தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
PART 2 - கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

PART 2 - கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும்  Empty PART 2 - கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும்

Mon May 11, 2015 8:07 am
தமிழ் பேசும் மக்களிடையே கணினி பற்றிய அடிப்படை அறிவை ஊட்டும் முகமாக; பொதுவாக எல்லோராலும் பாவிக்கப் பெறும் Tower/Desktop கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும் பற்றிய சிறு விளக்கங்கள்.
dvd
CD/DVD Drive: சிஸ்ரம் யுனிற்ரில் பொருத்தப் பெற்றிருக்கும் CD/DVD Drive வும் கணினியின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். ஒபரேற்ரிங் சிஸ்ரம் முதல் எல்லா மென் பொருள்களும் CD மூலமே Install செய்யப் பெறுகின்றன. CD/DVD Drive ஆனது சிஸ்ரம் யுனிற்றின் கவரில் அதற்கென ஒதுக்கப் பெற்ற இடத்தில் பொருத்தப் பெறுகின்றது.இதில் IDE, SCSI என பல வித்தியாசமான Type களில் DATA பரிமாற்ற வேகத்தில் வித்தியாசமுள்ளனவாக இருக்கின்றன.
ஆனால் பொதுவாக Desk Top கணினிகளில் IDE இன CD/DVD Drive பாவனையில் உள்ளன. மதபோட்டில் இதற்கென உள்ள Slot ல் பட்டி போன்ற கேபிள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப் பெற்று DATA பரிமாறப் பெறுகின்றது. இதனுள்ளும் CD தட்டைச் சுற்றுவதற்கு ஒரு மோட்டர் இருப்பதனால் 12V கரண்ட் Power Supply Unit ல் இருந்து வழங்கப் பெறுகின்றது. கணினியானது IDE கேபிள் மூலம் இரண்டு CD/DVD Drive களை பொருத்த முடியும். இவறறிற்கென IDE கேபிளில் இரண்டு பொருத்து முனைகள் இருக்கின்றன. இவைகளின் வித்தியாசத்தை கணினி கண்டு கொள்வதற்காக ஒவ்வொரு CD/DVD Drive விலும் உள்ள ஜம்பர்களை அதற்கு ஏற்ற வகையில் Master, என்றும் Slave என்றும் CD/DVD Drive காட்டப் பெறவாறு மாற்றுதல் அவசியம்.
இதனுள்ளும் எழுதவும் வாசிக்கவும் பயன்படும் ஒரு HEAD என அழைக்கப் பெறும் ஒரு உறுப்பும் அமைந்துள்ளது.
தற்பொழுது பல வித்தியாசமான Features வசதிகளு CD/DVD Drive பாவனையில் உள்ளன. அவை CD/DVD Writers, Rewriters, DVD - R/RW, DVD + R/RW இன்னும் பல. ஒரு சாதாரண CD தட்டும், DVD தட்டும் அளவில் ஒன்றாக (விட்டம்-12 செ.மீ) இருந்த போதிலும் அவற்றின் கொள்ளவில் பெரிய வித்தியாசம் உண்டு. DVD ல் பாவிக்கும் cd தட்டானது மற்றையதைப் போல் டிஜிரல் முறையில் பதிவு செய்தாலும் அதன் எழுத்துகளின் அளவு சிறிதாக எழுதப் பெறுவதாலும், இதன் cd தட்டில் உள்ள Tracks ரக்ஸ் என்னும் எழுதும் பகுதி மற்றையதை விட நெருக்கமாக அமைந்து இருப்பதனாலும், DVD யின் cd யில் ஒன்று முதல் 4 படைகளாக எழுதப் பெறுவதாலும், DVD யின் cd தட்டின் கொள்ளளவு அதிகமாக உள்ளது. இந்த காரணத்தினால் தான் ஒரு DVD cd தட்டை சாதாரண CD-Drive வினால் வாசிக்க முடிவதில்லை. இரு Drive விலும் உள்ள HEADS வித்தியாசமான தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது.
உரிய cd தட்டை Tray யில் வைத்து உள்ளே செலுத்துவதற்கு பாவிப்பவர் அந்த Tray கையினால் தள்ளுகின்றனர். இதனால் Tray செலும் பாதையில் இருந்து விலகி உள்ளே செல்ல மறுக்கலாம். Tray யை உள்ளே செலுத்துவதற்கு உரிய பொத்தானை அழுத்தி தானாகவே செல்ல விடுதல் வேண்டும்.

INPT DEVICES:
1. Keyboard
2. Mouse
KEYBOARD:
keyboardஒரு கணினிக்கு தேவையான சில தகவல்களை அவ்வப்போது உட்புகுத்துவதற்கு Input Devices என அழைக்கப் பெறும் Keyboard, Mouse என்பன பாவிக்கப் பெறுகின்றன. Keyboard ஆனது தற்பொழுது வித்தியாசமான வடிவங்களில், வித்தியாசமான செயல்பாட்டுடன் ஒவ்வொருவர் தேவைக்கேற்ப பாவனையில் உள்ளது, அவற்றுள் சாதாரண Keyboard ஆனது ஒரு தட்டச்சு இயந்திரத்தை ஒத்த எழுத்து பொத்தான்களையும், பல விசேஷச செயல்பாட்டினைக் (Enter Key, Ctrl Key, Alt Key, Movement Keys, Break Keys, Esc) கொண்ட பொத்தான்களையும், 12-Function Keys களையும், Numeric Keypad கொண்டதாக இருக்கும்.சாதாரன ஒரு Keyboard ல் 104 Key பொத்தான்கள் அமைந்திருக்கும்.
கணினியிலும் சாதாரண அமைப்பைக் கொண்ட On Screen Keyboard உள்ளது (Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard). இது அனேகமாக பிரயாணங்களின் போது Laptop களில் பாவிக்கப் பெறுகின்றது.
Key பொத்தான்கள் மூலம் எழுத்துகளையு, இலக்கங்களையும் பதிவு செய்ய முடிகின்றது. விசேஷ பொத்தான்களில் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் பதிவு செய்யப்பெற்று இருப்பதனால் அவற்றை அழுத்தியதும் அதன் பிரகாரம் செயல் பெறுகின்றது.
ஒவ்வொரு Keyboard ன் புட்பகுதியில் ஒரு Circuit Board உள்ளது. அதில் சிறிய மைக்கிறோ புரெசெஸ்ரரும் பொருத்தப் பெற்றுள்ளது. ஒரு Key பொத்தான்கள் நாம் அழுத்தியதும் ஒரு சமிஞை Circuit Board க்கு செல்கின்றது. Keyboard ல் உள்ள ஒவ்வொரு பொத்தானுக்கும் வித்தியாசமான சமிஞை உண்டாக்கப் பெறுகின்றது. Circuit Board ஆனது கிடைக்கும் சமிஞைக்கு ஏற்ப இரண்டு எழுத்துகள் Scan Code ஐ Keyboard ன் Port அனுப்பி வைக்கின்றது. Port வைத்து BIOS அதனை வாசித்து அதற்குரிய சிக்னலை CPU க்கு அனுப்பி வைக்கின்றது. CPU அதற்கேற்ப செயல் பெறுகின்றது

2. Mouse
A mouseஇது ஒரு சிறிய எலியின் தோற்றத்தை உடைய ஒரு INPUT Device உறுப்பாகும். இவற்றிலும் பல வித்தியாசமான வடிவங்களில், வித்தியாசமான தொழில் நுட்பதுடன் தேவைக்கு ஏற்ற மாதிரி பாவனையில் உள்ளது. இது கைக்கு அடக்கமாகவும் இரண்டு அல்லது அதற்கு ம்ற்பட்ட பொத்தான்களையும் அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான தொழில்பாட்டையும் கொண்டதாக இருக்கும். இது ஒரு எழுத்தையோ அல்லது ஒரு இடத்தை சுட்டிக் காட்டுவது போல் அம்புக் குறியாகவோ அல்லது நாம் தெரிவு செய்த வேறு அடையாளங்களாவோ மொனிற்ரரில் தோன்றி தன் நிலையைக் காட்டி நிற்கும். இதன் செயல்பாட்டை Control Panel லில் உள்ள Mouse என்னும் Icon ஐ கிளிக்செய்து மாற்றி அமைக்கலாம்.
இவ் உறுப்பானது PS-2 என்னு Connector மூலம் மதபோட்டுடன் தொடர்பு ஏற்படுத்தப் பெற்றுள்ளது. இதன் இயக்கத்திற்கான மிசாரம் மதபோட்டில் இருந்து கிடைக்கின்றது.
இடது பொத்தான்: 
இடது பொத்தானுக்கு பல வித்தியாசமான Function- செயல்கள் உண்டு.
1. இந்த மௌசின் சுட்டியை நாம் எழுதப் பெற்ற எந்த இடத்தில் வைத்து இடது பக்க பொத்தானை அழுத்தி ஒரு கிளிக் செய்தால் Curser உடனே அந்த இடத்திற்கு வந்து நின்று எழுதுவதற்கோ அல்லது எதையாவது புகுத்துவதற்கோ அல்லது அழிப்பதற்கோ ஏற்றதாக அமைகின்றது. 
2. அத்துடன் ஒரு குறிக்கப் பெற்ற சொல்லை அல்லது வசனத்தை Select செய்யவேண்டுமாயின் அந்த இடத்தில் சுட்டியை வைத்து இடது பொத்தானை அமத்திய வண்ணம் தேவையான இடம் வரை அதனை இழுத்துச் சென்று அமர்த்திய இடது பொதானை விட்டால் அவ்வளவு இடமும் Select 
ஆகும்.
3. அல்லது ஒரு ஐகோன் மீது இதன் சுட்டியை நிக்கவைத்து இதன் இடது பொத்தானை அமத்திய வண்ணம் தேவையான இடம் வரை அதனை இழுத்துச் சென்று அமர்த்திய இடது பொதானை விட்டால் அந்த இடத்திலே அந்த ஐகோன் நின்றுவிடும்.
4. திறக்கப் பெற்ற ஒரு விண்டோவில் உள்ள மெனு மீது இதன் சுட்டியை நிக்கவைத்து இதன் இடது பொத்தானை ஒருமுறை அமத்த அதில் பதியப் பெற்றுள்ள மெனு திறபடும். அதில் தேவையானதை கிளிக் செய்ய உரிய செயல் பகுதி திறபடும்.

வலது பொத்தான்: 
இதுவும் முக்கியமான சில செயல்களைச் செய்கின்றது. Desktop ல் உள்ள ஒரு ஐகோன் மீது அல்லது எழுதப் பெற்ற ஒரு இடத்தில் இதன் சுட்டியை நிக்கவைத்து இதன் இடது பொத்தானை அமத்தினால் அந்த ஐகோன்னுக்குரிய செயல்களைச் செய்வதற்கான ஒரு சப்-மெனு தோன்றும். அதல் குறிக்கப் பெற்ற செயல்களின் பிரகாரம் எமக்கு தேவையானவற்றைச் கிளிக் செய்வதன் மூலம் செய்யலாம்.

நடுவில் உள்ள சில்லு:
இதனை முனும் பின்னும் உறுட்டுவதன் மூலம் திறக்கப்பெற்ற ஒரு விண்டோவின் பக்கங்களை மேலும் கீழுமாகமாற்றலம்.


OUTPUT Devices:
1. Monitor - மொனிற்ரர்
2. Printer - பிறின்ரர்
3. Speakers - ஸ்பீக்கர்
4. Modem - மொடெம் இது பெற்றுக் கொள்ளும் போது input ஆகவும் அனுப்பும் போதுOutput ஆகவும் பயன் பெறுகின்றது

Soft Ware என்னும் மென்பொருள் இரண்டு வகைப்படும். 
1. Operating System - Programs; Microsoft Windows, Mac OS X, Linux
2. Application Soft Ware-Programs: Microsoft Office. (word processing, spreadsheets, databases, Web browsers and games

Operating System -ஒபறேற்ரிங் சிஸ்ரம்:
ஒருவருடைய தேவைக்கும், வசதிக்கும் ஏற்றதாகவே சிஸ்ரம் யுனிற் தெரிவு செய்யப் பெறுகின்றது. அதன் தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும் தேவைக்கும் அமைவாகவே ஒபறேற்ரிங் சிஸ்ரம் தெரிவு செய்யப்பெற்று உட்புகுத்தப் பெறுகின்றது. பொதுவாக பல புதிய வசதிகளைக் கொண்ட ஒபறேற்ரிங் சிஸ்ரம் தற்பொழுது பாவனையில் உள்ளன. அவற்றின் தரமும், வேகமும் ஏற்றுக்கொள்ள கூடியதாக சிஸ்ரம் யுனிற் அமைதல் வேண்டும். இல்லையேல் பயனற்றதாகிவிடும். ஒரு கணினியில் ஒபறேற்றிங் சிஸ்ரம் மாத்திரம் உட்புகுத்தப்பெற்றிருந்தால் அக் கணினி பராமரிப்பு வேலைகளை மாத்திரம் செய்யக் கூடியதாக இருக்கும். எந்த Application Software ஐ நாம் உட்புகுத்துகின்றோமோ அந்த Software க் குரிய வேலைகளைச் செய்யக் கூடியதாக இருக்கும்.

ஒரு கல்குலேற்ரர் பல வசதிகளைக் கொண்ட ஒரு ஒபறேற்ரிங் சிஸ்ரம் மூலம் நவீனமாக்கப் பெற்று CPU வை கடமையில் அமர்த்தி தன்னிச்சையாக வேலை செய்விக்கும் கணினியாக மாறியுள்ளது என்றும் கூறலாம்.
கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது. அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.
தனி ஒருவரின் பிரத்தியேக தேவைக்காக உருவாக்கப் பெற்ற ஒபறேற்ரிங் சிஸ்ரமும் (உ.தா. Windows-XP) ; நெற்வேக் (Server-சேவர் ) என்று அழைக்கப் பெறும் பல கணினிகளை பிரதானமான ஒரு கணினியுடன் இணைத்து ஒன்றோடொன்று தொடர்புடன் இயங்கக் கூடியதாக உருவாக்கப்பெற்ற ஒபறேற்ரிங் சிஸ்ரமும் (உ.தா Windows 2003) பாவனையில் உள்ளது. இந்த இரண்டு ஒபறேற்ரிங் சிஸ்ரங்களும் (மென்பொருள்களும்) கணினியை இயக்கி செயல் படவைக்கக் கூடியதாக இருந்த போதிலும் சேவர்-ஒபறேற்ரிங் சிஸ்ரம் பல விஷேச வசதிகளைக் features களை தன்னகத்தே கொண்டுள்ளது.
Application Soft Ware என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளைப் பொறுத்து வேறுபடும் (கடிதம் எழுதுவதற்கு Microsoft Word பாவிப்பதுபோல). ஆனால் அவை கணினியில் பதியப்பெற்றுள்ள ஒப்றேற்ரிங் சிஸ்ரத்துடன் ஒத்து இயங்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். பொதுவாக பழைய ஒப்றேற்ரிங் சிஸ்ரத்திற்கு (Window-95) எழுதப் பெற்ற Application Soft Ware புதிதாக வெளிவந்துள்ள (விஸ்ரா) ஒப்றேற்ரிங் சிஸ்ரத்துடன் சில வேளைகளில் ஒத்துப் போகமாட்டாது.
எனவே Application Soft Ware உட்புகுத்தும் போது ஒப்றேற்ரிங் சிஸ்ரத்திற்கு ஒத்துப் போகுமா? என்பதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். கலை நிகழ்ச்சிக்காக உருவாக்கப் பெற்ற மேடையில் விளையாட்டுப் போட்டி போன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு மேடையில் வசதிக்குறைவுகள் இருப்பது போல் வசதிக்குறைகள் ஏற்பட்டும். அத்துடன் ஒப்றேற்ரிங் சிஸ்ரம் வித்தியாசமான கொம்பனிகளால் வித்தியாசமான பெயருடன் வெளிவருகின்றது. Windows, Unix, என்பன முக்கியமானவை. இவை யாவும் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டன். ஒன்றுக்கு எழுதப்பெற்ற Application Soft Ware மற்றொன்றுக்கு பாவிக்க இயலாது.

கணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்:
இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.
கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.
நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.
சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.
கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?: 
உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.
Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.
இப்போது; கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.
De-fragment - செய்வதால் ஆவது என்ன?
நாம் ஒரு புறொக்கிறாமை உட்புகுத்தும் போது, அல்லது ஒரு பைலை சேமிகும் போது அவை நிரந்தரமாக ஹாட்டிஸ்கில் பதியப்பெறுகின்றது. ஆனால் அவை தொடற்சியாக அல்லது ஒரே ஒழுங்காக உடனடியாக பதியப்பெறுவதில்லை. கணினி நேரத்தை மீதிப்படுத்துவதற்காக வெற்றிடமாக உள்ள இடங்களில் எல்லாம் பதிந்து தொடர்பை வைத்துக் கொள்ளும். நாம் அவற்றைப் பாவிக்க கிளிக் செய்யும் போது அவற்றை நமக்கு பெற்றுத் தருவதற்காக பதிந்த இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்து அவற்றை எமக்கு எடுத்து வருகின்றது. அதனால் அதற்கு சிரமமும் நேரமும் எடுக்கின்றது. இதனால் கணினி தாமதமாக இயங்குவது போல் தோன்றுகின்றது.

Defragment செய்யும் போது அவை ஒரேசீராக தொடற்சியாக ஒழுங்காக பதியப் பெறுகின்றது. அதனால் திரும்பவும் பாவனைக்கு எடுத்து வரும் போது சிரமப்படாது உடனடியாக இயங்குகின்றது. De-fragment செய்வதற்கு நாம் முன்பு ஸ்கான் செய்ய Check Now என்ற பொத்தானை அழுத்தியது போல் இதற்கு Defragment Now என்ற பொத்தானை அழுத்துதல் வேண்டும். இதுவும் ஹாட் டிஸ்கின் நிலைமையைப் பொறுத்து நேரம் எடுத்துக் கொள்ளும். De-fragment மாதமொருமுறை செய்யவேண்டியதில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். சில புதிய ஒப்பறேற்ரிங் சிஸ்ரம் Analyze செய்து (பரிசோதித்து) தற்போது அவசியமா? என்பதைக் கூறும். (Start--> Program--> Accessories --> System Tools--> Disk De-fragementer சென்றும் C Drive வை De-fragement செய்யலாம்).
Disk Clan up-டிஸ்க்கை சுத்தம் செய்யவதற்கு அதாவது தேவை அல்லாத வற்றை அழித்து இடத்தை சேமிக்க Disk Clan up செய்யப்பெறுகின்றது. உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய Disk Clanup மிகவும் அவசியம். Disk Clanup செய்வதற்கு முன்பு கூறியது போல் My computer ரை கிளிக் செய்து Proreties க்கு செல்லுதல் வேண்டும். அங்கே Disk Clanup செய்வதற்கான பொத்தான் உள்ளது. இதை கிளிக் செய்ததும் சிறிது நேரத்தில் ஸ்கான் செய்யப்பெற்று ஒரு விண்டோ தோன்றும். அவற்றுள் சில சரி போடப்பெற்றிருக்கும். அவை அனேகமாக கணினிக்கு தேவையற்றவை, நீங்களாக எதையும் கிளிக் செய்து சரி போடாதீர்கள். அவைகள் கணினி இயங்க தேவையானவைகளாக இருக்கலாம். பின்பு OK என்ற பொத்தானை அழுத்துங்கள் கணினி அவற்றை தானாகவே கிளீன் செய்துவிடும். இதன் போது Free ஆக இருந்த இடம் இன்னும் அதிகரித்திருக்கும். (Start--> Program--> Accessories --> System Tools--> Disk Cleanup சென்றும் C Drive-யை Disk Cleaneup செய்யலாம்) அல்லது அதனை கணினி தன்னிச்சையாக செய்வதற்கு கணினி ஓய்வான நேரத்தில் செய்யக்கூடியதாக Schedule செய்து விடலாம். கணினி தானாகவே குறிக்கப்பெற்ற தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து செய்துவிடும்.
வைரஸ் அழிப்பு மென்பொருளை (install) உட்புகுத்தி பாதுகாப்பாக வைத்திருங்கள். எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போவதற்கு வைரஸ் தாக்கம் முக்கியக் காரணியாகும். எனவே நிபுணர்களின் ஆலோசனைப்படி நல்ல வைரஸ் அழிப்பு மென்பொருட்களை வாங்கி (install) உட்புகுத்துதல் அவசியமாகும். அதன்பின் அதனை உபயோகித்து வைரஸ் ஸ்கேனிங் செய்து வயிரஸ் தாக்கம் இருந்தால் அவறை அழித்து விடல் வேண்டும். இலவசமாக கிடைக்கும் வைரஸ் அழிப்பு மென்பொருட்களை பாவிப்பதில் அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Updates செய்தல்: கணினியில் பதியப்பெற்ற ஒப்பறேற்றிங் சிஸ்ரத்திற்கான Updates அவ்வப்போது உட்புகுத்துங்கள். அல்லது கணினியே அவற்றை தானாகப் பெற்று அவ்வப்போது உட்புகுத்த கணினியை Schedule செய்யுங்கள். அவை கணினிக்கு பாதுகாப்பையும், பல மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கும்.
fபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்:
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் fபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. (XP) மற்றும் விண்டோஸ் விஸ்ரா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் fபயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.

இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவையெல்லாம் கணினியை மந்தமடையச் செதுவிடும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
அத்துடன், டெஸ்க் ரொப்பில்-Desktop அதிகம் கோப்புகளை வைத்திராதீர்கள். அவற்றை வேறு இடத்திற்கு (My Document) மாற்றி விடுங்கள். இப்படிச் செய்வதனால் கணினி ஆரம்பிக்கும் போது ஏற்படும் தாமதம் நிவர்த்தி செய்யப்பெறும்.
பயன்படுத்தாத புரோகிராம்களை அழித்து விடுங்கள்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கொன்ட்ரோல் பனலில் உள்ள ADD or Remove பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.
கணினியை சுத்தமாக வைத்திருத்தல்:கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் சென்று விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும். கணினியை அடுப்பங்கரைக்கு அண்மையாகவோ, தூசு, புகை அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது வெப்பம் உள்ள இடங்களில் வைத்திருத்தலை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
கணினி வேலை செய்யும் நேரங்களில் அதனை (துணியால்) மூடி வைத்தல் ஆகாது. கணினியின் உள் உறுப்புகள் சூடேறாமல் சீரான வெப்பநிலையையை ஏற்படுத்திக் கொடுக்க அதற்கு ஏற்ற வகையில் அதன் வெளிக் கவர் டிசைன் செய்யப் பெற்று சில காற்றாடிகள் உள்ளே இயங்குகின்றன. நாம் கணினியை மூடிவிட்டால் உள் உறுப்புகள் சூடேறி கணினி வேலை செய்யாது நின்றுவிடும்.
கணினியை எப்பொழுதும் திறக்கப்பெற்ற எல்லா கோப்புகளையும் CLOSE செய்த பின் START மெனு மூலம் நிற்பாட்டுதல் அவசியம். சுவிச்சு மூலம் நிற்பாட்டுதல் பல பிரச்சனைகளை உருவாக்கும். திரும்ப ஆரம்பிக்கும் போது நீண்ட நேரம் எடுக்கும்.
அடுத்து மின்சார வினியோகம் கூடிக் குறைந்து காணப்படும் பிரதேசங்களில் வசிப்போர் ஸ்திரமான மின்சரத்தை வழங்கும் (Stabilizer) உபகரண மூலம் கணினியின் மின்சாரத் தொடர்பை எற்படுத்தி கணினிக்கு தேவையான மின்சாரத்தை பெற ஒழுங்கு செய்தல் வேண்டும். இல்லையேல் கணினியின் பல பாகங்கள் பழுதடைந்துவிடும்.
சிறுவர்கள் உபயோகிக்கும் கணினி எப்பொழுதும் எல்லோராலும் கவனிக்கக் கூடிய இடத்தில் இருப்பது நல்லது. இதனால் அவர்கள் தகாத இடங்களுக்கு செல்வதை தடுக்கலாம். இன்ரநெற் உள்ள கணினியை சிறூவர்கள் பாவிக்கும் போது பெரியோகள் அவதானமாக இருத்தல் அவசியம். இன்ரநெற்றால் முன்நேறிய சிறுவர்களும் இருக்கிறார்கள். கெட்டுப்போன சிறுவர்களும் இருக்கிறார்கள்.
நன்றி,
தமிழன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

PART 2 - கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும்  Empty Re: PART 2 - கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும்

Mon May 11, 2015 8:09 am
PART 1 - கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் பேசும் மக்களிடையே கணினி பற்றிய அடிப்படை அறிவை ஊட்டும் முகமாக; பொதுவாக எல்லோராலும் பாவிக்கப் பெறும் Tower/Desktop கணினியின் அமைப்பும் அதன் இயக்கமும் பற்றிய சிறு விளக்கங்கள்.
கணினி என்றால் என்ன?
கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரத்தை; ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.

கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து; எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது. அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.
கணினிகளின் வகைகள்:
எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலவித அளவுகளில் கணினிகள் உருவாக்கப் பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.


அவையாவன:
1. Personal -Computers;
Desktop - Pc
Tower - Pc
Laptop - Pc 
Hand held - Pc
Network - Pc
(PC - Personal Computer - பிரத்தியேக கணினி என பொருள்படும்)

2. Mini - Computers: இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
3. Mainfram - Computers: பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
4. Super - Computers: நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.
இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது. இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware "வன் பொருள்" எனவும்; இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application softwar யும் Soft Ware "மென் பொருள்" எனவும் அழைப்பார்கள்.
இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” "1" என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” "0" என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள். அதன் பின்னரே மனித மொழியை கணினி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணினி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன (C++, Java, Pascal போன்றவை).
Hard Ware: வன் உறுப்பு:
கணியின் Hard Ware என்பது கணினியாக இயங்கி ஒரு செயலை செய்வதற்கு உபயோகமாகும் எல்லா உறுப்புகளும் அடங்கும். விபரமாக கூறுவதாயின் System Unit - சிஸ்ரம் யுனிற், Keyboard - கீபோட், Mouse - மௌயுஸ், Monitor - மொனிற்ரர் , Printer - பிறின்ரர், Scanner - ஸ்கனர் போன்றவை. கணினியின் சிஸ்ரம் யுனிறின் உள் பகுதியில் உள்ள உறுப்புகள் பல நூண்ணிய எலொக்ரொனிக் கருவிகளால் ஆனது என கூறி இருந்தோம். அவை இலகுவில் தாக்கப்பெற்று பழுதடைந்து போகும் என்பதனால் அதனை இரும்புத் தகட்டினால் மூடி வைத்துள்ளனர். ஆனால் அதன் உள் உதிரிப்பாகங்களுடன் தொடர்பைகளை ஏற்படுத்தக் கூடியதாக வெளிப்பக்கத்தே தொடர்புகள் (Ports) அமைந்திருக்கும்.

system unit - சிஸ்ரம் யுனிற்றினுள் அமைந்துள்ள முக்கிய உள் உறுப்புகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.
1. கவர் - Cover
2. பவர்சப்பிளை - Power Supply
3. மத போட் -power supply Mother Board
4. டிஸ்க் றைவ் - Disk Drive
5. ஹாட் றைவ் - Hard Drive என்பன முக்கியமான பெரும் பகுதிகளாகும்.

1. கவர் என்பது பாதுகாப்பு கவசமாக மட்டுமல்லாது, உள்ளுறுப்புகளை தேவைக் கேற்ப பொருத்துவதற்கான இட வசதிகளையும், கணினியின் உள் உறுப்புகளை வெப்பமாகுதலில் இருந்து பாதுகாக்க தேவையான காற்றோட்டத்தை உண்டு பண்ணக் கூடியதாகவும் வடிவமைக்கப் பெற்றுள்ளது.
2. கணினி DC-Direct current கறண்டைப் பாவிப்பதனால்; இத்துடன் இனைக்கப் பெற்றிருக்கும் Power Supply Unit; வீட்டில் கிடைக்கும் Alternate Current - AC கறண்டை (110W or 220W) DC - Direct current கறண்டாக மாற்றி வழங்குகின்றன. இந்த Power Supply Unit கணினிக்குத் தேவையான +3.3V, ± 5V, ±12V DC ஆக மாற்றி கணினியின் உள் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் அதன் தேவைக் கேற்ற அளவுகளில் current டை கூட்டியும் குறைத்தும் பரிமாறுகின்றது. Power Supply Unit ம் சுலபமாக வெப்பம் அடைவதால் அதன் உள் பகுதியை சாதாரண வெப்ப நிலையில் வைத்திருப்பதற்காக வெப்பமான காற்றை வெளியே தள்ளுவதற்கான ஒரு காற்றாட்டியையும் கொண்டுள்ளது. அத்துடன் கணினியின் மின் தொடர்பை முற்றாக நிற்பாட்டுவதற்கான ஒரு சுவிச்சும் Power Supply Unit ல் அமைந்துள்ளது.
கன்ணினியின் உறுப்புகள் வித்தியாசமான மின் அளவை பாவிப்பதால் அவ் உறுப்புகளுக்கு ஏற்படுத்தப் பெறும் மின் தொடர்பும் (Connectors) வித்தியாசமாக அமைந்துள்ளது. Hard Drive வும், Disk Drive வும் 4 பின்களைக் கொண்ட மொலெக்ஸ் என்னும் Connector மூலம் தொடர்பை ஏற்படுத்துகின்றது. மோட்டர் மூலம் இயங்கும் உதிரிப் பாகங்கள் (Hard Drive, Disk Drive, Fan) 12V கறண்டையும், மதபோட்டிற்கு தேவையான 3.3V, 5V ஐ CPU க்கும் digital Circuit க்கும் வழங்குகின்றது.
கணினியை "ஓன்" செவதற்கான சுவிச்சும் கவரில் பொருத்தப் பெற்று மதபோட்டுடன் இணைக்கப் பெற்றுள்ளது. கவரில் பொருத்தப்பெற்றுள்ள Power Supply Unit வித்தியாசமான மின்சார அளவை (Wats) கொண்டுள்ளது (300/350/400/450) என்பதனால் மதபோட்டின் தரத்திற்கும், தேவையான மின்சார அளவையும் பொறுத்து கவர் தெரிவு செய்யப் பெறுகின்றது.
motherboard.jpg
3. மத போட் - Motherboard :
மதபோட்டில் அமைந்துள்ள முக்கிய உறுப்புகள்:
Central Processing Unit - (CPU)
Random Access Memory - (RAM)
Read Only Memory - (ROM)
Expansion Slots
Chipsets என்பன முக்கியமானவை.

ஒரு கணினியின் முழு அமைப்பிற்கும் அத்திவாரமே அதன் மத போட்தான். இதனை Main Board/ Circuit Board எனவும் அழைப்பார்கள். கணினியின் எல்லாப் பாகங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், அவற்றிற்கிடையே நேரடித் தொடர்பினை (Circuits மூலம்)ஏற்படுத்தி அவற்றை ஒருமுகமாக வேலை செய்ய வைப்பதற்கும் ஏற்ற வகையில் மதபோட்டானது நுட்பமாக வடிவமைக்கப்பெற்றுள்ளது.
மதபோட்டில் பல முக்கியமான உறுப்புகள் பொருத்தப் பெற்றுள்ளன. கணினியை வளிநடத்தும் CPU வும், தற்காலிகமாக Application Program களை ஏற்று அதனைப் பாவிப்பதற்க்கான பதிவுகள் செய்ய உபயோகிக்கப்பெறும் RAM நினைவகமும், கணினிக்கு பல விதங்களில் உதவி புரியும் ROM- Bios சிப்புகளும், கணினியின் தொடபு பரிவர்த்தனை நிலையமாக தொளில் புரியும் Chips Set என்னும் சிப்பும் முக்கியமானவை.
இதில் அமைந்துள்ள CPU வானது கணினியின் எல்லாப் பாகங்களையும் தொடர்பு கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளதுடன், RAM உடன் ஆன தொடர்பு அதிவேக Local Bus என்னும் தொடர்பினால் ஏற்படுத்தப் பெற்றுள்ளன.
அத்துடன் சிஸ்ரம் யுனிற்றுக்கு வெளியே இயங்கும் Keyboard - கீபோட், Mouse - மௌயுஸ், Monitor - மொனிற்ரர் , Printer - பிறின்ரர், Scanner - ஸ்கனர் போன்றவைகளையும் மதபோட்டுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக PORTS சிஸ்ரம் யுனிற்றின் பின்புறத்தே பொருத்தப்பெற்றுள்ளன. மதபோட்டுடன் இணைக்கப் பெற்றுள்ள keyboard, Mouse, USB என்பன மதபோட் ஊடாக கறண்டைப் பெற்று இயங்குகின்றது.

ports
ஒரு கணினி ஆரம்பிப்பதற்கு தேவையான உறுப்புகளுடன், பாவனையின் போது பாவிக்கப்பெறும் முக்கியமான சில உறுப்புகளும் நவீன கணினிகளின் மதபோட்டில் ஒன்றிணைக்கப் பெற்றுள்ளன. Network Card, Modem Card, Sound Card, USB ஆகியவற்றின் செயல்கள் யாவும் நவீன கணினிகளில் மதபோட்டுடன் இணைந்துள்ளனர். கணினியில் ஒபறேற்றிங் சிஸ்ரம் பதியப்பெறும் போது அதற்கு தேவையான மிக முக்கிய உறுப்புகளுக்கான டிறைவரையும் மதபோட்டில் பதிந்து வைத்துள்ள சிறு புறோகிறாமில் இருந்து பெற்றுக்கொள்ளும்.
அதன் பின் மதபோட்டில் உள்ள எல்லா உறுப்புகளையும் செயல் படுத்தி உரிய பலனைப்பெற அவற்றை ஒபறேற்ரிங் சிஸ்ரத்திற்க்கு அறிமுகப்படுத்துதல் அவசியம். இல்லையேல் அவை என்ன என்பதை ஒபறேற்றிங் சிஸ்ரம் புரிந்து கொள்ளமாட்டாது. அதற்கான (மதபோட்) டிரைவர் என்னும் மென்பொருளை (மதபோட் உற்பத்தியாளரினால் வழங்கப்ப்டும் CD) உட்புகுத்துதல் வேண்டும்.
இது மதபோட்டில் பொருத்தப் பெற்றுள்ள எல்லா உறுப்புகளையும் ஒபறேற்றிங் சிஸ்ரத்திற்கு அறிமுகம் செய்து அவற்றிக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை செயலுறச் செய்கின்றது. இது போல் எப் பொருளை கணினியில் இணைத்தாலும் அப்பொருளுக்குரிய டிரைவரை உட்புகுத்தி அதனை ஒபறேற்றிங் சிஸ்ரத்திற்கு அறிமுகம் செய்து செயலுறச் செய்தல் அவசியமாகின்றது. ஒபறேற்றிங் சிஸ்ரத்திற்கு அவை என்ன பொருள் என தெரிந்தால்தான் அதனை CPU வால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அத்துடன்; கணினி இயக்குவதற்கு ஒபறேற்றிங் சிஸ்ரம் ஒன்றை உட்புகுத்துதல் வேண்டும். அதற்கு hard drive, CD Drive, keyboard, mouse, memory, Monitor உள்ளிட்ட மற்றைய உறுப்புகள் கணினியில் சரியான முறையில் இயங்கக் கூடியனவாக இருத்தல் அவசியம். அதனால் அவற்றை அப்போது பாவித்துக் கொள்வதற்காக அவற்றின் எழிய வடிவிலான-Standed டிறைவர் மதபோட்டில் உள்ள BIOS ல் உற்பத்தியாளரால் பதியப்பெற்றிருக்கும். இவை சாதாரண பாவிப்பிற்கு உதவிபுரியும், ஆனால் அந்த உறுப்பின் முழுப்பலனையும் அவை வழ்ங்க மாட்டாது. முழுப் பலன்களையும் பெற்றுக் கொள்வதற்கு அவ்வுறுப்பின் உற்பத்தியாளரால் வினியோகிக்கப்பெறும் டிரைவரை உட்புகுத்துதல் அவசியம். ஆனால் நவீன ஒபரேறிங்சிஸ்ரம் அனேகமான உறுப்புகளின் டிறைவரைக் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றின் டிறைவர்கள் உட்புகுத்தப் பெற்றுள்ளனவா என Device Manager பகுதியில் பார்வையிடலாம்.
bios
BIOS – Basic Input Output System:
பையோஸ் எனப்படுவது மதபோட்டில் அமைந்துள்ள ஒரு சிப்ஸ் ஆகும். மதபோட் உற்பத்தியாளரினால் இந்தச் சிப்ஸ்சில ஒரு புறொக்கிறாம் பதியப்பெற்றுள்ளது. இதனை Boot Program என்று அழைப்பார்கள். இந்த BIOS ல் ஒரு கணினி எவ்வாறு boot ஆரம்பிக்க வேண்டும் என்றும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தலும், அப்போது எப்படி அடிப்படைத் தேவையான hardware ரை Load செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலும், POST என்னும் பரிசோதனை செய்வதற்கான அறிவுறுத்தலும் ஒரு சிறு புறோகிராமாக எழுதப் பெற்று பதியப்பெற்றுள்ளன. இந்த BIOS மதபோட்டில் இருக்கும் CMOS-RAM உடன் இணைந்து செயல் படுகின்றது. இந்த CMOS-RAM ல் பாவிப்பவர் தமது பதிவுகளை பதியலாம். இது RAM ஆக இருப்பதனால்; ஒரு பற்றரி மூலம் தொடர்ந்து மின் வழங்கி கணினி ஓவ் செய்த பின்பும் அழியாது பாதுகாக்கப் பெறுகின்றது.

அனேகமான கணினிகளில் பையோஸ் 4 விதமானக செயல்படுகின்றது.
1. POST - கணினி ஆரம்பிக்கும் போது தன்னைத் தானே பரிசோதித்தல்
2. Bootstrap Loader - இதன் மூலம் கனிணி ஒபறேற்றிங் சிஸ்ரம் பதிந்து வைத்துள்ள இடத்தை கண்டுபிடித்து அதனை Load செய்யதல்.
3. BIOS - Software / Drivers - ஒபறேற்றிங் சிஸ்ரத்திற்கு அடிப்படையாக தேவைப்படும் உறுப்புகளின் டிறைவரை அறிமுகம் செய்து அவற்றின் தொடர்பை உண்டாக்கிக் கொடுத்தல்
4. BIOS / CMOS Setup - கணினி பாவிப்பவர் தன் விருப்பத்தின் படி அதில் உள்ள உறுப்புகள் எப்படி இயங்க வேண்டும் என்றும், சரியான திகதி, நேரம் போன்றவற்றை பாதிந்து கொள்ளவும் உள்ள பகுதி.

கணினியை ஓன் செய்ததும் என்ன நடைபெறுகின்றது? POST- Power On Self Test
power supply யில் இருந்து ஒரு சமிச்சையை உருவாகி தயார் என்ற நிலையை மறைய உறுப்புகளிற்கு அறிவிக்கின்றது, உடன் CPU உசாராகி செயல்பட ஆரம்பிகின்றது. முதலில் BIOS, CMOS ஐயும் வாசித்து அதன் பின் RAM ன் முதல் 64kb ல் பதியப்பெற்றவை வாசிக்கமுடியுமா எனவும், பின் மற்றையவைகளும் வாசிக்க முடியுமா என்று பரிசோதித்து பின் I/O bus / controller தொடர்பு கொள்ள முடியுமா எனவும், I/O bus (மொனிற்ரரில்) வீடியோ RAM ஐ தொடர்பு கொண்டு எழுத வாசிக்க முடியுமா எனவும் தன்னைத் தனே பரிசோதிக்கின்றது. இவை அனைத்தும் சரியாக இருந்தால் ஒபறெற்ரிங் சிஸ்ரம் RAM க்கு மாற்றப்பட்டு பாவிப்பவரின் கட்டளைக்காக காத்து நிற்கும். இல்லையேல் எப்பகுதியில் பிழைகள் உள்ளதோ அப்பகுதிக்கு உரிய "பீப்" சத்தத்தை ஏற்படுத்தி மேலும் தொடராது, அவையாவும் சரி செய்யும் வரை காத்திருக்கும். அதன் பின் அவையாவும் சரியாக இயங்கக்கூடியதாக அமைத்தபின் தொடர்ந்து இயங்கி தயார் நிலைக்கு வருகின்றது.

cpuமத்திய செயல்பாட்டு நிலையம் - Central Processing Unit (CPU):
மதபோட்டில் உள்ள சேக்கிற்றுடன் இணைக்கப்பெற்ற ஒரு சிப்பே CPU ஆகும். இது கணினியின் மூளை என அழைக்கப்படும். ஒபறேற்ரிங் சிஸ்ரமும் அப்பிளிகேசன் புறொக்கிறாமும் இணைந்து கூறுவதன் பிரகாரம் கட்டளைகளை ஏற்பதும், அதற்கமைய கட்டளைகளைப் பிறப்பித்து கணினியின் எல்லா உறுப்புகளும் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யவிக்க வழிநடத்தி தன்னிச்சையாக இயங்கி தீர்வு காண்பது CPU வின் முக்கிய பணியாகும். இது பல லட்ச்சம் நுண்ணிய சுவிச்சுகளைக் கொண்டது. இத்துடன் ஒரு மணிக்கூடும் இணைக்கப்பெற்று இருக்கும். இந்த மணிக்கூடு தனது வேகத்தில் CPU வை இயங்க வைக்கின்றது. இதன் வேகம் Megahertz (MHz) ல் அளவிடப்படுகின்றது.

CPU வில் இரண்டு முக்கிய கட்டுப்பாட்டுத்தொகுதிகள் இருக்கின்றன. 
ஒன்று Arithmetic - Logic Unit (ALU) 
மற்றையது Control Unit

கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்ற கணிதமுறைக் கணக்குகளை Arithmetic - Unit யுனிற்றும்; சமன், பெரிது, என்பதிலும் சிறிது போன்ற லொஜிக் சம்பந்தமான வேலைகளைச் செய்வது Logic Unit இவை இரண்டும் இணைந்து Arithmetic-Logic Unit (ALU) விடையை துல்லியமாக கணக்கிடுகின்றது. Control Unit புறொக்கிராமில் கொடுக்கப்பெற்ற அறிவுறுத்தலின் பிரகாரம் செய்ய வேண்டிய வேலைகளை ALU உள்ளிட்ட மற்றைய உறுப்புகளை உந்தி நிறைவேற்றுகின்றது.
CPUவின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் Cache Memory காஸ்-மெமொறி CPU வின் தனிப்பட்ட பாவனைக்காக அமைந்துள்ளது. CPU வின் உள்பகுதியில் காணப்படும் Cache Memory யை Level -1 என்றும் Level -2 என்றும் அழைப்பர். CPU க்கு மெயின் மெமொறிறியில் இருந்து ஒரு தரவை பெறுவதற்க்கோ அல்லது அதில் பதிவதற்கோ எடுக்கும் நேரத்தை விட குறைவான நேரத்தில் Cache Memory ல் இருந்து பெற்றுவிடவோ பதிந்துவிட முடியும். அதனால் CPU தனக்குத் தேவையான, முக்கியமான சில குறிப்புகளை மெயின் மெமொறியில் இருந்து பெற்று Cache Memory ல் பதிந்து வைத்துக் கொள்ளுகின்றது. அதனால் CPU வின் நேரம் மிச்சம் பிடிக்கப்படுகின்றது. CPU க்கு எப்பொழுதாவது எதாவது பெற்றுக்கொள்ளவோ அல்லது பதியவோ தேவை ஏற்படின் அது முதலில் Cache Memory ல் பதிய அல்லது பெற்றுக் கொள்ள முடியுமா என பரீட்சிக்கின்றது. அத்துடன் CPU வில் Registor என அழைக்கப்பெறும் பதிவேடுகளும் அமைந்து அதன் வினைத்திறனை கூட்டுகின்றது. CPUவின் வேகம் என்பது ஒரு செக்கனில் எத்தனை வேலைகளைச் செய்யும் என்பதைக் குறிப்பதாகும்.heat sink
CPU வேகமாக இயங்குவதனால் சில வினாடிகளில் வெப்பம் அடைந்து செயலற்று விடுகின்றது. அதனால் அதில் உண்டாகும் வெப்பம் கடத்திகள் மூலமும் Fan காத்தாட்டிகள் மூலமும் கடத்தப் பெற்று சீரான வெப்ப நிலையை உருவாக்கி சீராக இயங்க வழி சமைத்துள்ளனர். CPU வில் உண்டாகும் வெப்பம் அலுமினியத்தினால் ஆன Heat Sink என்னும் கடத்தியை அதன்மீது பொருத்தி வெப்பத்தை உட்கிரகிக்கச் செய்து அதனை Fan மூலம் குளிரடையச் செய்கிறார்கள்.
ram
Random Access Memory (RAM):
ஒரு கணினியின் திறனையும் வேகத்ததையும் நிர்ணயிக்கும் காரணிகளில் RAM முக்கியமானதாகும். RAM தெரிவு செய்யப்படும் போது அதன் தொழில் நுட்பம், வேகம், கொள்ளளவு கவனிக்கப்படுதல் வேண்டும். RAM என்பது தற்காலிகமாக நாம் பாவிக்க எடுத்த ஒரு கொள்ளிடம். இதில் பதியப்பெற்றவை மின்னோட்டம் தடைபட்டால் அல்லது கணினி நிற்பாட்டப்பெற்றால் அழிந்து போவிடும்.

நிரந்தரமாக சேமித்து வைத்த பையில் ஒன்றை திறக்கும் போது; அதன் பிரதி தற்காலிகமாக RAM ல் திறக்கப்படுகின்றது. அல்லது முன்பே பதிந்துள்ள ஒரு புறோகிறாமை (ஒரு கடிதம் எழுத Microsoft Word) திறக்கும் போது அது RAM மை தற்காலிகமாக பயன்படுத்தி அதிலே திறக்கின்றது. அதன் பின் நாம் அதில் பதியப்பெறும் (எழுதியவை) எல்லாம் அதிலே பதியப்படுகின்றது. அவறை நாம் நிரந்தர வைப் பேட்டில் (Hard Drive) ல் நிரந்தரமாக சேமித்து வைக்காது விட்டால் திரும்ப அதனை பாவிக்முடியாது அழிந்து போய்விடும். எனவே பதியப்பெற்றவை யாவும் தற்காலிகமானவை Volatile. ஆனால் நிரந்தர வைப்பேட்டில் சேமித்து வைக்கப்பெற்றவை நிரந்தரமானவை. நாங்களாக அழித்தாலொழிய அவை கணினி ஓவ் செய்வதால் அழிய மாட்டாது.. ஆனால் RAM உள்ளவை யாவும் கணினி ஓவ் செததும் எல்லாம் அழிந்து போய்விடும். அதிக நேரம் எடுத்து பதியப்பெறும் பதிவுகள் சில வேளைகளில் மிசாரத்துண்டிற்பினால் அழிந்துபோக சந்தற்பங்கள் உள்ளன. அதனால் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிற்குஒருமுறையாவது எழுதியவற்றை செமித்தல் அவசியம் என அறிவுறுத்தப்பெற்றுள்ளது.
நாம் திறந்த பைல் அல்லது புறோகிறாம் எமது கணினில் உள்ள RAM ன் கொள்ளவை விட பெரியதாக இருப்பின் கணினி அதன் ஒருபகுதியை Hard Drive ல் வைத்துக் கொள்ளும். அதன் பின் நாம் பதியும் பதுவும் மேலும் அதிகமாகி Hard Drive ல் பதிந்து கோள்ளும். Hard Drive ல் தற்காலிக RAMமாக ஒதுக்கப்பெற்ற இடத்தை SWAP file அல்லது virtual memory என அழைப்பார்கள்). அதனால் CPU அங்கும் இங்கும் அலைந்து திரிய நேரிடுவதால் கணினி மந்தகதியாகிறது. கணினி போதிய RAM மைப் பெற்றிருந்தால் வேகத்தில் வித்தியாசம் ஏற்படாது. எனவே கணினியின் வேகத்தில் RAM ன் கொள்ளளவு மிக முக்கியமாகின்றது.

chipsets
Chipsets:
மதபோட்டில் அமைந்துள்ள சிப்ச்செற் தொகுதி மிகவும் முக்கியமானதாகும். இதுவே மதபோட்டுடன் இணைக்கப்பபெற்றிருக்கும் எல்லாப் பகுதிகளிற்கும் இடையேயான தகவல் பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டுத் தொகுதியாக செயல்படுகின்றது. எனவே மதபோட்டுடன் இணைக்கப்பெறும் பகுதிகள் திறனாலும், தரத்தாலும், தொழில் நுட்பத்தினாலும் கூடியனவாக இருந்தாலும், மதபோட்டில் உள்ள சிப்ச்செற் அவற்றிற்கு ஏற்றதாக அமையாவிட்டால் பூரண ப்லன் கிடைக்காது போய்விடும். 
ஆதலால், இணைக்கப்பெறும் உறுப்புகளின் தரம், திறன், தொழில்நுட்பம் என்பவற்றிற்கு இணையாக செயல்படக்கூடிய தொழில்நுட்பம் நிறைந்ததாக மதபோட் அமைதல் வேண்டும். அல்லது மதபோட்டிற்கு நிகரான உறுப்புகள் பொருத்தப்பெறல் வேண்டும்.

Expansion Slots:
Expansion Slots என்பது கணினியில் மேலதிக வசதிகளைச் செய்வதற்காக அவையை பொருத்தி மதபோட்டுடன் தொடர்பு படுத்த உள்ள இடவசதியே. இவைகளில் பல வித்தியாசமான அளவுகளில் வித்தியாசமான தொழில் நுட்பதுடன், வித்தியாசமான வேகதில் உள்ள Expansion Slots அமைந்திருக்கும். இவற்றின் மூலம் பல வசதிகளைக்கொண்ட Internal/External உறுப்புகளை மதபோட்டுடன் இணைத்து செயல்பட வைக்க முடிகின்றது. மதபோட்டில் அமிந்துள்ள Expansion Slots பலவித வித்தியாசமான தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. அதனால் அவ்ற்றின் வடிவமும், அதனில் பொருத்தப்பெறும் காட்டும் வித்தியாசமான பொருத்து முனைகளைக் கொண்டுள்ளன. 
AGP - Accelerated Graphics Port
PCI - Peripheral Component Interconnet
PCI-x
PCIe என பல வகைப்படும்.

இவற்றுள் AGP வீடியோவுக்கான காட் மாத்திரம் பாவிக்கப்படும். இது மொனிற்ருடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடியது
PCI யில் எல்லாவகையான காட்டும் பாவிக்கக்கூடியதாக இருக்கும். அதனால், Network, Modem, Sound, USB போன்றவற்றின் வசதிகளை மேலும் கூட்டிக் கொள்ள முடியும்.


hard disk
Hard Drive:
Hard Drive ஆனது சிஸ்ரம்போட்டின் உள்பகுதியில் பொருத்தப் பெற்றிருக்கும். சில கணினிகளில் இரண்டு ஹாட் டிஸ்க்கும் அமைந்திருக்கும். இந்த ஹாட் டிஸ்க் ஆனது கணினியின் பிரதான வைப்பகமாக செயல்படுகின்றது. இங்குதான் கணினி இயங்குவதற்கு தேவையான ஒபரேற்றிங் சிஸ்ரம், அப்பிளிகேசன் புரோக்கிறாமும், எமது பிரத்தியேக கோப்புகளும் பதியப்பெற்று பாதுகாக்கப் பெறுகின்றன. அவையாவும் அவ்வப்போது தேவைக்கேற்ப திறக்கப்பெற்று பாவிக்கப்பெறுகின்றன. இவற்றில் உள்ளவற்றை பெற்றுக் கொள்வதற்கு கணினியில் உள்ள CPU இவற்றுடன் இனைக்கப்பெற்ற Control Board ற்கு சமிஞை மூலம் அறிவுறுத்துகின்றது. அதன் பிரகாரம் Control Board இயங்கி செயல் பெறுகின்றது.

இவற்றிற்கான இணைப்பு IDE கேபிள் மூலமாகவும், SATA சீரியல் சற்றா கேபி்ள் மூலமாகவும் மதபோட்ல் அதற்கென உள்ள Slot ல் இணைக்கப் பெற்று DATA பரிமாற்றத்திற்கான தொடர்பு ஏற்படுத்தப் பெறுகின்றது. IDE கேபிளில் இரண்டு பொருத்து முனைகள் இருக்கின்றன. இவைகளின் வித்தியாசத்தை கணினி கண்டு கொள்வதற்காக ஒவ்வொரு Hard Disk விலும் உள்ள ஜம்பர்களை அதற்கு ஏற்ற வகையில் Master, என்றும் Slave என்றும் அவற்றில் காட்டப் பெறவாறு மாற்றி இணைத்தல் அவசியம். இவை 12 வோற்ஸ் மின்சாரத்தை Power Supply Unit ல் இருந்து நேரடியாகப் பெற்று இயங்குகின்றது.
ஒரு ஹாட்டிஸ்கினுள் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை உடைய 3.5 அன்குல விட்டமுள்ள வட்டமான லோகத் தகடுகளைக் (metalic platters) கொண்டிருக்கும். இந்த லோகத் தகட்டின் மேல் காந்த சக்தி கொண்ட அயன் ஒக்சயிட் (Iron Oxide) முலாம் பூசப் பெற்றிருக்கும். இவற்றில் தான் பதிவுகள் பதியப் பெறுகின்றன. பதிவுகள் செய்யப்பெறும் பொழுதும், வாசிக்கப் பெறும் பொழுதும் இந்த பிளற்றேஸ் நிமிடத்திற்கு 7200 (வினாடிக்கு 120) தடவைகள் சுழருகின்றன.
இவற்றின் மேல் பதிவு செய்யவும், அவற்றை வாசிக்கவும் ஒவ்வொரு தகட்டிற்கும் ஓவ்வொரு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு ஹெட்ஸ் (Heads) இணைக்கப் பெற்றிருக்கும். இந்த ஹெட்ஸ்சை தாங்கியவாறு Access Arm என்னும் உறுப்பு உள்ளது. இந்த உறுப்பானது பிளற்ரரில் பதிந்தவற்றை ஹெட் வாசிக்கும் போதும் எழுதும் போதும் ஹெட்ஸ்சை பிளற்றேஸ்களில் தொட விடாது 0.005 mm உயரத்தில் தாங்கியவாறு பிடித்திருக்கின்றது. இதனால் ஹெட்ஸ் ஆனது சுழலும் பிளற்றேஸ் மீது பறப்பதுபோல் தோற்றமளிக்கும்.
platters களில் வட்டம் வட்டமாக Tracks இருக்கும். அவை எல்லாம் Sectors களாக பிரிக்கப் பெற்றுள்ளன. இவை எமது சாதாரண கண்ணுக்கு புலப்படாது. இடைப்ப்ட்ட பகுதி Cylinder எனபடும். Hard Drive தரத்திற்கு ஏற்றவாறு Tracks ன் எண்ணிக்கை இருக்கும். Tracks எல்லாம் Sectors ஆக பிரிக்கப் பெற்றுள்ளன. கணினி Disk Format செயும் போது வெளியில் இருக்கும் Cylinder ஐ தனது சொந்த பாவிற்பிற்காக System Area என ஒதுக்கி வைத்துக் கொள்ளும். மிகுதியாக உள்ள பகுதி DATA AREA என அழைக்கப் பெறும். இங்குதான் Program களும் DATA களும் பதிந்து வைக்கப் பெறுகின்றன. platters யாவும் Tracks, Sectors ஆக பிரிக்கப் பெற்றிருந்தாலும் கணினி அதனை Clusters களாகவே வாசிக்கின்றன. Clusters என்பது கணினியால் கணிக்கப் பெறுபவை. ஒரு Cluster ல் பல Sectors அடங்கும்.
பிளற்றேஸ்களிற்கும் ஹெட்ஸ்க்கும் இடையில் ஏதாவது தூசு, புகை, கை அடையாளங்கள் போன்றவை இருந்தால் வாசிக்க முடியாது போகின்றது. அதனால் அவ்ற்றில் பதியப் பெற்றவற்றை திரும்ப பெற முடியாது போய்விடும் என்பதனால் இவையாவும் இரும்புக் தகட்டால் மூடப்பெற்று சீல் செய்யப்பெற்றுள்ளது.
ஒரு Hard Disk ல் பதிவுகள் செவதற்கு நாம் அதை ஒழுங்கு படுத்துதல் அவசியமாகின்றது. ஒரு களஞ்சிய அறையில் நாம் பொருட்களை வைப்பதற்கு அதனை தேவைக்கேற்ப பிரித்து றாக்கைகள் அடித்து ஒழுங்குகள் செவது போல் இதுவும் அமைகின்றது. ஒரு Hard Disk வை நாம் அதன் அளவிற்கு தகுந்தாற் போல் ஒன்றாகவும் அல்லது பலவாகவும் வைத்திருக்க பல வசதிகள் கணினில் உள்ளன. அவற்றை நாம் ஒன்றிற்கு மேல் பிரிப்பதற்கு பாட்டிசன் Partition என்று அழைப்பார்கள். Partition செய்வதற்கு கணினியில் ஒபறேற்ரிங் சிஸ்ரம் புகுத்தப்பெறும் போது சந்தற்பம் தரப்படுகின்றது. அப்போது நாம் அதனை பாட்டிசன் செய்யலாம். பாட்டிசன் செய்வதற்கு முதலில் நாம் ஹாட்றைவைவின் உள்ள ஒரு பகுதியை Primary Partition என பிரித்துக் கொள்ளுதல் வேண்டும். அதன் பின் எஞ்சியுள்ள பகுதி Extended Partition என அழைக்கப் பெறும். இந்த Extended Partition னை மேலும் பல Logical Partition களாக பிரிக்க முடியும். அவையாவும் My Computer என்ற பகுதியில் C: ஆக Primary Partition பாட்டிசனும், CD/DVD Drive- D: ஆகவும், அதனைத் தொடர்ந்து Logical Partitions E:, F:, ஆகவும் காணப்படும்.Floppy Drive இருந்தால் A: ஆகவும் இருக்கும்.
இந்த பாட்டிசன்கள் யாவும் Format செய்யப் பெற்ற பின்பே அவற்றில் Data பதிவு செய்ய முடியும். Hard Disk ல் கணினியானது வித்தியாசமான போமற்றுகளில் Data பதிவு செய்கின்றது. FAT32, NTFS என்பன முக்கியமானவை. NTFS மேலதிக இடவசதிகளையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தக் கூடியவை.
இயங்கிக் கொண்டிருக்கும் போது ஒருகணினியின் SYSTEM Partition உள்ள பாட்டிசனைத் தவிர மற்றைய Logical Partitions பாட்டிசன் எல்லாம் கணினயின் ஒபரேற்றிங் சிஸ்ரத்தில் உள்ள Utilities ஐ பாவித்து Format செய்து கொள்ள முடியும்.உதாரணமாக Window XP ஒபரேற்றிங் சிஸ்ரம் உட்புகுத்தப் பெற்ற கணினியில் My Computer எனற Icon ஐ றைற் கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு மெனுத் தோன்றும், அதில் Manage என்பதை கிளிக் செய்யுங்கள். அப்போதுஇன்னொருவிண்டோதோன்றும, அதன் இடப்பக்கதில் (எங்களுக்கு வலப்பக்கமாக) இருப்பதில் Storage என்பதை இருமுறை கிளிக் செய்யுங்கள். அப்போது இன்னொருபுதியவிண்டோதோன்றும், அதில் Disk Management (Local) என்பதை இருமுறை கிளிக்செய்யுங்கள. இப்போது உங்கள் கணினியில் உள்ள எல்லா ஹாட் டிஸ்க்குகளும், டிஸ்க் றைவும் முழு விபரத்துடன் காட்சி தரும். இதில் உங்கள் Hard Disk ல் Partition செய்யாது Extended Partition ஆக இடம் இருந்தால் பாட்டிசன் செய்ய முடியும். Partition செய்வதற்கும், Format செய்வதற்கும் அந்த இடத்தில் றைற்கிளிக் செய்து வரும் மெனுவில் உள்ளதில் எதையும் செய்யக் கூடியதாக இருக்கும். Format செய்வது அந்தப் பாடிசனில் உள்ள எல்லாவற்றையும் அழித்துவிடும் என்பதை மனதில் வைத்து; அதில் உள்ள தேவையானவற்றை கொப்பி செய்து வேறு இடத்தில் சேமித்து வைத்தபின் Format செய்யலாம்.
நன்றி,
தமிழன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum