கல்விக் கடனுக்காக மாணவியின் படத்தை ஒட்டிய விவகாரம்: ரூ 1 லட்சம் இழப்பீடு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Sat Jul 02, 2016 8:09 pm
கல்விக் கடனை வசூலிக்க பொது இடத்தில் மாணவியின் புகைப்படத் துடன் ஃபிளெக்ஸ் போர்டு வைத்து மன உளைச்சலை ஏற்படுத்திய தற்காக ஒரு லட்சம் ரூபாய் இழப் பீடு வழங்க சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மகள் நீத்துவின் பொறியி யல் படிப்புக்காக மஞ்சூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் 2009-ல் ரூ.2 லட் சம் கல்விக் கடன் பெற்றார். கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலம் 2014 ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ஜூலை 2014-ல் ஒரு லட்சம் ரூபாய் கடனை மொத்தமாக செலுத்தினார் கிருஷ்ணன்.
ஆனாலும், 2015 ஜனவரியில் கல்விக் கடனை திருப்பிச் செலுத் தச் சொல்லி அழுத்தம் கொடுத்தி ருக்கிறது வங்கி நிர்வாகம். இந்நிலையில் கிருஷ்ணன் உடல் நலக் குறைவால் 1.2.15-ல் உயிரி ழந்தார். இதற்கிடையே கல்விக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கிருஷ்ணன், அவரது மனைவி சரஸ்வதி, மகள் நீத்து இவர்களின் புகைப்படங்களோடு பொது இடங் களில் ஃபிளெக்ஸ் போர்டுகளை வைத்தது வங்கி நிர்வாகம்.
இதையடுத்து, நீத்துவுக்கு ஆதர வாக திரண்ட பொது மக்கள் வங்கிக் கிளையை முற்றுகையிட்டதால் போலீஸ் தலையிட்டு ஃபிளெக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தியது. இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணை யத்துக்கும் கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கம் 6.7.15-ல் கடிதம் எழுதியது.
இதையே வழக்காக எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்ட வங்கிக்கு 6.8.15-ல் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, நீத்துவிடம் வருத் தம் தெரிவித்துக் கொண்டதாக வங்கிக் கிளை நிர்வாகம் மனித உரிமைகள் ஆணையத்துக்கு பதில் கொடுத்தது.
இதற்கு வங்கி தரப்பில் அளித்த பதிலில் சமாதானமடையாத ஆணையம், ‘மாணவி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங் களை பார்க்கையில் வங்கி நிர் வாகம் மிக மோசமாக நடந்திருப் பது தெரிகிறது. கடனை வசூலிக் கும் நோக்கில், கல்விக் கடன் பெற்ற மாணவியை ஒரு குற்றவாளிபோல நடத்தி இருக்கிறது. எனவே மாணவி நீத்து அடைந்த மன உளைச்சலுக்கு இழப்பீடாக வங்கி நிர்வாகம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை ஆறு வார காலத்துக்குள் வழங்குவதுடன் அந்தத் தகவலை ஆணையத்துக்கும் தெரியப் படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum