தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மனித உரிமைகள் என்றால் என்ன? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மனித உரிமைகள் என்றால் என்ன? Empty மனித உரிமைகள் என்றால் என்ன?

Fri Mar 08, 2013 4:29 pm
உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..
உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி
மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின்
சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை,
மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம்.

மனிதர்களுக்கு மனித
உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித
உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும்,
பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம்.

ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த
மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. எல்லா மனிதர்களுக்கும் உரித்தான
அடிப்படை உரிமைகளூம் சுதந்திரமும் மனித உரிமைகள் எனப்படும்.
உரிமை
என்பது எத்தைகயது? சுதந்திரமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் செயற்படும்
அனுமதி உரிமையாகும். ஒருவருக்குத் தனது கைத்தடியை சுழற்ற உரிமை உண்டு ஆனால்
அது மற்றவர்மேல் படாமல் இருக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு.

10-12-1948 இல் ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் உல மனித உரிமைகள்
பிரகடனத்தை வெளியிட்டது. குடியுரிமை, அரசியல், பொருளாதார சமூக உரிமைகளை
அனுபவிக்கும் உரிமை சகலருக்கும் உண்டென்பதி இப் பிரகடனம் வலியுறுத்தியது.
இப்பிரகடனத்திலும் இதன் பிறகு வந்த பல மனித உரிமைகள் தொடர்பான
ஒப்பந்தங்களிலும் கையெழுதிட்ட நாடுகள் இவற்றை மதித்து நடக்கும்
கடப்பாடுடையன.

பல நாடுகள் இதற்கு ஏற்றாப் போல் தமது நாட்டுப்
பாராளமன்றத்தில் சட்டங்களை சமர்ப்பித்து நிறைவேற்றி உள்ளன. பல நாடுகளின்
மனித உரிமை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைக் கழகம். இக் கழகம் 2005ஆம் ஆண்டு உருவாகக்ப் பட்டது. இது மனித
உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் உரிமை உள்ளது.

இது
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் உப அமைப்பாகும். இதன் நிலை ஐக்கிய
நாடுகளின் பாது காப்புச் சபையிலும் கீழானது. இதன் 47 உறுப்பினர்களையும்
பொதுச் சபையின் 191 உறுப்பினர்கள் தெரிவு செய்வர்.

இவர்களின்
பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இது ஜெனீவா நகரில் செயற்படுகிறது. மனித
உரிமகள் கழகம் ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதற்கு எதிராக
நடவடிக்கை எடுக்கும்படி பாது காப்புச் சபையைக் கோரமுடியும்.

பாது
காப்புச் சபை சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக எடுக்க
முடியும்: நாட்டுக்கு எதிராக பொருளாதரத் தடை, பயணத்தடை விதித்தல்.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல். மனித உரிமைகள்
விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த
காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத,
மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல்.மனித உரிமைகள்
விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஓர வஞ்சனையாக (Double standard) நடந்து
கொள்ளுகின்றது “எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே
அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச
உரிமைகளே.
மனித உரிமைகள்” “மனிதனின் மதிப்பிலிருந்தும்,
கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள்
எவராலும் வழங்கப்பட்டதுமல்ல.
எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த
உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ
அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த
ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம்
அளிக்கப்படவில்லை.
மனித உரிமைகளின் வகைகள் மனித உரிமைகள் பொதுவாக
பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை.
அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை.


முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான
முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்
சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில்
எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை.
இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.

1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள்
பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும்,
மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
2. ஏற்றத்தாழ்வுகள்
காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம்,
அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால்
வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை
பெற்றவர்கள்.
3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.
5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.
7.பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.
8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை.
11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.
12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.
14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.
16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு
பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும்
இது பாதுகாக்கப்பட வேண்டும்.
17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு.
எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும்
நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.
20.எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.
21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும்,
பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம்
நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு
உரிமையுண்டு.
22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை.
23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி,
சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள்.
ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும்
உரிமையுண்டு.
24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.


25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக
சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும்
போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
அத்துடன் வேலையின்மை,
இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு
அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும்
சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.
தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.
26.ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.
27.சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும்,
கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும்
பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
28.மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.
29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.
30.இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.
உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..
உனதுரிமை இழக்காதே..! பிறருரிமைப் பறிக்காதே..
மனித உரிமை நாட்டிற்குநாடு,தேசிய இனங்களின் வேறுபாட்டிலும்,
வல்லரசுக்களின் நலன்களின் முக்கியத்துவத்திற்கும் ஏற்றவாறு மாற்றி
அமைக்கலாமா?

அப்படி மாற்றியமைக்கக் கூடியதாக இருக்குமானால்
எதற்காக மனித உரிமை அமைப்புக்கள்? எதற்காக அழிந்துகொண்டிருக்கும்
இனங்ககளிற்காக குரல்கொடுப்பது போன்றவேடம்?


மனித உரிமைகள் என்றால் என்ன? 581884_337644609689123_1757404310_n


நன்றி: முகநூல்...என் இனிய நண்பர்களே
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum