திராவிட இயக்கமும் ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய இயக்கமும்
Fri Jul 01, 2016 6:41 pm
கேள்வி : திராவிட இயக்கம் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை கையாள்கிறதா? பிராமணர்களுக்கு அச்சுறுத்தலாக அது விளங்குகிறதா?
இதற்கு பதில் சொல்லும் முன்பாக சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன்.
ஆர்எஸ்எஸ் மற்றும் திராவிட இயக்கம் ஆகிய இரண்டுமே 1920களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டவை. ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய ஹிந்துத்வா சித்தாந்தத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டது. திராவிட இயக்கம் சமூகநீதி, மேட்டிமை இனவாத எதிர்ப்பு, பகுத்தறிவு கொள்கைகளை மையமாக வைத்து தொடங்கப்பட்டது.
ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே இந்த இரண்டு இயக்கங்களுமே மிகத்தீவிரமாக வளர ஆரம்பித்தன. இந்திய அரசியலில் இவை இரண்டுமே முக்கியப்பங்காற்றின. ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய வரலாற்றில் சிலபல தடவை அதனுடைய தீவிரவாத செயல்களுக்காக தடை செய்யப்பட்டது. மகாத்மா காந்தி கொலையைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் கூட ஒருமுறை ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார். திராவிட இயக்க வரலாற்றில் வன்முறைச் செயல்களுக்காக ஒருமுறை கூட அது தடைசெய்யப்பட்டது கிடையாது. இந்த இரண்டு இயக்கங்களுமே மாநில ஆட்சியை கைப்பற்றின. ஆர்எஸ்எஸ் வடமாநிலங்களிலும் திராவிட கட்சிகள் தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்றின. திராவிட கட்சிகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஐம்பது வருடங்களாக ஆட்சி செய்துவருகின்றன.
திராவிட இயக்கம் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை கையாண்டிருந்தால் , ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் வலுவாகவுள்ள குஜராத்தில் 3000 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டதைப் போல இங்கே தமிழகத்திலும் நடந்திருக்கும் அல்லவா? ஏன் அதுபோல நடக்கவில்லை? ஏனென்றால் திராவிட இயக்கம் மதவாத, சாதியவாத, இனவாத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதல்ல. மாறாக பகுத்தறிவும் சமூகநீதியுமே அதன் அடிப்படை . அதனால் தான் ஒரு பிராமணப் பெண்மணியின் தலைமையைக் கூட ஒரு திராவிடக் கட்சியால் ஏற்று செயல்பட முடிகிறது. அதுவே ஆர்எஸ்எஸ் தலைமைப் பதவிக்கு ஒரு பிராமணரைத் தவிர மற்றவர்களால் ஏன் வரமுடியவில்லை என்ற கேள்வியை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வா வலதுசாரிகள் இடப்பங்கீட்டுக்கு எதிரானவர்கள். ஆனால் திராவிட இயக்கம் பிராமணர்கள் உள்பட அனைவருக்குமான இட ஒதுக்கீட்டைத்தான் இன்றளவும் வலியுறுத்துகிறது. உங்கள் மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள் : நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதைக்கூட முடிவு செய்து அதிகாரம் செய்ய நினைப்பவர்கள் யார்? திராவிட இயக்கமா ஆர்எஸ்எஸ் இந்துத்துவர்களா??
ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ தலைவர்கள் தினந்தோறும் முஸ்லீம்களுக்கும் தலித்களுக்கும் எதிரான பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்கள். அதுபோல திராவிட கட்சிகளின் தலைவர்கள் யாராவது பிராமணர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுப்பதை நீங்கள் கேட்டதுண்டா? தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு பற்றி நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அப்படியிருந்தும் எஸ் வீ சேகர் என்ற பிராமணர் "ஈ வெ ராமசாமி ஒருநாளும் குளிக்கமாட்டார் " என்ற வசனத்தை திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நாடகம் ஒன்றிலேயே பயன்படுத்தினார். தமிழகத்தின் ஒரு திராவிட கட்சித்தலைவரை பார்த்து எச். ராஜா என்கிற பார்ப்பனர் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். திராவிட இயக்கத்தின் பிதாமகரான பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றார். ஐம்பதாண்டுகாலமாக இந்த மண்ணை ஆள்கிற சர்வ வல்லமை படைத்த திராவிட கட்சிகள் அவருக்கெதிராக எந்த வன்முறையாவது கையிலெடுத்தனவா? திராவிட இயக்கமோ கட்சிகளோ ஒருநாளும் வன்முறையை கையிலெடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் எஸ் வீ சேகர் அதிமுகவிலிருந்து வெளியேறிய போது கருணாநிதியிடம் நெருக்கம் காட்டினார். அப்போது அவரே தான் திமுகவில் பிராமணர்களுக்கும் முக்கிய பதவிகள் கிடைக்கும் என்று பேட்டி தந்தார் .
இதெல்லாம் பிராமணர்களுக்கு எதிரான மிரட்டலாக படுகிறதா? ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகவே படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுபோல எப்போதாவது பிராமணர் என்ற சாதிக்காக ஒருத்தர் கொலை செய்யப்பட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அக்லக் என்ற முதியவர் தனக்கு விருப்பமான உணவை சாப்பிட்டார் என்ற காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டாரே அதுபோல எந்த பிராமணராவது அவருக்கு பிடித்த உணவை உண்டார் என்ற காரணத்துக்காக கொலை செய்யப்பட்டதுண்டா சொல்லுங்கள்?
ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ அமைப்புகள் கோயில் கருவறையில் பிராமணர்களைத் தவிர வேறு எவரும் நுழையக்கூடாது என்பதில் இன்றளவும் உறுதியாக உள்ளது . திராவிட இயக்கம் என்ன சொல்கிறது? அனைத்து சாதியினரும் கருவறைக்குள் நுழையவேண்டும் என்று தானே பாடுபடுகிறது?
இதெல்லாம் தெரிந்தும் நீங்கள் இல்லை திராவிட இயக்கம் பார்ப்பனர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சொல்வீர்களேயானால், திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய கொடையான உங்கள் சாதிப்பெயரை பேருக்கு பின்னால் போட்டுக்கொள்ள முடியாத கோபம் உங்களுக்கு இருக்கிறது என்றே அர்த்தம் . அடுத்த சாதியை சேர்ந்தவன் உங்களைப்போல படித்து முன்னுக்கு வருவதையும் உங்களுக்கு சரிசமமாக அமர்வதையும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றே அர்த்தம்.
நீங்கள் ஒருவேளை மோடி ஆதரவாளராக கூட இருக்கக்கூடும் . ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் , மோடி யால் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கார், பண்டித நேரு . யார் வேண்டுமானாலும் பிரதமராக முடியும் என்ற அவர் தந்த அரசியலமைப்பு சட்டம். நேரு வார்த்தெடுத்த ஜனநாயகம். ஆனால் இந்திய நாட்டுக்கே பிரதமராக முடிந்த மோடியால் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியாது . ஏனென்றால் மோடி நாட்டுக்கு வேண்டுமானால் தலைவராக இருக்கமுடியுமே தவிர மனு தர்ம வர்ணாசிரம அடுக்குப்படி அவர் பிராமணருக்குக் கீழே தான்!
இதன்பிறகும் பிராமணர்களுக்கு திராவிட இயக்கத்தால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??
© Thameem Tantra
தமிழில் சுருக்கமாக Sivasankaran Saravanan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum