நீதிமன்றத்தில் கதறிய பாண்டே!
Sat Jun 18, 2016 10:58 am
நீதிமன்றத்தில் கதறிய பாண்டே!
பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த பாண்டே கடந்த 13.6.2016 அன்று திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகத் தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்று நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேரிடையாக ஆஜரானார் ரங்கராஜ் பாண்டே!
பாண்டேவைப் பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கிலோ கணக்கில் டிவியில் அறிவுரை சொல்றீங்களே நீங்கள் கடந்த ஆறு வாய்தாக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே ஏன்? என்று கேட்டதற்கு எனக்கு உடல்நிலை சரியில்லை என்று குண்டைத் தூக்கி போட அதைக் கேட்டு சிரித்த நீதிபதி நான் அன்றாடம் டிவியில உங்களை பார்க்கிறேனே என்றவுடன் அசடு வழிந்தார் பாண்டே!
அடுத்த விசாரணை நாளன்று உங்களின் எம்டி பாலசுப்பிரமணிய ஆதித்தனாருடன் ஆஜராக வேண்டும் என்றார். அதற்கு பாண்டே எங்கள் எம்டி எந்த தவறும் செய்யவில்லை என்றார். கடுப்பான நீதிபதி இது நீதிமன்றம் இங்கு கேள்வி நான்தான் கேட்கவேண்டும் என்றதற்கு பாண்டே எனக்கு வீரமணி அய்யாவைத் தெரியும் சுபவீ அண்ணனே தெரியும் என்று கூறினார். என்னத்த சொல்ல அடுத்த விசாரணை 27.6.2016 அன்றைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி!
தாம்பரம் மோகன்
தாம்பரம் மோகன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum