,000 கிறிஸ்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டது.
ஆனால் சமீபத்திய கணக்கெடுப்பின் படி குழந்தை பெறுவதின் மூலம் தவிர இஸ்லாம் மதத்தில் இருந்து இயேசுவை ஏற்று கொண்டவர்கள் நிமித்தமாக கிறிஸ்தவம் வேகமாய் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இங்கு சமீபத்தில் கிறிஸ்தவர்கள் மீது போராட்டங்கள் வெடித்தன.
இதற்கு முக்கிய காரணமாக இணையதளங்களும், தொலைகாட்சி நிகழ்சிகளும் உதவி புரிவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் இந்த பகுதி மக்கள். இயேசு கிறிஸ்துவை ஓர் தூதராக மட்டுமே பார்க்கும் இஸ்லாமியர்கள் திடீரென்று இயேசுவை ஏற்று கொள்வதும், ஆலயத்திற்கு சென்று வழிபடுவதும் இவர்களுக்கு புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதனால் புதிதாக ஏற்றுகொண்ட கிறிஸ்தவர்கள் கொலைமிரட்டல்களை சந்தித்து வருகின்றனர்.
தன்னுடைய மனந்திரும்புதலை பற்றி அமின் கூறும் போது தன்னிடம் இயேசு கிறிஸ்து ஓர் காட்டுபகுதியில் தரிசனமானதாகவும் அதனால் கிறிஸ்தவனாய் மாறியதாகவும் கூறுகிறார்.
"நான் இதை என் தந்தையிடம் சொன்ன போது 'நீ என் மகனே கிடையாது. அவர்களிடம் போய் அவர்கள் சாப்பிடுவதை சாப்பிடு என்று வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள்" என்று அமின் கூறினார்.
"Amin said he became aware of Jesus Christ after dreaming that a figure dressed in a white robe approached him in a forest and handed him a Bible.
"When I told my father I had become a Christian he just stared at me without speaking. Then he said: "From now on, you are not my son. Go to those people, let them feed you and give you a home - we'll see who cares for you'," said Amin."
அமின் இப்பொழுது ஊழியர்களின் பராமரிப்பின் இருந்து கொண்டு வேதாகம மொழிபெயர்ப்பை செய்து வருகிறார்.
Zouhail என்பவர் இயேசு கிறிஸ்துவை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டார். பிறகு இவரின் சகோதிரரும் இயேசுவை ஏற்று கொண்டார். இதனால் இவர்கள் குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் இருந்தது. ஆனாலும் Zouhail விடவில்லை. தொடர்ந்து இயேசுவை பற்றி வருகிறார்.
இப்படி பல சாட்சிகள் அன்றாடம் எழுந்த வண்ணம் உள்ளது. 2015 கணக்கெடுப்பின் படி சுமார் 150,000 இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்று கொண்டு ரகசியமாய் வீட்டு கூட்டங்களில் கலந்து கொண்டு இயேசுவை துதித்து வருகின்றனர்.
60 சதவீதமானோர் தனிப்பட்ட ஊழியர்கள் மூலமாக இயேசுவை தெரிந்து கொண்டதாகவும், 30 சதவீதமானோர் தொலைகாட்சியின் மூலம் தெரிந்து கொண்டதாகவும், 10 சதவீதம் மற்ற தொடர்புகள் மூலமாக இயேசுவை ஏற்று கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இங்கு Al-Hayat, Al-Mu’jizah and Sat 7 என்று மூன்று கிறிஸ்தவ தொலைகாட்சி நிறுவனங்கள் உள்ளது.
இந்த தேசம் இன்னமும் சந்திக்கப்பட வேண்டும். தொடர்ந்து ஜெபித்து கொள்ளுங்கள். முன்னாள் இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களை சந்திக்கும் காலத்தில் இருக்கிறோம். இவர்களுக்கு நம்முடைய ஜெபமே முக்கியமான தேவையாகும். உங்கள் ஜெபங்களை இன்னமும் உற்சாகப்படுத்துங்கள். தேவன் உங்களின் ஜெபத்தை கேட்டு அநேகமாயிரம் மக்களை இந்த தேசத்தில் இருந்து எழுப்புவாராக. ஆமென்.
வலைத்தள ஆராதரங்கள்
http://www.timesofmalta.com/articles/view/20081216/world/christian-missionaries-stir-unease-in-north-africa.237457
https://en.wikipedia.org/wiki/Christianity_in_Morocco
https://news.vice.com/article/house-churches-and-silent-masses-the-converted-christians-of-morocco-are-praying-in-secret
http://aleteia.org/2015/03/26/conversion-of-muslims-to-christianity-in-morocco-raises-ire/
http://www.christianitytoday.com/gleanings/2013/may/christian-converts-in-morocco-fear-fatwa-calling-for-their.html
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum