கேசரி கேசரி ... கேசரி
Thu Jun 16, 2016 9:40 am
கேசரி
தேவையான பொருட்கள்
ரவை - 250g
சீனி - 250g
நெய் - 100 ml
தண்ணீர் - 4கப்
பிளம்ஸ், முந்திரிப்பருப்பு - 100g
ஏலக்காய்த்தூள் , கேசரிப்பவுடர் - சிறிதளவு
செய்முறை
ரவையை நன்றாக வறுத்து வைக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து சட்டியில் கேசரிப்பவுடர், ஏலக்காய்த்தூள் , 4கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும் சிறிது சிறிதாக ரவையை சேர்க்கவும்.
ரவை பாதி வெந்ததும் சீனி சேர்த்து நன்கு சேர்த்து கிளறவும்.
சீனியை சேர்க்க நீர்த்தன்மை தோன்றும் அதனை நன்றாக கிளறி சேர்க்கவும்.
பின்னர் நெய் சேர்த்து நெய்யில் நன்றாக வேகவிடவும்.
பின்னர் முந்திரிப்பருப்பு, பிளம்ஸ் சேர்க்கவும்.
இறுகி வரும் போது நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum